பள்ளி பிள்ளைகளிடம் கேட்கும் கேள்வியா இது? வினாதாள் சர்ச்சை !

0
இப்படியும் தேர்வில் கேள்விகள், கேட்கப்படுமா என்று நினைக்கு மளவுக்கு சர்ச்சைக்குரிய கேள்விகளை கேந்திரிய வித்யாலயா பள்ளி தேர்வில் எழுப்பி யுள்ளார்கள் என்று குற்றம் சாட்டுகிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கனகராஜ்.
வினாதாள் சர்ச்சை




இது தொடர்பாக திடுக்கிடும் தகவலை தனது ட்விட்டர் தளத்தில் கனகராஜ் பகிர்ந்துள்ளார்.

அதில் வினாத்தாள் ஒன்றின், புகைப் படத்தை ஷேர் செய்துள்ளார். அத்துடன் சர்ச்சைக் குரிய கேள்விகள் கட்டமிட்டு காட்டப் பட்டுள்ளன.

தலித் வாழ்க்கை

அதில் ஒரு கேள்வியில், தலித் என்றால் யார் என்று கேட்கப்பட்டு, அதற்கு நான்கு விடைகள் கொடுக்கப் பட்டுள்ளன. 
அதில் ஒன்று, 'வெளிநாட்டினர்', இன்னொன்று, 'தீண்டத்த காதவர்கள்', 'நடுத்தர வர்க்கத்தினர்' மற்றும் 'உயர் வர்க்கத்தினர்' ஆகிய வையாகும்.




முஸ்லீம்கள்

இதற்கு அடுத்த கேள்வியும் சர்ச்சைக் குரியதாகவே உள்ளது. முஸ்லிம்கள் தொடர்பாக, உள்ள பொதுவான அபிப்பிராயம் என்ன? என்று கேள்வி எழுப்பப்பட்டு, 'முஸ்லிம்கள் பெண் குழந்தைகளை பள்ளிக் கூடங்களுக்கு அனுப்புவ தில்லை', 

'அவர்கள் முழுக்க சைவம் மட்டுமே சாப்பிடு பவர்கள்', 'நோன்பு காலகட்டத்தில் அவர்கள் தூங்குவது கிடையாது', போன்ற ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டு, 
நான்காவது ஆப்ஷனாக, 'இவை அனைத்தும்' என்றும் ஒரு பதில் கொடுக்கப் பட்டுள்ளது. இது மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்தி யுள்ளது.

6 -வது வகுப்பு

கேந்திரிய வித்யாலயா பள்ளியின் 6ம் வகுப்பு தேர்வில் இப்படி கேள்விகள் கேட்கப் பட்டுள்ளதாக கனகராஜ் தனது டிவிட்டர் பக்கத்திலேயே விளக்கமும் அளித்துள்ளார். 

இது தொடர்பான முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாக வேண்டியுள்ளது.




நெட்டிசன்கள் கருத்து

கனகராஜின் டிவிட்டர் பக்கத்தில் நெட்டிசன்கள் பலரும், இந்த கேள்வித் தாளுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். 

பிஞ்சு மனதில் நஞ்சு விதைக்கப் படுவதாக அவர்கள் குற்றம் சாட்டி கருத்துக்களை பதிவிட்டு வருவதையும் பார்க்க முடிகிறது. 

சிலர் இது தொடர்பாக வழக்கு தொடுக்க முடியாதா என்றும் கேள்வி எழுப்புகிறார்கள். இந்த கேள்வித் தாளின் உண்மைத் தன்மை குறித்து, பள்ளி நிர்வாகம் தான் விளக்கம் அளிக்க வேண்டும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings