வாயில் வீசும் துர்நாற்றம் கட்டுப்படுத்த டிப்ஸ் !





வாயில் வீசும் துர்நாற்றம் கட்டுப்படுத்த டிப்ஸ் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
இந்த வேகமான உலகத்தில் நம்மளுடைய அலுவலகப் பணிக்காக சுற்றி என்ன நடக்கிறது என்பதை கவனிக்காம ஓடுகிறோம். ஆனால் சில நேரங்களில் நம் உடலிலேயே மாற்றங்கள் ஏற்படுகிறது அதையும் உணருவது கிடையாது.
துர்நாற்றம் கட்டுப்படுத்த




என்ன மாற்றத்தை சொல்கிறேன் என்றால், ஒரு சிலர் உரையாடும் போது வாயில் துர்நாற்றம் வீசும். ஏன் வருகிறது, எதற்காக வருகிறது என்பதே தெரியாது.
வாயில் துர்நாற்றம் பல காரணங் களால் வருகிறது. அதில் முக்கியமான சிலவற்றைப் பார்க்கலாம்..

பற்களில் படியும் உணவு துகள்கள்

மோசமான பல் சுகாதாரம்

வறண்ட வாய் நோய்

புகையிலை பயன்பாடு

அதிக அசைவம் உண்ணுதல்

ஈறு நோய்

சுவாச பாதை நோய்த் தொற்றுகள்

நீரிழிவு

ஏன் வருகிறது என்றுப் பார்த்தோம். இப்போது தடுக்கும் வழியைப் பார்க்கலாம்…

உங்கள் சுவாசத்தை புதுப்பிக்க நாள் முழுவதும் ஏராளமான தண்ணீர் குடிக்கவும். ஏனென்றால், கெட்ட மூச்சுக்கு வழிவகுக்கும் பாக்டீரியாக் களை கழுவ உதவுகிறது.




தினமும் இரண்டு முறை பல் துலக்குதல் மற்றும் மவுத்வாஷைப் பயன் படுத்துவது துர் நாற்றத்திற்கு பங்களிக்கும் சில பாக்டீரியாக் களைக் கொல்ல உதவுகிறது.
வருடத்திற்கு இரண்டு முறை பல் மருத்துவரை கலந்து ஆலோசிக்கலாம்.

சாப்பிட்ட பிறகு உடனடியாக படுத்துக் கொள்ளக் கூடாது குறைந்த பட்சம் 2 முதல் 3 மணி நேரத்திற்கு பிறகு உறங்கச் செல்லலாம்.

துர்நாற்றத்தை எதிர்த்துப் போராட நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுங்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)