செயற்கைக் கோள்ளை விண்ணில் செலுத்த உதவும் விமானம் !

0
செயற்கைக் கோள்களை விண்ணிற்கு செலுத்தும் வகையில் உலகின் மிகப்பெரிய 


விமானத்தை உருவாக்கி தனியார் விமான நிறுவனம் சாதனை படைத்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றே உலகின் மிகப்பெரிய விமானத்தை உருவாக்கி குறித்த சாதனையை படைத்துள்ளது. 

இந்த விமானம் செயற்கைக் கோள்களை விண்ணிற்கு செலுத்தும் வகையில் உருவாக்கப் பட்டுள்ளதாக வும். 

இரட்டை உடற்பகுதி கொண்ட இந்த விமானத்தின் இறக்கைகள் கால்பந்து மைதானம் அளவிற்கு மிக நீளமாக உள்ளதாக தெரிவிக்கப் படுகிறது.


ஸ்ட்ரடோலாஞ்ச் எனப் பெயரிடப் பட்டுள்ள இந்த விமானம் 250 டன் எடை மற்றும் 117 மீற்றர் நீளம் கொண்ட தாகும். 

6 மிகப்பெரிய என்ஜின்கள் பொருத்தப் பட்டுள்ளன. இதில் 6 எரிபொருள் தொட்டி உள்ளது.

113 டன் எரிபொருளை சேமிக்கும் வசதி கொண்டது. 28 சக்கரங்கள் ஆறு ஜெட் என்ஞ்சின் களுடன் பிரம்மாண்ட மாக கட்டமைக்கப் பட்டுள்ள

இந்த விமானம் தூரத்தில் இருந்து பார்க்கும் போது ஒரு மலை போல் காட்சி அளிக்கிறது. 

அவை அனைத்தும் தனித்தனியாக நிரப்பட்டு சரியாக செயல்படும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது.

1000 டன் வரை எடை கொண்ட சிறிய வகை ராக்கெட்டுகள் இந்த விமானத்தின் வயிற்றுப் பகுதியுடன் இணைக்கப் படும். 

35,000 அடி உயரத்தில் விமானம் பறக்கும் போது ராக்கெட்டுகள் விடுவிக்கப் பட்டு விண்ணில் ஏவப்படும்.


பின்னர் விமானம் தரைக்குத் திரும்பி அடுத்த ராக்கெட்டை எடுத்துச் செல்லும்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை விமானத்தை குறைந்த வேகத்தில் இயக்கி வெற்றிகரமாக சோதனை செய்யப் பட்டது. 

முழு சோதனை முடிவடைந்த பின் வருகின்ற ஆடி மாதம் தொடக்கத்தில் ஸ்ட்ரடோலாஞ்ச் விமானம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர் பார்க்கப் படுகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)