பொழுது போக்குக்காக சில பேனாக்களை சேகரிப்பார்கள், சிலர் செருப்புகளை சேகரிப்பார்கள், சிலர் மோட்டார் சைக்கிள் களை சேகரிப்பார்கள்.
அதிக பட்சமாக சிலர் கார்களை சேகரிப்ப துண்டு, சிலர் பழைய கார்களை, சிலர் புதிய கார்களை, அவரவர் வசதிக் கேற்றவாறு... ஆனால் பிரான்சில் ஒருவர் போர் விமானங் களை சேகரித்துள்ளார்...
ஒன்றல்ல, இரண்டல்ல, 110 போர் விமானங்களை சேகரித்துள்ளார் அவர்! பிரான்சைச் சேர்ந்த Michel Pont (87), உலகின் அதிக விமானங்களை சேகரித்து வைத்திருப்பவர் என்ற கின்னஸ் சாதனையைப் படைத்தவ ராவார்.
1980களில் தனது பரம்பரை மாளிகையை பெற்ற அவர் வீட்டின் முன் வாகனங்களை நிறுத்தி வைத்திருப்பது போல் விமானங்களை நிறுத்தி வைத்துள்ளார்.
தனது விமானங் களை வகைப்படுத்தி வகைக் கொன்றாக ஒன்பது அருங்காட்சி யங்களையும் அமைத்துள்ளார் Michel.
விமானங்கள் மட்டுமின்றி, சோவியத் ஹெலிகொப்டர் ஒன்று, ஹோவர் கிராஃப்ட் ஒன்று, ஒரு சேமிப்பகம் முழுவதும் தீயணைப்பு வாகனங்கள், 200 பழங்கால மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 36 பந்தயக் கார்கள் ஆகியவையும் அவரது சேமிப்பில் அடங்கும்.
2018 -ஆம் ஆண்டில் மட்டும் அவரது மாளிகையை 30,000 -க்கும் அதிக மானோர் பார்வை யிட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
கறிவேப்பிலை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நடைபெறும் மாற்றங்கள் !
ஆண்களின் பார்வையால் பெரிதாகும் பெண்கள் மார்பகம் - ஆய்வு !











Thanks for Your Comments