டைப் 1 சர்க்கரை நோய் - குழந்தைப் பருவ சர்க்கரை நோய் !

இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளில், ஐந்து சதவிகிதம் பேர் டைப் 1 வகையைச் சார்ந்தவர்கள். இவர்களுக்கு, கணையத்தில் இன்சுலின் சுரப்பு முற்றிலும் இருக்காது. 
டைப் 1 சர்க்கரை நோய்

டைப் 1 சர்க்கரை நோய் ஒரு முறை வந்து விட்டால், வாழ்நாள் முழுக்க செயற்கை இன்சுலின் எடுத்துக் கொண்டு ஆரோக்கிய மாக வாழ முடியும்.

டைப் 1 சர்க்கரை நோய், குழந்தைகள் மற்றும் 20 வயதுக்கு உட்பட்டோரு க்கு அதிகம் வருகிறது. இந்த வகை சர்க்கரை நோயை நாம் தடுக்க முடியாது.

டைபாய்டு போன்று ஏதேனும் நோய் தாக்கிய பிறகு நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி, நம்முடைய உடலையே தாக்கும் ஆட்டோ இம்யூன் பிரச்னை காரணமாக ஓரிரு மாதங்களில் இன்சுலின் சுரப்பு முற்றிலும் நின்று போய் விடலாம். 
வைரஸ், டெங்கு காய்ச்சல் போன்றவை வருவதைத் தடுப்பதன் மூலம் டைப் 1 சர்க்கரை நோய் திடீரென வருவதற்கான வாய்ப்பை ஓரளவு குறைக்க முடியும்.

இரண்டாம் நிலை சர்க்கரை நோய் (Secondary Diabates)

உடலில் ஏற்படும் நோய்கள், பாதிப்பு காரணமாக, இன்சுலின் சுரப்பதில் பாதிப்பு ஏற்படுவது இரண்டாம் நிலை சர்க்கரை நோய். சர்க்கரை நோய் வர என்ன காரணம் என்பதைக் கண்டறிந்து, சிகிச்சை களைக் கொடுத்தாலே இந்தப் பிரச்னை ஓரளவு சரியாகிவிடும்.

இரண்டாம் நிலை சர்க்கரை நோய் - சில காரணங்கள் ஸ்டீராய்டு :

ஸ்டீராய்டு மருந்துகள் எடுத்துக் கொள்பவர்களில், வெகு சிலருக்கு, ஸ்டீராய்டு அதிகமாக உடலில் சேர்வதால், சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

இவர்கள் ஸ்டீராய்டு மருந்துகள் எடுத்துக் கொள்வதைத் தவிர்த்தாலே, சர்க்கரை நோய் குணமாகும்.

பித்தப்பை கற்கள்:

நேரத்துக்குச் சாப்பிடாமல் இருப்பதாலும், உடல் பருமனோடு இருப்பதா லும், பித்தப்பைக் கற்கள் உருவாகின்றன.

பித்தப்பை கற்கள், பித்தக் குழாய் கற்கள் போன்றவை, கணையத்தை அழுத்தினால், கணையம் புண்பட்டு இன்சுலின் சுரப்பதில் பிரச்னை ஏற்படலாம்.
ஹார்மோன் குறைபாடு:

அட்ரினல் சுரப்பியில் இருந்து ஸ்டீராய்டு ஹார்மோன் சுரக்கிறது. இந்த ஹார்மோன் அதிகமாகச் சுரந்தால், ‘குஷிங் சிண்ட்ரோம்’ என்ற பிரச்னை ஏற்பட்டு, சர்க்கரை நோய் வரக்கூடும்.

அட்ரினல் சுரப்பியில் ஏற்படும் கட்டி காரணமாக, அட்ரினலின் ஹார்மோன் அதிகமாகச் சுரந்தால், சர்க்கரை நோய் வரலாம்.

அக்ரோமெகாலி எனும் குரோத் ஹார்மோன் அதிகமாகச் சுரக்கும் பிரச்னை உள்ளவர் களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.

பி.சி.ஓ.டி -யால் அவதிப்படும் பெண்களு க்குத் தேவைப்படும் அதிகப் படியான இன்சுலினை, ஓர் எல்லை வரை கணையம் வழங்கும். 

ஒரு கட்டத்தில் இந்த செயல்பாடு பாதிக்கப்பட்டு, சர்க்கரை நோய் வர வாய்ப்பு இருக்கிறது. உடல் எடையைக் கட்டுப் படுத்தி, பி.சி.ஓ.டி-யைச் சரி செய்தாலே, சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு களைத் தடுக்க முடியும்.

