ஆஸ்டியோ போரோசிஸ் வர காரணமும் சிகிச்சையும் !





ஆஸ்டியோ போரோசிஸ் வர காரணமும் சிகிச்சையும் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
நோய்களுக்கும் பெண்கள் என்றால் ரொம்பப் பிடிக்கும் போல. அதனால் தான் பலதும் பெண்களைக் குறி வைத்தே தாக்குகின்றன ஆஸ்டியோ பொரோசிஸும் அப்படித் தான். 
ஆஸ்டியோ போரோசிஸ் வர காரணமும் சிகிச்சையும் !
அதென்ன ஆஸ்டியோ போரோசிஸ்? எலும்புப் புரை நோய், எலும்பு மெலிதல் நோய், எலும்புத் துளை நோய்... எப்படி வேண்டு மானாலும் சொல்லலாம். 

ஆஸ்டியோ போரோசிஸ் ஆண்களு க்கும் வரும். ஆனால், அரிதாகவே தாக்கும்! பெண்களையோ பாரபட்சமின்றி தாக்கும். 

ஆஸ்டியோ போரோசிஸ் என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்னென்ன? யாருக்கெல்லாம் வரும்? தவிர்க்க முடியுமா? தப்பிக்க வழி உண்டா? 
எல்லா வற்றையும் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் எலும்பு, மூட்டு சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஆறுமுகம். நம்முடைய எலும்புகளில் கால்சியம் சத்து குறைந்து, எலும்புகளின் அடர்த்தியும் குறைந்து, 

அவை உறுதித் தன்மையை இழந்து, மிருதுவாகும் நிலை தான் ஆஸ்டியோ போரோசிஸ். மனித உடலில் மிக உறுதியான பாகமான எலும்பு, ஆஸ்டியோ போரோசிஸ் தாக்கிய பிறகு, 

ஸ்பாஞ்ச் மாதிரி மிருதுவாக மாறும். 50 பிளஸ்சில் உள்ள பெண்கள் தான் இதனால் அதிகம் பாதிக்கப் படுகிறார்கள். அதாவது மெனோபாஸ் கால கட்டத்தில் இருக்கும் பெண்களையே இது குறி வைக்கும். 

மெனோபாஸ் காலத்தில், ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பது குறையத் தொடங்கும். அதன் விளைவாக கால்சியம் கிரகிக்க ப்படும் திறனும் குறையும். விளைவு..? ஆஸ்டியோ போரோசிஸ்!

சரி, எலும்புகள் மிருதுவானால் என்னாகும்?
ஆஸ்டியோ போரோசிஸ் வர காரணமும் சிகிச்சையும் !
ஆரோக்கி யமான ஒருவர், லேசாக கீழே விழுந்தாலோ, இடறினாலோ எலும்புகள் அத்தனை சீக்கிரத்தில் உடையாது. 

அதுவே ஆஸ்டியோ போரோசிஸ் பாதித்தவர் களுக்கு, லேசாக இடித்துக் கொண்டாலோ, வழுக்கி விழுந்தாலோ, எலும்புகள் உடையும்.

அறிகுறிகள்?
ஆஸ்டியோ போரோசிஸ் வர காரணமும் சிகிச்சையும் !
கால் வலி, மூட்டு வலி என எலும்புகள் இணைகிற இடங்களில் எல்லாம் வலி இருக்கும். மிதமான உடற்ப யிற்சிகள் கூட களைப் படையச் செய்யும். 

வலி தான் பிரதான அறிகுறி என்பதால், அதை வைத்து, ஆஸ்டியோ பொரோசிஸாக இருக்குமோ என யாருக்கும் சந்தேகிக்கத் தோன்றாது. 

அடிபட்டோ, கீழே விழுந்தோ, எலும்புகள் நொறுங்கும் போது தான், அதன் வீரியம் தெரியும். முதுகெலும்பு, இடுப்பெலும்பு, விலா எலும்பு மற்றும் மணிக்கட்டுப் பகுதிகளில் இந்த பாதிப்பை அதிகம் காணலாம்.

எலும்புகள் அடர்த்தி இழப்பதேன்?
ஆஸ்டியோ போரோசிஸ் வர காரணமும் சிகிச்சையும் !
நன்றாக இருந்த எலும்புகள், திடீரென ஏன் தம் அடர்த்தியை இழக்க வேண்டும்? எலும்பு களின் அடர்த்தியைப் பொறுத்தே, அவற்றின் உறுதித் தன்மை தீர்மானிக்கப்படும். 

பெண்களை விட, ஆண்களு க்கு இயல்பிலேயே எலும்புகளின் அடர்த்தி அதிகம். அதனால் தான், அவர்கள் ஆஸ்டியோ பொரோசிஸால் அரிதாகவே பாதிக்கப் படுகிறார்கள். 

எலும்புகளின் அடர்த்தி யானது குழந்தைப் பருவத்தில் அதிகரிக்கத் தொடங்கி, ஒருவரது 25வது வயதில் உச்சத்தில் இருக்கும். 

வயதாக, ஆக, அதாவது 35 க்குப் பிறகு, அந்த அடர்த்தி மெல்ல மெல்லக் குறைய ஆரம்பிக்கும். 

வருடத்துக் கொரு முறை முதுமையின் காரணமாக, 0.3 முதல் 0.5 சதவிகிதம் வரை எலும்புகளின் அடர்த்தி குறைந்து கொண்டே வரும்.

