வங்கி சேவை அக்கவுண்டில் இருந்து குறையும் பணம் !

வங்கி சேவையை பயன் படுத்தும் நாம், அவை எதற்கெ ல்லாம் நம்மிட மிருந்து பணத்தை எடுத்துக் கொள்கி ன்றன என்பதை கவனிக் காமல் விட்டு விடுகிறோம்.
வங்கி சேவை அக்கவுண்டில் இருந்து குறையும் பணம் !
ஆனால் சிறுக சிறுக அவை எடுக்கும் தொகையை கூட்டி பார்த்தால், அடேங்கப்பா.. என கூறும் அளவுக்கு அது பெரிதாக வந்து நிற்கும். இப்படி, வங்கிகள் எந்தெந்த சேவைகளுக் கெல்லாம்,

நமது கணக்கில் இருந்து பணத்தை எடுக் கின்றன, அல்லது அபராதம் விதிக்கி ன்றன என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

வங்கிகள் குறிப்பிட்ட அளவுக்கு பணத்தை அக்கவுண்டில் இருப்பு வைத்தே தீர வேண்டும் என்று நிபந்தனை விதிக் கின்றன.

இந்த தொகை வங்கிக்கு வங்கி மாறுபடும். அவ்வாறு குறிப்பிட்ட கையிரு ப்பைவிட குறைந்து விட்டால், அதற்காக வாடிக்கை யாளர் கணக்கில் இருந்து அபராத தொகையை வங்கிகள் எடுத்துக் கொள்கி ன்றன.

பண பரிமாற் றத்தை தற்காலிக மாக நிறுத்தி வைக்க வாடிக்கை யாளர்கள் கோரிக்கை விடுக்கும் போதும் சில வங்கிகள் கட்டணம் வசூலிக் கின்றன.

உதாரணத்திற்கு யாருக் காவது வாடிக்கையாளர் ஒருவர் காசோலை கொடுத்திருக்கலாம். அந்த நபர், பணம் எடுக்கும் முன்பாக, ஏதோ ஒரு காரணத்துக்காக வாடிக்கையாளர் அந்த பரிமாற்றத்தை நிறுத்த வங்கியை கோரலாம்.
அந்த சமயங் களில் கட்டணம் வசூலிக்கப் படுகிறது. சில வங்கிகளில் இச்சேவை இலவசம்.

டெபிட் கார்ட் பயன் பாட்டுக் காக கட்டணம் வசூலிக் கும் வங்கி களும் உண்டு. ரூ.100 முதல் ரூ.500க்குள் இது போல கட்டண ங்கள் வசூலிக்கப் படுகின்றன.

வங்கியி லுள்ள பண இருப்பு, பண பரிமாற்றம் போன்ற வற்றை தெரிவிக்க இ-மெயில் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளை வங்கிகள் அளிக்கி ன்றன. இதற்கு கட்டணம் வசூலிக்கப் படுகிறது.

வங்கி பரிவர்த் தனை குறித்த பேங்க் ஸ்டேட் மென்ட்டை வாடிக்கை யாளர்கள் கேட்டால் அதற்கு கட்டணம் வசூலிக்கப் படுகிறது.

குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நபர் அல்லது நிறுவன த்திற்கு நமது வங்கி கணக்கில் இருந்து தானியங்கி முறையில் பணம் செல்ல ஏற்பாடு செய்ய முடியும். இ.எம்.ஐ,, லோன் போன்ற வற்றின் போது இப்படித் தான் நடக்கிறது. 
குறிப்பிட்ட நாளில் வங்கி கணக்கில் போதிய இருப்பு இல்லை என்றால் வாடிக்கை யாளரிடம் வங்கி அபராதம் வசூலிக் கிறது.

நெட் பேங் அல்லது, ஏடிஎம் டெபிட் கார்டு பாஸ்வேர்டை மறந்து விட்டால் கூட சில வங்கிகள் புதிய பாஸ்வேர்ட் உருவாக்க கட்டணம் வசூலிக் கின்றன.
Tags:
Privacy and cookie settings