அரபு நாட்டின் மந்தி பிரியாணி - விலை ரூ.12,000 ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

அரபு நாட்டின் மந்தி பிரியாணி - விலை ரூ.12,000 !

Subscribe via Email

பிரியாணிப் பிரியர் களுக்கு ஒரு ருசியான செய்தி. அரேபிய நாட்டுப் பாரம்பர்ய உணவு வகையைச் சேர்ந்தது மந்தி (MANDI) பிரியாணி'. 
மந்தி பிரியாணி - Mandi Biryani


தனிச்சிறப்பு வாய்ந்த இந்தப் பிரியாணி அரபு நாடுகளின் விருந்திலும் நட்சத்திர ஹோட்டல் களிலும் முக்கிய இடம் பிடிக்கிறது. அங்கு செல்லும் பெரும் பாலானோர் இந்தப் பிரியாணியைச் சுவைக்காமல் திரும்புவ தில்லை. 

சரி, இந்தப் பிரியாணியில் அப்படி யென்ன ஸ்பெஷல் என்கிறீர்களா? அதை சமைப்ப வரிடமே கேட்போம்.

புதுவை மாநிலம் காரைக்காலைச் சேர்ந்த ஹசன், டிப்ளமோ கேட்டரிங் படித்துவிட்டு மஸ்கட், குவைத், சவுதி, துபாய் என பல வளைகுடா நாடுகளின் பல நட்சத்திர ஹோட்டல் களிலும் 25 ஆண்டுகள் செஃப் ஆக பணியாற்றியவர். 

மந்தி பிரியாணி உள்ளிட்ட பல அரேபிய உணவுகளைச் சமைப்பதில் கில்லாடி. தற்போது காரைக்காலில் தன் நண்பரோடு இணைந்து சொந்தமாக உணவகம் நடத்தி வருகிறார். அவரிடம் மந்தி பிரியாணி யின் செய்முறை விளக்கம் குறித்துக் கேட்டோம்.

மந்தி பிரியாணியைப் பொறுத்த வரை, ஒரு முழு ஆட்டின் தலையை வெட்டி, தோலை உரித்து, குடலை நீக்கி முழுமையாக சுத்தப் படுத்தி விடுவோம். 

அதன் பின் அரேபிய மசாலாப் பொருள்களை அரைத்து, ஆட்டின் உடல் முழுதும் பூசி ஒரு மணி நேரம் ஊற விடவும். இந்த மசாலாவை தேவையான அளவு பிரியாணி அரிசியுட னும் கலக்க வேண்டும். 


பிறகு குடல் நீக்கிய ஆட்டின் வயிற்றுப் பகுதியில் மசாலா கலந்த பிரியாணி அரிசியை வைக்கிறோம். 

இதற்கென ஸ்பெஷலாக தயாரிக்கப் பட்ட ஸ்டாண்டில் ஆட்டை நின்ற நிலையில் வைத்து, தரையில் குழி செய்து உருவாக்கிய நெருப்பு அடுப்பில் இறக்க வேண்டும். 

இதன் மேல் மூடி போட்டு, அதன் மேலே மண்ணால் பூசி விடுவோம். ஆட்டின் உடம்பில் உள்ள நீரிலேயே அரிசி வெந்து பிரியாணி தயாராகி விடும்.

வழக்கமாக நாம் சாப்பிடும் பிரியாணியின் சுவையி லிருந்து முற்றிலும் மாறு பட்டதாக இருக்கும் மந்தி பிரியாணி. முழு ஆடு கொண்டு செய்யப்படும் இந்த மந்தி பிரியாணியை சுமார் 20 பேர் சாப்பிடலாம். 

இன்றைக்கு இதன் விலை ரூ.12,000. முன்கூட்டி ஆர்டரின் பேரில்தான் இதை தயாரித்து தரமுடியும்" என்கிறார். விதவிதமான பிரியாணி ரசிகர் களுக்கு மந்தி பிரியாணி ஒரு பெரு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

No comments

Copyright © 2020 www.ethanthi.com. All rights reserved
close