எப்படிக் கண்டுபிடிப்பது?

ஆஸ்டியோ போரோசிஸ் வர காரணமும் சிகிச்சையும் !
DEXA என்கிற ஸ்கேன் மூலம் நடு முதுகெலும்பு, இடுப்பெலும்பு ஆகிய வற்றின் அடர்த்தியைக் கண்டு பிடிக்கலாம். இந்த ஸ்கேன் செய்ய ரூ.2,500 செலவாகும். T score என்கிற அளவீட்டை வைத்து, 

ஆஸ்டியோ போரோசிஸ் தானா என்பதைக் கண்டு பிடிப்பார்கள். T score மைனஸ் 1 ஆக இருக்க வேண்டும். அது மைனஸ் 3 அல்லது அதற்கும் கீழ் என்றால் ஆஸ்டியோ போரோசிஸ் உறுதி செய்யப் படும். 

மைனஸ் 1க்கும் மைனஸ் 2.5க்கும் இடைப் பட்டிருந்தால், அது ‘ஆஸ்டியோ பீனியா’ என்கிற நிலை. அதாவது ஆஸ்டியோ பொரோசிஸை நோக்கிய பயணத்தின் ஆரம்பக் கட்டம்!
சிகிச்சைகள்?
ஆஸ்டியோ போரோசிஸ் வர காரணமும் சிகிச்சையும் !
தினசரி உடலின் இயக்கத்து க்கு கால்சியம் மிக அவசியம். அதற்குப் போதுமான கால்சியம் சேராத பட்சத்தில், அது எலும்புகளில் இருந்து தேவையான கால்சியத்தை எடுத்துக் கொள்ளும். 

இதைத் தவிர்க்கவும், புதிய செல்கள் உருவாகவும் மருந்துகள் உள்ளன. மருத்துவரின் ஆலோசனை யின் பேரில் கால்சியம் சப்ளிமென்ட்டுகளை எடுத்துக் கொள்ளலாம். 

கால்சியம் உடலில் சேர, வைட்டமின் டி3 சத்து மிக அவசியம். வைட்டமின் டி3 சத்தை சூரிய வெளிச்சத்தி லிருந்து மட்டுமே பெற முடியும். 

ஆனால், இன்று வெயிலுக்குப் பயந்து கொண்டு, தலை முதல் கால் வரை மூடி மறைத்துக் கொண்டு தான் வெளியே செல்கிறார்கள் பெண்கள். 

குறிப்பாக இஸ்லாமிய பெண்கள், பர்தா அணிந்த படியே வெளியில் செல்வதால், 

அவர்களுக்கு வைட்டமின் டி3 குறைபாடு ஏற்படும் வாய்ப்பு அதிகமாகி, அதன் விளைவாக ஆஸ்டியோ போரோசிஸ் வரும் ஆபத்தும் அதிகம்.

வைட்டமின் டி3 குறைபாடு உள்ளதா என்பதை ரத்தப் பரிசோதனையின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

அப்படியிருந்தால், வைட்டமின் டி3 மருந்தை வாரம் ஒரு முறை என 6 வாரங்களு க்கும், பிறகு மாதம் ஒரு முறையும் தர வேண்டி யிருக்கும்.

கர்ப்பப் பையை சீக்கிரமே அகற்றி விட்ட பெண்களுக்கு ஆஸ்டியோ போரோசிஸ் தாக்கும் அபாயம் அதிகம். 

அவர்களுக்கு ஹார்மோன் ரீப்ளேஸ் மென்ட் தெரபியுடன், கால்சியம் சப்ளி மென்ட்டுகளும் தர வேண்டும். 

எலும்புகளில் கால்சியம் சேரச் செய்வதற் கான பிரத்யேக ஊசிகளும் உள்ளன. வருடம் ஒரு முறை அந்த ஊசியைப் போட்டால், ஒரு வருடத்து க்குப் பலன் இருக்கும்.

மூக்கின் வழியே இழுத்துக் கொள்ளக் கூடிய ஸ்பிரே வகை மருந்துகளும் உள்ளன. அவை, எலும்புகளில் உள்ள கால்சியத்தை, உடல் இழுத்துக் கொள்வதைத் தடுக்கும். 

ஒரு வேளை எலும்பு முறிந்தால், அறுவை சிகிச்சையும் தேவைப் படலாம்.

தப்பிக்க வழி?
ஆஸ்டியோ போரோசிஸ் வர காரணமும் சிகிச்சையும் !
ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாறுவது தான் முதல் வழி. பருமன் பிரச்னை, ஆஸ்டியோ பொரோசிஸு க்கும் விதை போடலாம். 

ஜாக்கிரதை! உடற் பயிற்சி மட்டும் தான், இதற்கான ஒரே தீர்வு. கால்சியம் அதிகமுள்ள பால் மற்றும் பால் பொருள்கள், முட்டை போன்ற வற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். 
பால் குடித்தால் கால்சியம் சேரும் என லிட்டர் லிட்டராக பாலைக் குடித்துக் கொண்டு, உடற் பயிற்சியே இல்லாமல் இருந்தால், எடை கூடும். 

வெயிலே படாமல் இருப்பது பாதுகாப்பான தல்ல. அதிகாலை வெயிலும், அந்தி சாய்கிற நேரத்து வெயிலும், ஒன்றும் செய்யாது. தினம் சில நிமிடங்க ளாவது வெயில் உங்கள் மீது படட்டும்.”
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)