முதுகு வலியை குணமாக்கும் ஆசனம் ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

முதுகு வலியை குணமாக்கும் ஆசனம் !

Subscribe Via Email

முதுகு வலிக்கான எளிமையான ஆசனம் மர்ஜரி ஆசனம். ‘மர்ஜரி’ என்றால் பூனை. பூனை போல உடலை வளைத்து செய்வதால் இந்தப் பெயர். இரு கால்களையும் மடித்து, குதிகால் பகுதியில் நமது பிட்டப் பகுதி நன்கு பதிந்திருக்குமாறு அமர்வது தான் வஜ்ராசனம். 
முதுகு வலியை குணமாக்கும் ஆசனம்முதலில் வஜ்ராசனத்தில் அமர வேண்டும். முட்டி போட்டு நின்றபடி, பூனை போல கைகளை முன்னால் ஊன்றிய நிலையில் இருக்க வேண்டும்.

கால் முட்டியை சற்று அகல மாக வைத்து, கைகள் அதற்கு நேராக இருக்குமாறு சரி செய்து கொள்ள வேண்டும். மூச்சை உள் இழுக்கும் போது தலையை நன்றாக மேலே தூக்கிப் பார்க்க வேண்டும். 
இந்த நிலையில் முதுகுப் பகுதி நன்கு வளைந்து, ஒரு பள்ளம் போல ஏற்படும். பிறகு மூச்சை விட்டவாறு பொறுமை யாக குனிந்து நம்முடைய தாடை மார்பைத் தொடுவது போல நன்றாக குனிய வேண்டும்.


இந்த நிலையில், முதுகுப் பகுதி வளைந்து, ஒரு குன்று போல காணப்படும். இவ்வாறு மாற்றி மாற்றி 3-5 முறை செய்ய வேண்டும். 

பிறகு, மீண்டும் வஜ்ராசனத்தில் அமரலாம். அல்லது, அப்படியே குப்புறப் படுத்து ரிலாக்ஸ் செய்து விட்டு, பிறகு,

ஒருக்களித்து ஒருபுறமாகத் திரும்பி, மல்லாக்க படுத்து சாந்தி அல்லது சவாசனத்தில் 10-15 விநாடிகள் இருந்து விட்டு எழலாம். இப்பயிற்சியை தினமும் செய்து வர முதுகு வலி நன்கு குணமாகும்.

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.ethanthi.com. All rights reserved
close