ATM மற்றும் கிரெடிட் கார்டு வைத்திருக்கிறீர்களா? வருகிறது ஆபத்து !

0
பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் பணப் பரிமாற்ற த்தை எளிதாக்க கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை அறிமுகப் படுத்தின. 


சமீப காலமாக ஆன் லைன் திருடர்கள் அதிகரித்து வருகின்றனர் என்பது தினமும் நாம் படிக்கும் செய்தியாகி விட்டது. 

தற்போது நாம் பயன்படுத்திக் கொண்டிரு க்கும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் பாதுகாப்பு வசதி குறை வானவை. 

இது வரை பதிவான ஆன்லைன் முறை கேடுகளை விசாரித்ததன் மூலம் இது தெரிய வந்திருக் கிறது. 

இதனால் புதிய பாதுகாப்பு அம்சம் கொண்ட கார்டுகளை அந்தந்த வங்கிகளில்

சென்று மாற்றிக் கொள்ளுமாறு இந்திய ரிசர்வ் வங்கி (RBI) உத்தர விட்டுள்ளது. 

வரும் டிசம்பர் 31 – ஆம் தேதிக்குள் பழைய கார்டுகளை மாற்ற அவகாசம் தரப்பட் டுள்ளது.

அறிந்து தெளிக !!
இந்தியாவில் 39 மில்லியன் கிரெடிட் கார்டு உபயோகிப் பாளர்களும் 944 மில்லியன் 
டெபிட் கார்டு உபயோகிப் பாளர்களும் இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
பழைய கார்டில் என்ன பிரச்சனை ?

தற்போது புழக்கத்தி லிருக்கும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் காந்தப் பட்டை ஒன்று கொடுக்கப் பட்டிருக்கும். 


கார்டின் விளிம்பில் கருப்பு நிறத்தில் இருப்பதே காந்தப் பட்டை (Magnetic Strip). 

அதில் சிறிய காந்தத் துகள்களின் வாயிலாக நமது தகவல்கள் சேமிக்கப் பட்டிருக்கும். 

அவையாவும் நிலைப் படுத்தப்பட்ட தகவல்கள் எனப்படும். இவற்றை எளிதாக 

ஆன்லைன் திருடர்கள் ஹேக் செய்து பயன் படுத்திக் கொள்ள முடியும். 

அதேபோல் நம் கார்டை நகலெடுக்கும் அளவிற்கு திருட்டுத் தொழில் அமோகமாக நடை பெறுகிறது.

புதிய பாதுகாப்பு அம்சம்

இனி மாற்றம் பெரும் கார்டுகளில் EMV என்னும் சிப் பொருத்தப் பட்டிருக்கும். 

இதிலுள்ள தகவல்கள் வங்கிக் கணக்குடன் மறையாக்கம் (Encrypted) செய்யப் பட்டிருக்கும். 

கார்டின் மேற்பகுதியில் தங்க நிறத்திலான பட்டை ஒன்று கொடுக்கப் பட்டிருப்பதே EMV ஆகும். 


உங்களுக்கு கொடுக்கப் பட்டிருக்கும் நன்கு இலக்க ரகசிய எண்ணை உள்ளீடு செய்தால் மட்டுமே கார்டை பயன்படுத்த முடியும்.

இது வங்கி யுடன் நேரடித் தொடர்பில் இருப்பதால் இதனை ஹேக் செய்வது 

நடக்காத காரியம் என்கிறார்கள் தொழில் நுட்பக் குழுவைச் சேர்ந்தவர்கள்.

விண்ணப்பிப்பது எப்படி ?

வாடிக்கை யாளர்கள் தங்களது வங்கிக்கு தங்களுடைய பாஸ்புக்கை எடுத்து சென்று 

அங்கு கொடுக்கப் படும் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தாலே போதுமானது. 

ஆன்லைன் மூலமாகவும் விண்ணப் பிக்கலாம். இதற்கென தனி கட்டணம் ஏதும் கிடையாது. 

எனவே கடைசி தினம் வரை காத்திருக் காமல் முன் கூட்டியே மாற்றி விடுவது சிறந்தது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)