அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி !





அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த தினத்தையொட்டி மருத்துவமனை தினம் இன்று கொண்டாடப் படுகிறது. 
மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி
திருவல்லிக்கேணி கஸ்தூரிபா காந்தி மகப்பேறு மருத்துவ மனையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை செயலாளர் பீலாராஜேஷ் பங்கேற்றார். 

அப்போது அவர் பேசியதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் கர்ப்பிணி களுக்கு யோகா பயிற்சி தொடங்கப் பட்டுள்ளது. 

யோகா பயிற்சியின் மூலம் அறுவை சிகிச்சை இன்றி சுகப்பிரசவம் பெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. அரசு மருத்துவ மனையில் தற்போது மருத்துவர் பற்றாக்குறை எதுவும் இல்லை. 

காலி இடங்கள் அனைத்தும் நிரப்பப் பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூட டாக்டர்கள் பணி அமர்த்தப் பட்டுள்ளனர். 
அரசு டாக்டர்களுக்கு ஊதிய உயர்வு விவகாரத்தில் நல்ல முடிவு எடுத்து அறிவிக்கப் படும். இவ்வாறு அவர் கூறினார். 

மருத்துவமனை தினத்தையொட்டி 30 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 

விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டன. சிறப்பாக பணியாற்றிய பணியாளர் களுக்கு ரொக்க பரிசும் வழங்கப் பட்டது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)