பெரியவர்களுக்கான பொது அறிகுறிகள் !

0
அறிந்தும் அறியாமலும் புரிந்தும் புரியாமலும் இருக்கின்ற மனநலக் கோளாறு களினால் ஏற்படும் பாதிப்புகள் சொல்லில் அடங்காதவை. 
தற்கொலை எண்ணங்கள்


மனநலப் பிரச்னையின் அடையாளம் மற்றும் அறிகுறிகளை தெரிந்து கொள்வது தான், அதிலிருந்து மீண்டு வருவதற்கான முதல் படி.

பெரியவர்களுக்கான அறிகுறிகள்

1 . தெளிவற்ற சிந்தனை

2 . நீடித்திருக்கும் கவலை அல்லது எரிச்சல்

3 . மாறிவரும் அதிக சந்தோஷம் / அதிக கவலை

4 . மிகுந்த / தேவையில்லாத பயம், சோகம் அல்லது பதற்றம்

5 . தனிமையை நாடுவது, குடும்பம் மற்றும் நண்பர்களிடமிருந்து விலகுவது

6 . உணவு மற்றும் தூங்கும் பழக்கத்தில் மிகுந்த மாற்றம் ஏற்படுவது

7 . அளவுக்கு அதிகமான கோபம்/ குற்றவுணர்வு

8 . இல்லாத விஷயத்தைப் பார்ப்பது / யாரோ தம் காதில் பேசுவது போல உணர்தல்

9 . தினசரி செயல்பாடுகளைக் கூட சமாளிக்க முடியாமல் திணறுதல்

10 . தற்கொலை எண்ணங்கள்

11 . பல மருத்துவ பரிசோதனை களுக்குப் பிறகும் கண்டுபிடிக்க முடியாத உடற்கோளாறுகள் (உதாரணம்: எரிச்சல் கொண்ட குடல் நோய் / Irritable Bowel Syndrome)

12 . அளவுக்கு அதிகமான, கட்டுப்படுத்த முடியாத மது / போதைப் பழக்கம்

13 . எதிலும் நாட்டமின்மை

14 . திரும்பத் திரும்ப தொந்தரவு செய்யும், விரும்பத்தகாத எண்ணங்கள் / திரும்பத் திரும்ப ஒரே செயலை கட்டுப்பாடின்றி பதற்றத்துடன் செய்வது
பெரியவர்களுக்கான அறிகுறி


(உதாரணம்: அடுப்பை அணைத்து விட்டோமா என பலமுறை சரிபார்ப்பது/ கையை கழுவிக்கொண்டே இருப்பது)

15 . காரணமில்லாமல் மற்றவர் மீது சந்தேகப்படுவது

16 . எல்லாவற்றுக்கும் பிறரைச் சார்ந்திருப்பது

17 . தன்னைத் தானே காயப்படுத்தி கொள்ளுதல்

18 . அதீதமாக சுத்தம் பார்ப்பது

19 . தொடர்ந்து பாலியல் எண்ணங்களோ/ ஆசையோ இல்லாமல் இருத்தல்

20 . பாலுறவில் வெறுப்பு / துணையை இதுசம்பந்தமாக தவிர்ப்பது

21 . விரைவாக விந்து வெளியேறுதல் / உச்சகட்டம் அடையாதிருத்தல் / அடைவதில் தாமதம்

22 . வழக்கத்துக்கு மாறான பாலியல் விருப்பங்கள் (உயிரில்லாத பொருட்கள், ஆண் பெண்ணாக, பெண் ஆணாக உடை மாற்றுதல், பிறரையோ, தன்னைத் தானோ துன்புறுத்துதல்,

அடுத்தவரின் படுக்கை யறையை எட்டிப் பார்த்தல், பிறப்புறுப்பை அந்நியரிடம் காட்டுதல், குழந்தையுடன் உறவு கொள்ளுதல் என ஆரோக்கியமற்ற முறையில் பாலியல் உணர்வுகளால் தூண்டப் படுபவர்கள்.)
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings