கணையம் பாதிக்கப்படுவது எப்படி?





கணையம் பாதிக்கப்படுவது எப்படி?

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
சிலருக்கு - முக்கியமாக குழந்தை களுக்கு - காக்காக்ஸி, மஞ்சள் காமாலை, அம்மைக்கட்டு, ருபெல்லா முதலிய வைரஸ்களில் ஏதாவது ஒன்று கணையத்தை நேரடியாகத் தாக்கும் போது,
கணையம் பாதிக்கப்படுவது எப்படி?


பீட்டா செல்கள் முழுவதுமாக அழிந்து போவதால், அப்போது இன்சுலின் சுரப்பு அறவே இல்லாமல் போய் விடும். இதனால், அவர்களுக்கு டைப் 1 சர்க்கரை நோய் வருகிறது.

நமக்கு நோய்கள் வரும் போது, அந்த நோய்களி லிருந்து நம்மைக் காப்பதற்காக, ஒரு தற்காப்புப் படை நம் உடலில் செயல் படுகிறது.

இது உடலுக்குத் துன்பம் தரும் எதிரிகளை இனம் கண்டு, ‘எதிர் அணுக்கள்’ (Antibodies) எனும் படை வீரர்களை அனுப்பி, அந்த எதிரிகளை அழித்து, நம்மைப் பாதுகாக்கும்.

சில வேளைகளில், கணையத் திசுக்களில் உண்டாகிற ஏதேனும் ஒரு பாதிப்புக்காக இவ்வாறு எதிர் அணுக்கள் உருவாகும் போது, அவை தவறுதலாக கணையத்தில் உள்ள பீட்டா செல்களையும் எதிரிகளாக நினைத்துத் தாக்கி விடுகின்றன.

இதனால், பீட்டா செல்கள் அழிந்து விடுகின்றன; அப்போதும் உடலில் இன்சுலின் அறவே இல்லாமல் போகிறது. இதனாலும் டைப் 1 சர்க்கரை நோய் வருகிறது.

பலருக்கு பருமன், இன்சுலின் எதிர்ப்புத் தன்மை, பரம்பரை போன்ற காரணங்களால் டைப் 2 சர்க்கரை நோய் வருகிறது.

இவர்களுக்கு இன்சுலின் குறைந்த அளவில் சுரக்கிறது அல்லது  சுரக்கின்ற இன்சுலின் சரிவர வேலை செய்யாமல் இருக்கிறது. இதுதான் டைப் 2 சர்க்கரை நோய் வருவதற்குக் காரணம்.


கணைய அழற்சி கணையத்தில் சுரக்கும் செரிமான நீர்கள் மிகவும் கடுமையா னவை.

தங்கள் இயல்பை மீறி கணையத்தில் இவை தேங் குமானால், கணைய த்தையே அழித்து விடுகின்ற  அளவுக்கு மோசமா னவையும் கூட.

ஆகவே தான் கணையத்தை ஒரு ‘எரிமலை’ என்று சொல்வார்கள்.

பல நேரங்களில் சாதுவாக இருக்கிற கணையம் திடீரென்று எரிமலை யாகப் பொங்கி விடும், எனவே, இச்சுரப்பு நீர்கள் கணையத்தி லிருந்து உடனுக்குடன் முன் சிறு குடலுக்குச் சென்று விட வேண்டும். 

இல்லை யென்றால், கணையத் துக்கே அது ஆபத்தாகி விடும். கணையம் சில காரணங்க ளால் திடீரென்றோ, நாள்பட்டோ பாதிக்கப் படலாம். அப்போது கணையம் வீங்கி விடும். பிறகு அழுகி விடும்.

இறுதியாக கணையத்தில் ரத்தப் போக்கு ஏற்படும். அந்த நிலைமையைக் `கணைய அழற்சி’ (Pancreatitis) என்கிறோம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)