எண்ணெய் கப்பலை சிறைபிடித்த ஈரான்.. கொதித்தெழுந்த உலக நாடுகள் !

0
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இரண்டு எண்ணெய் கப்பல்களை ஈரான் கடற்படை சிறைபிடித்து உள்ளது. ஈரானின் இந்த செயல் பெரும் பதற்றத்தை யும், பரபரப்பை யும் ஏற்படுத்தி உள்ளது.
ஈரான் மீது பொருளாதார தடை
ஈரானுக்கு எதிராக அமெரிக்காவின் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. 

தற்போது அமெரிக்கா மட்டு மில்லாமல் பெரிய ராணுவ பலம் கொண்ட உலக நாடுகளும் ஈரானுக்கு எதிராக களமிறங்கி உள்ளது. சென்ற வருடம் அமெரிக்கா ஈரான் மீது பொருளாதார தடையை விதித்தது. 

அதன்படி ஈரானிடம் இருந்து யாரும் எண்ணெய் பொருட்கள் வாங்க கூடாது என்று கூறியது. அப்போது தொடங்கிய பிரச்சனை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

நிறைய விதிகள்

அமெரிக்கா வின் பொருளாதார தடையை தொடர்ந்து எண்ணெய் வள நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள் எண்ணெய் ஏற்றுமதி செய்ய பயன்படுத்தும் ஹோர்முஸ் ஜலசந்தியை மூட போவதாக ஈரான் பயமுறுத்தியது. 

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகத் தான் மத்திய கிழக்கு நாடுகள் எண்ணெய் வர்த்தகம் செய்து வருகிறது. ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்து உள்ளது.

இங்கிலாந்து

இந்த நிலையில் இந்த ஹோர்முஸ் ஜலசந்தியை இங்கிலாந்து எண்ணெய் கப்பல்கள் இரண்டு முறைகேடாக பயன் படுத்தியதாக சிறை பிடிக்கப் பட்டுள்ளது. 
ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் கப்பல்கள் உள்ளே செல்ல கூடாது. வெளியே மட்டுமே செல்ல வேண்டும். 

உள்ளே செல்ல வேறு வழி இருக்கிறது. அதை பயன்படுத்த வேண்டும். ஆனால் இங்கிலாந்து கப்பல் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக உள்ளே வந்துள்ளது.

சிறை பிடிப்பு

இதை யடுத்து ஹோர்முஸ் ஜலசந்தியில் இரண்டு இங்கிலாந்து கப்பல்களும் ஈரான் கப்பற்படை மூலம் சிறை பிடிக்கப் பட்டது. இதற்கு ஈரான் ராணுவம் இரண்டு விதமான காரணங்களை சொல்கிறது. 
எண்ணெய் கப்பலை சிறைபிடித்த ஈரான்
அதன்படி இங்கிலாந்து கப்பல்கள் ஈரானின் மீன் பிடி கப்பலை மோதி சேதப்படுத்தி உள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தியை தவறாக கடலுக்குள் வர பயன்படுத்தி உள்ளது, என்றுள்ளது.

பெரும் கொதிப்பு

இதனால் இங்கிலாந்து ஈரான் மீது கடும் கோபத்தில் இருக்கிறது. ஈரான் ராணுவம் இங்கிலாந்தை சேர்ந்த சில ராணுவ அதிகாரி களையும், ராயல் படை வீரர்களையும் கூட சிறை பிடித்துள்ளது. 

இவர்களை விடுவிக்கும் படி இங்கிலாந்து விடுத்த கோரிக்கை களுக்கு ஈரான் செவி மடுக்க வில்லை.
பெரிய சிக்கல்
இதுதான் தற்போது பெரிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. ஈரானுக்கு எதிராக எண்ணெய் வள நாடுகள் , அமெரிக்கா ஏற்கனவே கடும் கோபத்தில் உள்ளது. 

தற்போது பிரான்ஸ், ஜெர்மனி , இத்தாலி ஆகிய நாடுகளும் ஈரான் மீது கடும் கோபத்தில் இருக்கிறது. ஈரானுக்கு எதிராக அந்நாட்டுகள் அறிக்கை விட்டபடி உள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)