ஓரினச் சேர்க்கை மோகத்தால் மனைவியை கொன்ற இந்தியர் !

0
பிரிட்டன் நாட்டில் உள்ள மான்செஸ்ட்டர் பல்கலைக் கழகத்தில் படித்து வந்த ஜெசிக்கா, தன்னுடன் படித்த மித்தேஷ் பட்டேல் என்ற இந்திய வம்சாவளி மாணவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஓரினச் சேர்க்கை மோகத்தால் மனைவியை கொன்ற இந்தியர் !
இங்கிலாந்தின் வடகிழக்கில் உள்ள நார்த் யார்க் ஷைர் பகுதிக் குட்பட்ட மிடில்ஸ்பரோ நகரில் ராயல் சாலையில் ஜெசிக்கா - மித்தேஷ் பட்டேல் தம்பதியர் ஒரு மருந்து கடை நடத்தி, வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், இங்குள்ள லிந்தோர்ப்பே புறநகர் பகுதியில் உள்ள வீட்டில் கடந்த மே மாதம் ஜெசிக்கா (34) பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடித் தோற்ற நிலையில் இறந்து கிடந்தார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனை க்கு அனுப்பி வைத்தனர். 

அளவுக் கதிகமான இன்சுலின் ஊசி மருந்தை ஜெசிக்காவின் உடலில் செலுத்தி மயங்க வைத்த பின்னர், 

முகத்தை பிளாஸ்டிக் கவரால் பொத்தி, மூச்சுத் திணற வைத்து அவரை கொன்று விட்ட விபரம் பிரேதப் பரிசோதனை முடிவில் தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து, போலீசார் சந்தேகத்தின் பேரில் மித்தேஷ் பட்டேலை கைது செய்து விசாரித்த போது, தனக்கும் ஜெசிக்காவின் மரணத்துக்கு எந்த தொடர்பும் இல்லை என அவர் சாதித்தார். 
ஆனால், அவரது கைபேசியை ஆராய்ந்த போது போலீசாருக்கு பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வந்தது.

இளம் வயதில் இருந்தே ஆண்களுடனான ஓரினச் சேர்க்கையில் அதிகமான பிரியம் கொண்டிருந்த மித்தேஷ், திருமணத்து க்கு பின்னரும் இதை தொடர்ந்து வந்துள்ளார். 

உலகளாவிய அளவில் ஓரினச் சேர்க்கை பிரியர்களுக் காக உருவாக்கப்பட்ட ஒரு பிரத்யேக ஆப் மூலம் 

ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் வாழ்ந்து வரும் அமித் என்பவர் கடந்த 2015-ம் ஆண்டு அறிமுக மாகியுள்ளார்.

ஆஸ்திரேலியா சென்று தனது ஆசைப்படி அமித்துடன் தம்பதியராக சேர்ந்து வாழ மித்தேஷ் திட்டமிட்டார். 

ஆனால், இந்து சம்பிரதாயப் படி மனைவியை விவாகரத்து செய்வதில் உள்ள சிக்கலால் ஜெசிக்காவை தீர்த்துக் கட்ட திட்ட மிட்டார்.

மேலும், ஜெசிக்காவின் ஆயுள் இன்சூரன்ஸ் முதிர்ச்சி தொகையான 20 லட்சம் பவுண்டு பணமும் இந்த கொலை திட்டத்துக்கு தூபம் போட்டது. 
ஜெசிக்காவின் உடலில் இருந்து எடுக்கப்பட்டு உறை நிலையில் வைக்கப் பட்டிருந்த கரு முட்டையை அமித் உடலில் செலுத்தி பிள்ளை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவரது விபரீத புத்தி வேலை செய்தது.

இதை தொடர்ந்து, எப்படி அவரை கொல்லலாம்? என ஆலோசித்த மித்தேஷ், இது தொடர்பாக பல இணைய தளங்களில் அலசி, ஆராய தொடங்கினார். 

இறுதியாக, அதிகப் படியான இன்சுலின் மருந்தை செலுத்தி ஜெசிக்காவை கடந்த மே மாதம் 14-ம் தேதி கொன்றுள்ளார்.

இந்த கொலையில் தனக்கிருக்கும் தொடர்பை மறைப்பதற் காக வீட்டுக்குள் புகுந்த கொள்ளை யர்களின் கைவரிசை 

இது என்று போலீசாரை நம்ப வைப்பதற் காக சில பொருட்களை உடைத்து ‘செட்அப்’ காட்சிகளை உருவாக்கினார் என்பதும் போலீசாரின் புலன் விசாரணை மூலம் தெரிய வந்தது.
இதற்கான ஆதாரங்களின் அடிப்படையில் மித்தேஷ் பட்டேல் (37) மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை டீஸ்சைட் கிரவுன் நீதி மன்றத்தில் விசாரணை க்கு ஆஜர் படுத்தினர். 

இந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில் மித்தேஷ் பட்டேலுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.

இந்த தண்டனை காலத்தில் 30 ஆண்டுகள் வரை அவரை பரோலில் விடு விக்கவும் தடை பிறப்பிக்கப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)