ஹெல்மெட் நொறுங்கி பறிபோன எஸ்.ஐ உயிர் - கத்திப்பாரா மேம்பாலத்தில் !





ஹெல்மெட் நொறுங்கி பறிபோன எஸ்.ஐ உயிர் - கத்திப்பாரா மேம்பாலத்தில் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
சென்னை பரங்கிமலை போக்கு வரத்துக் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்ட ராக (எஸ்.ஐ) பணி புரிந்து வந்தவர் நடராஜ் (56). தாம்பரம் சானடோரி யத்தில் குடும்பத்துடன் குடியிருந்து வந்தார். இன்று காலை 11.30 மணியளவில் பைக்கில் சென்னை நந்தம் பாக்கத்தில் நடந்த மீட்டிங்கிற் காக நடராஜ் வந்தார். 
ஹெல்மெட் நொறுங்கி பறிபோன எஸ்.ஐ உயிர்



மீட்டிங் முடிந்து அவர் பைக்கில் புறப்பட்டார். கத்திப்பாரா மேம்பாலத்தில் அவர் பைக்கில் வந்த போது பின்னால் வந்த சிமென்ட் கலவை லாரி பைக்கின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. அதில் லாரியின் டயர், நடராஜின் தலை மற்றும் உடலில் ஏறி இறங்கியது. 

இதனால் ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்தத் தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வந்தனர். நடராஜின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக் காக குரோம்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். 

விபத்தை ஏற்படுத்திய கும்பகோண த்தைச் சேர்ந்த லாரி டிரைவர் சதீஷை போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``விபத்தில் பலியான நடராஜுக்கு சாந்தி என்ற மனைவியும், அருண் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். 

சாந்தி புரசை வாக்கத்தில் உள்ள வங்கியில் பணியாற்று கிறார்.  அருண் பண்ருட்டியில் உள்ள வங்கியில் வேலை பார்க்கிறார். மகள் திவ்யா தனியார் இன்ஜினீயரிங் கல்லுாரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். 
பறிபோன எஸ்.ஐ உயிர்



கத்திப்பாரா பாலத்தி லிருந்து கோயம்பேடு, போரூர், கிண்டி, அடையாறு, மீனம்பாக்கம் ஆகிய இடங்களுக்குச் செல்லலாம்.  நடராஜ், தாம்பரத்து க்குச் செல்ல பாலத்தில் திரும்பிய போது தான், பின்னால் வந்த லாரி மோதி யுள்ளது. 

விபத்து நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது நடராஜ் பைக் மீது லாரி மோதும் காட்சிகள் தெளிவாகப் பதிவாகி யுள்ளது. அதில் நடராஜ் ஹெல்மெட் அணிய வில்லை என்று ஆரம்பத்தில் தகவல் வெளியானது. 

ஆனால், அவரின் தலையி லிருந்து சேதமடைந்த ஹெல்மெட்டை அகற்றினோம். லாரியின் டயர் தலையில் ஏறியதால் ஹெல்மெட் நொறுங்கி யுள்ளது. 

நடராஜ், இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஓய்வுபெற உள்ள நிலையில் இந்த விபத்தில் அவர் இறந்து விட்டார்" என்றனர். போலீஸ் எஸ்.ஐ. நடராஜ் விபத்தில் பலியான தகவல் போலீஸாரை சோகத்தில் ஆழ்த்தி யுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)