உடல் பருமன் என்றால் என்ன? அறிகுறிகள் என்ன?





உடல் பருமன் என்றால் என்ன? அறிகுறிகள் என்ன?

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
அளவுக்கு அதிகமாய் எடை இருப்பதே உடல் பருமன் எனப்படும். கொழுப்பை சேகரித்து வைப்பது உடல் இயக்கத்தின் சாதாரண ஒரு இயல்பு தான். 
உடல் பருமன் என்றால் என்ன? அறிகுறிகள் என்ன?

ஆனால், அதிகமாக கொழுப்பு சேர்வது ஆபத்தை உண்டாக்கும். எவ்வாறு கண்டறியலாம்? உடல் பருமனை கண்டறிய BMI பயன்படுத்தி அவர் எந்த வகையில் வருகிறார் என்று கண்டறியலாம். 

டான்சில் தொற்று வரக்காரணமும், தடுக்கும் முறையும் !
ஒருவரின் உயரம் மற்றும் எடையை பயன்படுத்தி BMI கண்டுபிடிக்க முடியும். உதாரணத்துக்கு ஒருவரது உயரம் 165 சென்டிமீட்டர் என்று வைத்துக் கொள்வோம். 

எடை 66 கிலோ கிராம். இரண்டையும் வகுக்கும் போது கிடைக்கும் எண்ணானது 24.2 BMI என்று கிடைக்கும். இதை இணைய தளங்களில் உள்ள BMI கால்குலேட்ட ரிலேயே பரிசோதனை செய்து கொள்ளலாம்.

எது உடல் பருமன்?

எடை நிலவரம் BMI வரம்பு

சராசரி 18.5 முதல் 24.9 kg/m2

அதிக எடை(Over weight) 25 முதல் 29.9 kg/m2

உடல் பருமன் (Grade I) 30 முதல் 34.9 kg/m2

உடல் பருமன்(Grade II) 35 முதல் 39.9 kg/m2

உடல் பருமன் (Grade III) 40 அல்லது அதற்கு மேல்

உடல் பருமனை உண்டாக்கும் காரணங்கள்
உடல் பருமன் என்றால் என்ன? அறிகுறிகள் என்ன?

முதல் காரணம் மரபியல் ரீதியானது. குடும்பத்தில் யாரேனும் உடல் பருமனாக இருந்தால் உங்களுக்கும் உடல் பருமன் உண்டாகும்.

இரண்டாவது காரணம் உணவு முறை. கலோரிகள் அதிகம் உள்ள உணவுகளைத் தொடர்ந்து உண்டால் உடல் பருமன் ஏற்படும். 

நெய், வெண்ணெய், ஜாம், இனிப்பு, எண்ணெயில் பொரித்த உணவுகள் போன்ற வற்றில் கலோரிகள் அதிகம்.

பெண்கள் ஏன் குண்டாகி விடுகிறார்கள் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். பொதுவாகவே பெண்கள் 40 - 60 வயது வரை உடல் பருமன் அதிகமாக காணப்படு வார்கள். 
செங்குத்தாக இருக்கும் பால்டிவின் வீதி !
ஏனெனில் அவர்கள் வீட்டில் மீதி இருக்கும் உணவு வீணாகி விடக் கூடாது என்ற காரணத்தி னால் சாப்பிட்டு உடல் பருமன் ஆகி விடுகிறார்கள்.

அதிகமான கொழுப்பு நிறைந்த உணவை சாப்பிட்டு உடற்பயிற்சி செய்யாமல் இருந்தால் கொழுப்பு உடம்பில் தங்கி விட்டு உடல் பருமன் ஏற்படும். உடற்பயிற்சி செய்யாமல் இருந்தால் இதய நோயும் உண்டாகும்.

மன அழுத்தம், தனிமையில் இருப்பது, போர் அடிக்கும் போது, மனச்சோர்வின் அதிகமாக உணவு சாப்பிடுவார்கள். உடலில் அதிகளவு கொழுப்பு தங்கி உடல் பருமன் ஏற்படும்.

ஒருவரிடம் அதிக பணம் இருந்தால் என்ன செய்வது என்று தெரியாமல் வெளியில் கிடைக்கும் அதிக கலோரி உள்ள உணவுகளை சாப்பிடும் வழக்கத்துக்கு ஆளாகி விடுவார். Abundant availability of food என்று இதனைச் சொல்லலாம். 
உடல் பருமன் என்றால் என்ன? அறிகுறிகள் என்ன?

மேலும் உடல் நலனைக் கெடுக்கும் தீய பழக்கங்களான குடிப்பழக்கம், புகை பிடிப்பது போன்றவையும் உடல் பருமனை உண்டாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

ஹார்மோன் குறைபாடு உள்ளிட்ட சில நோய்களாலும் உடல் பருமன் உண்டாகும்.

தைராய்டு, டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் சுரப்பு குறைபாடான Hypogonadism, அதீத ஹார்மோன் சுரப்பை உண்டாக்கும் Cushing syndrome போன்றவையும் பருமனை உண்டாக்குகின்றன.

எடை குறைவாக பிறக்கும் சில குழந்தை களும், நாளடைவில் சிறு வயதிலேயே உடல் பருமன் அதிகம் உள்ளவர்களாக மாறி விடுகிறார்கள்.
சதுப்பு நிலக் காடுகள் இல்லை என்றால் என்னாகும்?
உடல் பருமன் அறிகுறிகள்

உயர் ரத்த அழுத்தம், மூச்சு விடுவதில் சிரமம், சருமம் பிரச்னை, இரண்டாம் வகை சர்க்கரை நோய், மூட்டு வலி, முதுகு வலி, மாரடைப்பு, 

நுரையீரல் பிரச்னை, மன அழுத்தம், புற்றுநோய், தூக்கம் இல்லாமல் இருப்பது, ஞாபக மறதி, Gout, Gall மற்றும் பித்தப்பை கற்கள்

உடல் பருமனால் உண்டாகும் விளைவுகள்
உடல் பருமன் என்றால் என்ன? அறிகுறிகள் என்ன?

இதய நோய் மற்றும் பக்கவாதம், சர்க்கரை நோய், பெருங்குடல், மலக்குடல் புற்றுநோய் (Colorectal cancer), கீல்வாதம் (Osteoarthritis), 

பித்தப்பை பிரச்னை, மலட்டுத்தன்மை, தூக்கமின்மை, மனப்பிரச்னை, எலும்பு தேய்மானம் (Osteoporosis), போன்ற சிக்கல்களுக்கு ஆளாகின்றனர் .

வாய் அதிகம் வறட்சியடைவதற்கு காரணம் தெரியுமா?

உடல் பருமன் சிக்கலைச் சமாளிக்க விரும்பும் இளம் பருவத்தினர் மருத்துவரை அணுக வேண்டும் கலோரி அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலமும், உடல் செயல்பாடுகளை அதிகரிப்பதன் மூலமும் எடை குறைகிறது. 

ஒரு எடை மேலாண்மை திட்டத்திற்கு மருத்துவர் ஆலோசனை வழங்கலாம் மற்றும் டீனேஜரின் உணவு பழக்கத்தை மெதுவாக மாற்றலாம். 
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)