ஆல்கஹால்:
ஆல்கஹால் காரணமாக அரிதாகச் சிலருக்குக் கணைய அழற்சி ஏற்படும். இதனாலும், சர்க்கரை நோய் வரலாம்.

மோடி சர்க்கரை நோய் (Mody Diabates)

மரபியல் அணுக்களில் ஏற்படும் மாறுதல் காரணமாக ஏற்படும் சர்க்கரை நோய் இது. மிக மிக அரிதாகத் தான் இந்த வகை சர்க்கரை நோய் இந்தியாவில் உள்ளது.

பொதுவாக, 30 வயதுக்கு உட்பட்டவர் களுக்குத் தான் இந்த வகை சர்க்கரை நோய் வரும். ஹெச்.என்.எஃப்.1-ஆல்பா, ஹெச்.என்.எஃப்.1-பீட்டா, குளுக்கோகினேஸ் என 12 வகையான மோடி குறைபாடுகள் இருக்கின்றன. 

ஒவ்வொன்று க்கும் ஒவ்வொரு விதமான சிகிச்சை இருக்கிறது. எந்த டி.என்.ஏ காரணமாக சர்க்கரை நோய் வருகிறது என்பதை ரத்தப் பரிசோதனை மூலம் கண்டறிந்து, சிகிச்சை அளிக்க வேண்டும்.

சில மோடி குறைபாடு களுக்கு எளிய மாத்திரைகள் கொடுத்தாலே சர்க்கரை நோய் கட்டுக்குள் வந்து விடும்.

4. கர்ப்பகால சர்க்கரை நோய்

கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு கர்ப்ப கால சர்க்கரை நோய் வரலாம். நஞ்சுக்கொடி (Placenta) தாயையும் குழந்தையும் இணைக்கிறது. குழந்தைக்குப் பல்வேறு ஹார்மோன்கள் இங்கிருந்து தான் செல்கின்றன.

கர்ப்பம் தரித்த 24 வாரங்களு க்குப் பிறகு, நஞ்சுக் கொடியில் உள்ள ஹார்மோன்கள் காரணமாக, உடலுக்கு இன்சுலின் அதிக அளவில் தேவைப்படும். இதனை கணையமே தானாக உற்பத்தி செய்து கொள்ளும்.
சில கர்ப்பிணி களுக்கு, தேவைப்படும் அதிக அளவிலான இன்சுலினை கணையம் உற்பத்தி செய்ய வில்லை எனில், கர்ப்பகால சர்க்கரை நோய் வரும்.

குழந்தை பிறந்த பின்னர் 24-48 மணி நேரத்தில் ரத்தத்தில் சர்க்கரை அளவு நார்மலாகி விடும். கர்ப்ப காலத்தில் வரும் சர்க்கரை நோய் தற்காலிக மானது தான்.

ஆனால், அவர்களு க்கு சில ஆண்டு களுக்குப் பிறகு, மீண்டும் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. மருத்துவர் ஆலோசனை படி நடப்பதன் மூலம் சர்க்கரை நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கலாம்.

5. குழந்தைகளுக் கான சர்க்கரை நோய்

பிறந்த குழந்தைக்கு முதல் ஆறு மாதங்களுக்குள் சர்க்கரை நோய் இருந்தால், டைப் 1 வகை என கருதுவது தவறு. இவர்களுக்கு, மோடி டயாபடீஸ் வருவதற்குத் தான் வாய்ப்பு அதிகம்.
நொறுங்கும் எலும்புகள் - ஆஸ்டியோ போரோசிஸ் !
சர்க்கரை நோய்க்கு எந்த மரபணு காரணம் எனக் கண்டு பிடித்து, அதற்குரிய சிகிச்சை அளித்தாலே, சர்க்கரை நோய் கட்டுக்குள் வந்து விடும்.
டைப் 2 சர்க்கரை நோய்

பிறந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு வரும் சர்க்கரை நோய், பெரும்பாலும் டைப் 1 வகையாக இருக்கும். உடல் பருமன் காரணமாக வரக் கூடியது டைப் 2 வகை.
கொரோனா பரவமா தடுக்க இந்த உணவுகளை கொடுங்க !
குழந்தைகள் உடல் பருமனாக இருப்பதைத் தவிர்த்தாலே, அவர்களுக்கு வரக்கூடிய டைப் 2 வகை சர்க்கரை நோயைத் தடுக்க முடியும்.
Tags: