அழுக்கில் தொடங்கும் வியாதி தெரியுமா?

நகச்சுற்றுக்கு அறிமுகம் தேவை யில்லை... நம்மில் எல்லோரும் அந்தப் பிரச்னையை கடந்து தான் வந்திருப்போம். 
அழுக்கில் தொடங்கும் வியாதி


சூலாயுதத்தில் குத்தப் பட்டிருப்பது போல நகச்சுற்று ஏற்பட்டுள்ள விரல்களிலும் எலுமிச்சைப் பழத்தைக் குத்திக் கொள்வதே நாம் அறிந்த தீர்வு. 

விரல்களில் மருதாணி வைத்துக் கொள்ளுதல் கூட நகச்சுற்றைப் போக்கும் என்கிறது நாட்டு மருத்துவம். நகச்சுற்று ஏன் வருகிறது? 

இதற்கு முறையான தீர்வு என்ன? எலுமிச்சைப்பழம் குத்துவது எதற்காக? இந்தக் கேள்விகளுக் கான தெளிவும் நம்மில் பலரிடம் இல்லை. 
ரெடிமேட் உணவு ஏற்படுத்தும் பாதிப்புகள் !
அதை விளக்கும் முயற்சியாக தொற்று நோய் மருத்துவர் ராம சுப்ரமணியத்தை அணுகினோம்...

‘‘நகத்தைச் சுற்றி ஏற்படும் பூஞ்சை மற்றும் கிருமித் தொற்றே நகச்சுற்று. இது ஏற்படும் போது நகத்தைச் சுற்றிலும் சீழ் கோர்த்து வலி ஏற்படுத்தும். 

நகம் வெட்டும் போது நகத்துக்கும் சதைக்கும் இடையில் இருக்கும் இணைப்புச் சதையில் ஏற்படும் சிதைவு நாள்பட நாள்பட நகச்சுற்றாக மாறி விடும். 

நகத்துக்கு வெளியே இருக்கும் பாக்டீரியா போன்ற கிருமிகள் உள்ளுக்குள் நுழைந்து விடுவதன் மூலம் கிருமித் தொற்றுக்கு ஆளாகும். 


அது நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக சீழ் கோர்க்க ஆரம்பித்து, ஒரு கட்டத்தில் நகச்சுற்றாக மாறி விடுகிறது.

நகச்சுற்று என்பது யாருக்கு வேண்டு மானாலும் எக்காலத்திலும் ஏற்படும் பொதுவான பிரச்னை தான். 

இதனால் பயப்படும் அளவுக்கு பெரிய பாதிப்புகள் இல்லை யென்றாலும், விரல் வீக்கத்தினால் ஏற்படும் வலி நம் அன்றாட இயல்பு வாழ்க்கையை பாதிக்கும். 

அதனால், இப்பிரச்னை குறித்து அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம். நகச்சுற்று ஏற்பட்டவுடன் எலுமிச்சைப் பழம் குத்திக் கொள்கிற பழக்கம் பரவலாக இருக்கிறது. 
நகச்சுற்று


அப்படிக் குத்திக் கொள்வதன் மூலம் விரல்களில் வலி ஏற்படாமல் இருக்குமே தவிர, நிரந்தரத் தீர்வாக அமையாது.

நகச்சுற்று ஏற்பட்டவுடன் சீழ் கோர்த்திருப்ப தால் விரலில் வீக்கம் இருக்கும்.

நாம் அதைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டால், குறிப்பிட்ட காலத்தில் வீக்கம் வெடித்து சீழ் வெளியாகி விடும்.

அந்த நிலைக்குச் செல்வதை விட மருத்துவத் தீர்வை நாடுவதே சிறந்தது. 

விரலில் இருக்கும் சீழை ஒட்டு மொத்தமாக வெளியேற்றி விடுதலே இதற்கான தீர்வு. சிலர் ஆன்டி பயாடிக் பயன்படுத்துவர். ஆனால், சீழை வெளியேற்றி விட்டாலே பிரச்னை முடிந்து விடும். 
அதைத் தாண்டிய சிகிச்சை எதுவும் தேவையில்லை. நகங்கள் வளரும் போது இடுக்குகளில் அழுக்குகள் தேங்க வாய்ப்பிருக்கிறது. 

அவ்வப்போது இணைப்புச் சதைக்கு பாதிப்பில்லாத வகையில் நகங்களை வெட்டிக் கொள்ள வேண்டும். பாக்டீரியா, பூஞ்சைகள் தேங்காத வண்ணம் அடிக்கடி கை கழுவி சுத்தமாக இருக்க வேண்டியது மிக அவசியம்.
Tags: