உடலை வலுவாக்கும் தோப்புக்கரணம் ! - EThanthi
ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

Flash News

உடலை வலுவாக்கும் தோப்புக்கரணம் !

பேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...
தோப்புக் கரணம் போட்டாலே போதும் யோகாசன த்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்து விடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக் கரணத்தை வைத்தி ருந்தார்கள். உண்மையில் அது ஒரு நல்ல உடற் பயிற்சி. தோப்புக் கரணம் போடும் போது காது மடல்களைப் பிடித்துக் கொள்கிறோம்.
உடலை வலுவாக்கும் தோப்புக்கரணம்காது மடல்களில் உடலின் எல்லா உறுப்பு களையும் இணைக்கிற புள்ளிகள் இருக்கின்றன. காது மடல்களைப் பிடித்துத் தோப்புக்கரணம் போடும்போது உடலின் எல்லா உறுப்புகளு க்கும் செயல் படுவதற்கான தூண்டுதல் கிடைக்கிறது. உடல் இயக்கம் சீர்படுகிறது.
நீண்ட நேரம் வேலை பார்த்தால் பக்கவாதம் அபாயம் !
தோப்புக் கரணம் போட விரும்பும் ஒருவர், ஆரம்பத்தில் அவருடைய தோள்பட்டை அளவுக்குக் கால்களை விரித்து வைத்துக் கொண்டு தோப்புக்கரணம் போட வேண்டும்.

பின்னர் பயிற்சியானவுடன் கால்களைச் சேர்த்து வைத்துக் கொண்டு தோப்புக்கரணம் போட வேண்டும். வலது கை விரல்களால் இடது காது மடல்களையும், இடது கை விரல்களால் வலது காது மடல்களையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழ வேண்டும்.

உட்காரும்போது மூச்சை உள்ளிழுக்க வேண்டும். எழும்போது மூச்சை வெளிவிட வேண்டும். இவ்வாறு மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவதால், நமது தண்டுவடத்தில் – மூலாதாரத்தில் – சக்தி உருவாகும். உட்கார்ந்து எழும்போது, காலில் உள்ள சோலியஸ் எனும் தசைக்கு வேலை கொடுக்கிறோம்.உடல் முழுக்க இரத்த ஓட்டத்தை சீராக்கும் இதயத்தின் தசைகளைப் போலவே இயங்கக் கூடியது, இந்த சோலியஸ் தசை. இதனால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகும்.
மூன்று நிமிடங்கள் தோப்புக்கரணத்தைத் தொடர்ந்து செய்தால் வேறு எந்த உடற்பயிற்சியும் செய்ய வேண்டியதில்லை. ஆனால் இந்த மூன்று நிமிடங்களே பலரால் ஆரம்பத்தில் செய்ய முடியாது என்பதே உண்மை.

No comments

Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close
Play Pause