எடியூரப்பா செய்தாரா நா ஏன் செய்யணும்? குமாரசாமி சீற்றம் !

0
கர்நாடக மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
எடியூரப்பா செய்தாரா நா ஏன் செய்யணும்? குமாரசாமி சீற்றம் !
ஆட்சியைக் கவிழ்க்க, பி.ஜே.பி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகச் சொல்லப்பட்ட நிலையில், காங்கிரஸ் மற்றும் 

ம.ஜ.த கட்சிகளைச் சேர்ந்த 12 எம்.எல்.ஏ-க்கள், ஜூலை 6-ம் தேதி, திடீரென தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் குமாரசாமி தலைமை யிலான கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 

12 எம்.எல்.ஏ-க்களும் தங்களின் ராஜினாமா கடிதத்தை அளித்து ஐந்து நாள்களுக்கு மேல் ஆன நிலையில், இன்னும் அவர்களின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட வில்லை. 

தங்களின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ள சபாநாயகர் தாமதப் படுத்துவதாக அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் பலரும் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமாவால் ம.ஜ.த - காங்கிரஸ் கூட்டணியிலான ஆட்சி முடிவுக்கு வரும் என்றும் கர்நாடக முதல்வர் குமாரசாமி 

இன்று தன் பதவியை ராஜினாமா செய்வார் எனவும் கூறப்பட்ட நிலையில், தற்போது அதற்குப் பதில் அளித்துள்ளார் குமாரசாமி.
இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் எதற்காக என் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அதற்கு என்ன தேவை உள்ளது?'' எனக் கேள்வி எழுப்பி யுள்ளார். 

2008-ம் ஆண்டு 18 எம்.எல்.ஏ -க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்த போது எடியூரப்பா தன் பதவியை ராஜினாமா செய்தாரா? 

அப்படி இருக்கையில், நான் மட்டும் எதற்காகச் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டசபையில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக தற்போது 101 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். 

அதிருப்தியில் ராஜினாமா செய்த ஒரு சில எம்.எல்.ஏ -க்களையாவது பேசி தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் கர்நாடக காங்கிரஸ் தீவிரமாகப் போராடி வருகிறது. 

அங்கு நடக்கும் அரசியல் சர்ச்சைகளால் கர்நாடக சட்ட மன்றத்தைச் சுற்றி 2 கிலோ மீட்டர்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. 

இன்று முதல் 16-ம் தேதி வரை 24 மணி நேரமும் இந்தத் தடை நீடிக்கும் எனக் கூறப்பட் டுள்ளது.

இதற்கிடை யில், கடந்த 2017-ம் ஆண்டு கோவாவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றியது. 

இருந்தும் அங்கு எந்தக் கட்சிக்கும் அதிக பெரும்பான்மை கிடைக்காத தால் மற்ற கட்சிகளுடன் இணைந்து பா.ஜ.க ஆட்சி நடத்தி வருகிறது. 
எடியூரப்பா செய்தாரா நா ஏன் செய்யணும்? குமாரசாமி சீற்றம் !
இந்த நிலையில், காங்கிரஸில் உள்ள 10 எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.க-வில் இணைய வுள்ளதாகவும் அவர்கள் இன்று அமித் ஷாவைச் சந்திக்க வுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி யுள்ளன.

கோவாவில் 10 எம்.எல்.ஏ-க்களும் பா.ஜ.க-வில் இணைந்தால் அந்த மாநிலத்தில் பா.ஜ.க-வின் செல்வாக்கு அதிகரித்து விடும். 

கர்நாடகா மற்றும் கோவாவில் நடக்கும் அரசியல் குழப்பங் களுக்கு பா.ஜ.க மட்டுமே முழுக் காரணம் என எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.
இந்த நிலையில், இன்று நடக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்க வந்த காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் 
பிற தலைவர் போன்ற அனைவரும் இணைந்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகில் போராட்டம் நடத்தினர்.

கர்நாடகா மற்றும் கோவாவில் நடக்கும் அரசியல் சிக்கல் களுக்கு பா.ஜ.கதான் காரணம். அதை எதிர்த்து தான் போராட்டம் நடத்துகிறோம்’ என ராகுல் காந்தி செய்தி யாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings