போக்குவரத்து விதிமீறலுக்கான அதிகபட்ச அபராதம் 6.5 லட்சம் !

0
நாடு முழுவதும் திருத்தி யமைக்கப்பட்ட மோட்டார் வாகன சட்டம் கடந்த 1-ம் தேதி முதல் நடைமுறை க்கு வந்தது. அதன் அடிப்படையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு அபராத தொகை பல மடங்காக உயர்த்தப் பட்டுள்ளது.




பல மடங்கு உயர்த்தப்பட்ட அபராதத் தொகையால் மக்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகினர். 
புதிய அபராத விதிமுறைக ளால் பொது மக்களுக்கு அதிக சுமை ஏற்படும் எனக்கூறி மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் திருத்தப்பட்ட மோட்டார் வாகனச்சட்டம் அமல் படுத்தப்பட வில்லை.

இந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் சம்பல்பூர் பகுதியில் போக்குவரத்து போலீசார் இன்று வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந் தனர்.

அப்போது நாகாலாந்தை சேர்ந்த லாரி ஒன்றை மறித்து சோதனை யில் ஈடுபட்ட போது அது போக்கு வரத்துக்கு இடையூறு செய்தல், காற்று மற்றும் ஒலி மாசுபாடு, சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றுதல்,

 உரிமம் இல்லாமல் லாரியை இயக்குதல், முறையாக வாகன காப்பீடு இன்மை ஆகிய போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபட்டது தெரிய வந்தது.




இதை யடுத்து புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி, போக்குவரத்து விதி மீறியதாக மொத்தம் 6 லட்சத்து 53 ஆயிரத்து 100 ரூபாய் அபராதம் விதிக்கப் பட்டது. 

அபராத தொகைக்கான ரசீதை லாரியின் உரிமை யாளரிடம் போக்குவரத்து போலீசார் வழங்கினர்.

புதிய வாகன சட்டத்தின் படி, நாட்டில் இதுவரை போக்கு வரத்தை மீறியதாக வழங்கப்பட்ட அதிகபட்ச அபராதத் தொகை இதுவாகும் என்பது குறிப்பிட த்தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)