எங்க கூட "உறவு" வெக்கணும்.. மறுத்த இளைஞனின் கழுத்தை நெறித்த நண்பர்கள் ! - EThanthi
ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

Flash News

எங்க கூட "உறவு" வெக்கணும்.. மறுத்த இளைஞனின் கழுத்தை நெறித்த நண்பர்கள் !

பேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...
தன்பால் உறவுக்கு மறுப்பு சொன்ன இளைஞரை அவரது நண்பர்களே கழுத்தை நெறித்து கொலை செய்தது வேலூர் மாவட்ட மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல் நத்தம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த். இவருக்கு 20 வயசு. 
கழுத்தை நெறித்த நண்பர்கள்
இவருடைய நண்பர்கள் பாலாஜி, கார்த்திக். வாட்ஸ்ஆப் குரூப் மூலம் பழக்க மானவர்கள். பாலாஜிக்கு 23 வயசு, கார்த்திக்கு 22 வயசாகிறது. ஆனால் நண்பர்களை ஆனந்த் ஒரு முறை கூட நேரில் சந்தித்து இல்லை.
நண்பர்கள்

இந்நிலையில், கடந்த மாதம் 13-ம் தேதி நாட்றம் பள்ளிக்கு வருமாறு, ஆனந்தை கார்த்திக்கும், பாலாஜியும் கூப்பிட் டுள்ளனர். நண்பர்கள் கூப்பிட்டதால் ஆனந்தும் சொன்ன இடத்துக்கு சென்றார். 
எங்க கூட
அப்போது ஆனந்தை தன்பால் உறவுக்கு இரு நண்பர்களும் கட்டாயப் படுத்தி உள்ளனர்.

கொலை
ஆனால் இதற்கு ஆனந்த் மறுப்பு சொல்லி உள்ளார். பலமுறை தொடர்ந்து வற்புறுதியுத்தியும் ஒத்து கொள்ளாததால், ஆத்திர மடைந்த நண்பர்கள் 2 பேரும் ஆனந்தை கொலை செய்து பச்சூர் அருகே ரயில்வே தண்ட வாளத்தில் வீசி சென்று விட்டனர்.

தற்கொலை?
homosexual
இதை யடுத்து ரயில்வே போலீசார், ஆனந்தின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். ஒரு வேளை ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டிருக் கலாம் என்றும், காதல் தோல்வி அல்லது வேறு ஏதாவது பிரச்சனை யால் இருக்கலாம் என்று சந்தேகித்து வந்தனர்.

கைது
அந்த சமயத்தில்தான், ஆனந்தின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தது. அதில், கழுத்து நெரித்து கொலை செய்யப் பட்டுள்ளது தெரிய வந்தது. இதன் பின்னர் போலீசார், ஆனந்தின் செல்போன் நம்பர்களை ஆய்வு செய்த போது தான், நண்பர்கள் இருவரிடம் இருந்து கடைசியாக அழைப்பு வந்திருந்தது தெரிய வந்தது. தன்பால் உறவு
பிறகு, அவர்களை பிடித்து விசாரித்ததில், கொலைக் கான காரணத்தை தெரிவித்தனர். இதை யடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப் பட்டனர்.

No comments

Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close
Play Pause