வார நாட்களில் நடைப்பயிற்சி... வாழ்நாள் ஆரோக்கியம் !

0
உடற்பயிற்சி என்பது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிகவும் அவசியம் தான். ஆனால், இயந்திரத் தனமான வாழ்க்கை முறைகளால் எல்லோராலும் உடற்பயிற்சி செய்ய முடிவதில்லை. 
வார நாட்களில் நடைப்பயிற்சி



இந்த மாதிரி தர்ம சங்கடத்தில் தவிப்பவர் களுக்கு நடைப்பயிற்சி மிகவும் சிறந்தது. உடற்பயிற்சி களுக்கு இணையானது நடைப்பயிற்சி. 

எனவே சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நடைப்பயிற்சி மேற் கொண்டாலே கூட போதும் என்று கூறியிருக் கிறார்கள் ஆராய்ச்சி யாளர்கள். 
இன்றைய நவீன வாழ்க்கை முறை காரணமாக சிறிது தொலைவு செல்வது என்றாலும் வாகனங்களின் துணையை நாடுவது வாடிக்கையாகி விட்டது. உடலுக்கு இயக்கம் என்பதே இல்லாமல் போய் விட்டதால் உடல்நலம் என்பது கேள்விக்குறியாக மாறி வருகிறது. 

இந்த நிலையில், தினமும் ஒரு மணி நேரம் என்கிற அளவிலோ அல்லது வாரம் முழுவதும் ஒரு மணி நேரம் என்கிற அளவிலோ தொடர்ந்து நடைப் பயிற்சி மேற்கொள்வது வாழ்நாள் முழுவதும் மனித இனத்தை ஆரோக்கிய மாக வைக்குமெனத் தெரிய வந்துள்ளது.

ஒரு மணி நேரம் தொடர்ந்து மிதமான வேகத்திலோ அல்லது விரைவாகவோ நடந்து செல்லுதல் போன்ற உடற்பயிற்சி களைச் செய்வதால், முதுமைப் பருவத்தில் எந்தவொரு சின்ன சின்ன வேலைகளை யும் செய்ய முடியாமல் முடங்கிப் போவது குறையும். 



இடுப்பு, முழங்கால், கணுக்கால் மற்றும் பாதங்கள் பலவீனம் அடையாது. குறிப்பாக, Arthrits என சொல்லப் படுகிற கீல்வாதம் (Gout) ஏற்படாது.

4 வருடங்களாக மேற்கொள்ளப் பட்ட இந்த ஆய்வை பிரபல எழுத்தாளர் டோரத்தி டன்லப் என்பவர் மேற்கொண்டி ருந்தார். 
இந்த ஆய்வு பற்றிக் கூறும் போது, ‘வாரந்தோறும் தவறாமல் நடைப்பயிற்சி மேற்கொண்ட 85 சதவீத முதியவர்கள் தங்களுடைய அன்றாடப் பணிகளை தாங்களே மேற்கொள்ளும் திறன் பெற்றிருந்தனர்.

நடைப்பயிற்சி பழக்கம் இல்லாதவர்கள் குளித்தல், ஆடை மாற்றுதல், கடைகளு க்குச் செல்லுதல் உட்பட சாலையைப் பத்திரமாக கடத்தல் போன்ற வற்றைத் தனியாக செய்து கொள்ள முடியவில்லை. 

இதிலிருந்து நடைப்பயிற்சி யின் முக்கியத்து வத்தைப் பலரும் உணர்ந்து கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் வாரம் ஒரு மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்வது கட்டாயம்’ என்கிறார். நன்றி குங்குமம்
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings