அப்பார்ட்மெண்டை இடித்து அகற்றம் வழக்கில் நீதிபதி எச்சரிக்கை !

0
ஏற்கெனவே ஒரு பெஞ்ச் அளித்த தீர்ப்பிற்கு எதிராக மற்றொரு பெஞ்சில் தீர்ப்பு பெறுவது நீதிமன்றத்தை ஏமாற்றும் செயல். இதுபோன்று தொடர்ந்து நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று எர்ணாகுளம் அப்பார்ட் மென்டுகளை இடித்து அகற்றும் வழக்கில் நீதிபதி அருண் மிஸ்ரா எச்சரித்துள்ளார்.
அப்பார்ட்மெண்டை இடிக்கும் வழக்கு



கேரள மாநிலம், எர்ணாகுளம் மரட் நகராட்சியில் நீர் நிலைகளை யொட்டி, விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள போளி பெய்த் அப்பார்ட்மென்ட், ஜெயின் ஹவுசிங், காயலோரம், ஆல்ஃபா வெஞ்சேழ்ஸ், ஹாலிடே ஹெரிட்டேஜ் ஆகிய ஐந்து அடுக்குமாடிக் குடியிருப்பு களை ஒரு மாதத்தில் இடித்து அகற்ற வேண்டும் என சுப்ரீம்கோர்ட் கடந்த மாதம் அதிரடியாக உத்தர விட்டிருந்தது.
மரட் பகுதி பஞ்சாயத்தாக இருந்த சமயத்தில் இந்தக் கட்டடங்கள் கட்டப் பட்டுள்ளன. ஐந்து அடுக்குமாடிக் குடியிருப்பு களிலும் 350 குடியிருப்புகள் உள்ளன. இதில் பல வீடுகள் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் விலை கொடுத்து வாங்கப் பட்டுள்ளன. மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டால் இனியும் கேரளம் தாங்காது என சுப்ரீம்கோர்ட் கருத்து தெரிவி த்திருந்தது.

பிளாட்டுகளை இடித்து அகற்ற வேண்டும் என்ற தீர்ப்பை நீதிபதி அருண் மிஸ்ரா தலைமை யிலான பெஞ்ச் வழங்கி யிருந்தது. ஆனால் பிளாட் உரிமை யாளர்கள் வேறொரு பெஞ்சில் மனு செய்து ஆறுவாரகாலம் தடை வாங்கி யிருந்தார்கள்.

இதைத் தொடர்ந்து தங்களிடம் இந்த வழக்கு சம்பந்தமாக கருத்து கேட்க வேண்டும் எனக்கூறி பிளாட் உரிமையாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திரு ந்தார்கள். அந்த மனு நீதிபதி அருண் மிஸ்ரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
நீதிபதி எச்சரிக்கை



விசாரணை முடிவில் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி அருண் மிஸ்ரா, ஏற்கெனவே ஒரு பெஞ்ச் அளித்த தீர்ப்பிற்கு எதிராக மற்றொரு பெஞ்சில் தீர்ப்பு பெறுவது நீதிமன்றத்தை ஏமாற்றும் செயல். இதன் பின்னணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பது தெரியும். 
வழக்கறிஞர் களுக்கு பணம் மட்டும் கிடைத்தால் போதும் என்று ஆகிவிட்டதா எனவும் கேள்வி எழுப்பினார். மேலும் இதுபோன்று தொடர்ந்து நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதி அருண் மிஸ்ரா எச்சரித்தார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings