சிறு குழந்தைகளுக்கான பொது அறிகுறிகள் ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

சிறு குழந்தைகளுக்கான பொது அறிகுறிகள் !

Subscribe Via Email

லைக் பண்ணுங்க... "
எல்லா குழந்தைகளும் ஏதோ ஒரு நேரத்தில் உடல் நல குறைவை சந்தித்து தான் ஆக வேண்டி யுள்ளது. பெரும்பாலான நேரங்களில் குழந்தை களுக்கு வரும் பிரச்சினைகள் மருத்துவரிடம் செல்லாமலே சரியாக கூடியது.
சிறு குழந்தைகளுக்கான அறிகுறி


ஆனால் சில நேரங்களில் நமது குழந்தை களுக்கு ஏற்படும் உடல் நல குறைவை மருத்துவரிடம கொண்டு செல்லாமல் சரியாக்குவது கடினம்.

குழந்தைகள் அழுகையின் மூலமே நம்மிடம் பேசுவதால் அது பசியில் அழுகிறதா? அல்லது உடல் நல குறைவால் அழுகிறதா? என்பதை கண்டு பிடிப்பது கடினம்.

சிறு குழந்தைகளுக்கான அறிகுறிகள்

1.பள்ளி செயல்திறனில் மாற்றம் ஏற்படுதல்

2.முயற்சியெடுத்தும் குறைந்த மதிப்பெண் பெறுதல்

3.அதிகமான கவலை / பதற்றம் / பயம்

4.ஒரிடத்தில் உட்கார முடியாமல் நிலை கொள்ளாமல் இருத்தல் (Hyperactive)

5.தொடர்ந்து வரும் கெட்ட கனவுகள்

6.தொடர்ந்து நிர்வாகத்துக்கு பணிந்து போகாமல் இருத்தல் மற்றும் வன்முறைச் செயல் பாடுகளில் ஈடுபடுதல்
பொது அறிகுறி


7.அடிக்கடி எரிந்து விழுதல் / கோபப்படுதல் (Temper tantrums)

8.கவனம் செலுத்த முடியாத நிலை ( கவனச் சிதறல் / Poor concentration)

9.வார்த்தை களையும் ஒலியையும் தொடர்பு படுத்த முடியாமல் போவது

10.ஒருவர் சொல்வதை பின்பற்ற இயலாமை (not able to follow directions)

11.அம்மாவின் கண்ணை பார்க்காம லிருத்தல், சிரித்தால் பதிலுக்கு சிரிக்காமல் இருத்தல்

12.கற்றல் குறை பாடுகளான எழுதுவது, படிப்பது கணக்கு போடுவது போன்ற வற்றில் ஏற்படும் குறிப்பிட்ட பிரச்னைகள் (Learning Disabilities)

13.பேசத் தொடங்கு வதற்கான எந்த அறிகுறிகளும் இல்லாமல் இருத்தல்.

இந்த அறிகுறிகள் எல்லோருக்கும் இயல்பாக இருப்பது போலவே தோன்றக் கூடியவையே.

எப்போது அவை அளவுக்கு அதிகமாகவும் நீடித்தும் காணப்பட்டு, ஒருவரின் தனிப்பட்ட திறனைப் பாதித்து, தினசரி வாழ்க்கைக்கு இடையூறாக உள்ளதோ, 

அப்போது உளவியல் நிபுணரிடம் ஆலோசனை பெற வேண்டியது அவசிய மாகிறது. மாறிவரும் சூழ்நிலைக்கேற்ப தன்னைத் தானே மாற்றி கொள்பவன் தான் மனநலம் வாய்ந்தவ னாகக் கருதப் படுகிறான்.

அப்படி மாற இயலாமல் வாழ்க்கை பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் போகும் பலவீன மனநிலை கொண்டிருப் பவர்களே பெரும்பாலும் மனநல பாதிப்புக்கு உள்ளாகின்றனர். 
மனநல சிகிச்சை


முற்றிய மனநலக் கோளாறால் பாதிக்க பட்டவர்கள் தான் மனநல சிகிச்சை பெற வேண்டும் என்பதில்லை. 

வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் உடைந்து போகும் தருணங்களிலும் ஆலோசனை பெறுவது அவசியம்.

உடலுக்கு வரும் ஜுரம் போன்ற சிறிய உபாதைக்கு மருத்துவரை அணுகி நலம் பெறுவது போலத்தான் மனதுக்கு பிரச்னை யெனில் மனநல ஆலோசகரை அணுகுவதும்... 

இதை எல்லோரும் உணர்ந்து விட்டால் அதுவே ஆரோக்கி யமான மாற்றம்தான். இம்மாற்றத்தி னால் ஏற்படும் நல்ல மன ஆரோக்கி யத்தால் நம் மக்களின் திறனும் பல மடங்கு அதிகரிக்கும். மனம் தெளிவாக,

சந்தோஷமாக இருந்தால் மட்டுமே, ஒருவர் தன் முழுத்திறனுடன் செயல்பட முடியும். இதனால் வீட்டில் உறவுகளும் மேம்பட்டு குடும்பமே மகிழ்ச்சியாக இருக்கும். 

COMMENTS

.ME
Copyright © 2020 www.ethanthi.com. All rights reserved
close