துப்பாக்கி முனையில் நடக்கும் வாகன சோதனை - வைரலான வீடியோ !

0
நம்மூரில், இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் பறப்பதும் காவலர்கள் தங்களது பாணியில் தடுத்து நிறுத்துவதும் வாடிக்கை தான். 
துப்பாக்கி முனையில் நடக்கும் வாகன சோதனை
சென்னை போன்ற பெரு நகரங்களில், வாகனச் சோதனையில் ஈடுபடும் போலீஸாரிட மிருந்து தப்பிக்க, இளைஞர்கள் பல்வேறு யுக்திகளைக் கையாளு கின்றனர். 
வாகனச் சோதனைகளின் போது, சில குற்றவாளிகளும் காவலர்களின் வசம் சிக்குகின்றனர். 

ஆனால், உத்தரப் பிரதேச போலீஸாரின் வாகனச் சோதனை நம்மை திகிலடையச் செய்கிறது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத் தளத்தில் பரவிவருகிறது.

பாடான் பகுதியில் வாகனச் சோதனைக் காக நிற்கும் காவலர்கள், அப்பகுதியில் வரும் வாகன ஓட்டிகளை துப்பாக்கி முனையில் நிறுத்துகின்றனர். 

இதனால் பீதியடைந்த வாகன ஓட்டிகள் பயத்தில் ஆடிப்போ யுள்ளனர். ஆண், பெண் என வித்தியாச மின்றி எல்லோருக்கும் கன் பாயின்ட் டிரீட்மென்ன்டு தான். 
சாலையில் வாகனத்தில் செல்லும் போது, போலீஸார் துப்பாக்கியை முனையில் எங்களைத் தடுத்து நிறுத்துகின்றனர். 

காவலர்களின் இந்தச் செயல் அச்சுறுத்துவ தாகவும், அவமானகர மானதாகவும் உள்ளது என பொது மக்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.

இது குறித்து ஆங்கில ஊடகத்திடம் பேசியுள்ள காவல்துறை அதிகாரிகள், பாடான் பகுதி, அடிக்கடி குற்றச் சம்பவங்கள் நடைபெறும் பகுதியாகும். 

அதனால் தான் நாங்கள் எப்போதும் துப்பாக்கி யுடன் இருக்கிறோம். வாகனச் சோதனை யின் போது, எந்த வாகனத்தில் குற்றவாளிகள் வருகிறார்கள் எனத் தெரியாது. 
அதன் காரணமாகவே இப்படிச் செய்வதாகக் கூறியுள்ளனர். 'இந்தச் சம்பவம் குறித்து விசாரித்து, தேவைப் பட்டால் நடவடிக்கை எடுப்போம்' என்று டிஜிபி அலுவலகத்தில் இருந்து தெரிவித்துள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)