கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கௌதியார் (Kowdiar) என்ற நகரில் வசித்து வருகிறது 'ஷேடோ' என்ற தெருநாய். இந்த நாய்க்கு, தினமும் பிற்பகலில் ஆன்லைனில் உணவு வருகிறது. 
ஆன்லைன் உணவு


ஒரு அப்பார்ட்மென்ட் காவலர், உணவு பார்சலைத் திறந்து வைத்தால், ஷேடோ அதை சாப்பிட்டு விட்டுச் சென்று விடும்.
இந்த நாய்க்கு தினமும் உணவு ஆர்டர் செய்பவர், வர்கீஸ் ஓம்மன். சுற்றுலா ஏற்பாடு வேலையைச் செய்து வரும் இவர், அதே பகுதியில் உள்ள அபார்ட்மென்ட்டில் வசித்து வருகிறார். 

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு, இவர் ஷேடோவைத் தன் குடியிருப்பு க்குக் கொண்டு வந்துள்ளார். அப்போதி லிருந்து தினமும் அந்த நாய்க்கு உணவு, இறைச்சி ஆகிய வற்றை வாங்கித் தந்து பாதுகாப்பாக வளர்த்து வந்துள்ளார்.

அதே நேரம், சுற்றுலா தொடர்பான விஷயங் களுக்காக வெளியூர் செல்ல நேர்ந்தால், நாய் ஷேடோவுக்கு உணவு வழங்க முடியாமல் போயுள்ளது. 

இதை நினைத்து வருந்திய வர்கீஸ், இதற்கு ஒரு தீர்வு கண்டுபிடிக்க வேண்டும் என யோசித்து, ஆன்லைன் உணவு டெலிவரி முறையைக் கையில் எடுத்துள்ளார். 

வர்கீஸ் எப்போ தெல்லாம் வெளியில் செல்கிறாரோ அப்போ தெல்லாம், ஷேடோவுக்கு ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து விடுகிறார்.

"நான் வெளியில் செல்லும் போது, என் குடும்பத்தினர் ஷேடோவுக்கு உணவு வழங்குவர். ஆனால், யாரும் வீட்டில் இல்லாத நேரத்தில் ஷேடோவுக்கு உணவு கொடுக்க முடிய வில்லை என வருத்தமாக இருந்தது. 

அதனால் ஆன்லைனில் ஷேடோ பெயரில் ஒரு கணக்கு தொடங்கி, அதில் உணவு ஆர்டர் செய்து வருகிறேன். உணவை எடுத்ததும் டெலிவரி பாய் எனக்கு போன் செய்வார். 

அவருக்கு, ஷேடோ எங்கு இருக்கும் எனக் கூறி விடுவேன். அவர் அங்கு சென்று உணவைத் தந்து விடுவார்" என்று வர்கீஸ் கூறியுள்ளார்.
வர்கீஸ் ஓம்மன்


வர்கீஸின் அபார்ட்மென்ட்டில் வேலை செய்யும் ராதா கிருஷ்ணன் என்ற காவலர், டெலிவரி பாய் கொண்டு வரும் பார்சலைப் பிரித்து ஷேடோவுக்குத் தருவார். அது, உணவை சாப்பிட்டு விட்டுச் சென்று விடும். 

"ஷேடோவுக்கு வர்கீஸ் சார்தான் உணவு தருவார். அவ்வப்போது, நான் கொண்டு வரும் மதிய உணவையும் தருவேன். ஷேடோ, அனைவரிடமும் அன்பாகப் பழகும். 

அதுவும் வர்கீஸ் சார் எங்கு சென்றாலும் அவர் பின்னாலே செல்வதால், அதற்கு 'ஷேடோ' எனப் பெயர் வைத்து விட்டார். ஷேடோவுக்கு பீஃப் பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும். 

உணவு சாப்பிட்டு விட்டு தண்ணீர் தேவைப் பட்டால், வித்தியாசமான முறையில் கத்தும். அதைப் புரிந்து கொண்டு நானே தண்ணீர் கொண்டு வந்து தருவேன்" என்று ராதா கிருஷ்ணன் தெரிவித் துள்ளார்.

'இரண்டு வருடங்களு க்கு முன், கேரளாவில் பெய்த மழையில் சிக்கி, சாலையின் ஓரத்தில் குட்டிநாய் தவித்துக் கொண்டிருந் துள்ளது. 

அதைப் பார்த்த என் மகன்கள் ஜோஸ்வா மற்றும் ஜாகோப் ஆகிய இருவரும், நாயை மீட்டு எங்கள் பகுதிக்குக் கொண்டு வந்தனர். 

நாங்கள் இருக்கும் அபார்ட்மென்ட்டில் நாய்கள் வளர்க்க அனுமதி இல்லை என்பதால், அதை என் அபார்ட்மென்ட்டு க்கு அருகிலேயே வைத்து வளர்த்து வருகிறோம். அன்று காப்பாற்றிக் கொண்டு வரப்பட்டது தான், ஷேடோ" என்று கூறி நெகிழ்கிறார் வர்கீஸ்.