நரம்பு முடிச்சு நோய் வர காரணம் !

அதிக எடை, மலச்சிக்கல், கருவுற்றிருக்கும் காலத்தில் போதிய பராமரிப் பின்மை, அசை வற்றிருத்தல் போன்ற காரணங்களால் பெண் களுக்கு வரவாய்ப்பு அதிகம். 


பரம்பரையில் யாருக்கேனும் இருந்தாலும் இந்நோய் இரு பாலருக்கும் வரும். வயது முதிர்ந்தவர் களுக்கு இரத்த ஓட்ட பாதிப்பினால் வர வாய்ப்புண்டு.

கருவுற்றிரு க்கும் பெண்களுக்கு கால் பகுதிகளில் உள்ள இரத்த நாளங்களில் இரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால்,

பெரும்பாலான தாய் மார்களுக்கு 3 மாதங்கள் முதல் 12 மாதங்களுக்குள் இந்த நோய் வருகிறது. அதிக எடை உள்ளவர்கள், மற்றும் கொழுப்பு உள்ளவர் களுக்கும் இந்த நோய் எளிதில் வரும்.

பொதுவாக பிள்ளைப்பேறு, மெனோபாஸ், குடும்ப கட்டுப் பாட்டுக்கான அறுவை சிகிச்சை போன்ற காரணங்களால், ஆண்களை விட பெண்களுக்கே இந்நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
V+V+Diagram.JPG
அதிக நேரம் ஒரே இடத்தில் நின்று கொண்டே வேலை செய்வது, அசைவற்று ஒரே இடத்தில்அமர்ந்திருப்பது போன்ற வாழ்க்கை முறை உள்ளவ ர்களுக்கு வெரிகோஸ் வெயின் நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

வெரிகோஸ் வெயின் நோய்க்கான அறிகுறி கள் என்ன? தோலின் உட்புறத்தில் இரத்த நாளங்கள் நீண்டு தடித்திருப்பதைக் காண முடியும்.

கணுக்காலிலும், பாதங்களிலும் லேசான வீக்கம் காணப்படுதல். பாதங்கள் கனத்தும் வலியுடன் காணப்படு தல். 

பாதப்பகுதிகளில் சுளுக்கு மற்றும் சுண்டி இழுத்தல். கணுக்காலிலும், பாதங்களிலும் அரிப்பெடுத் தல் (இதனை சில சமயங்களில் உலர்ந்த சருமத்தின் காரணமாக ஏற்படும் நோயாக மருத்துவர்கள் தவறாக கருதிவிடுவது உண்டு)

வெரிகோஸ் வெயின் இருக்கும் இடத்தில் தோலின் நிறம் வேறுபட்டு காணப்படுதல். வருமுன் தடுக்க ?

இந்த நோயை வரும் முன் மட்டுமே தடுக்க முடியும். வந்து விட்டால் அதனை அவ்வளவு எளிதில் அகற்ற முடியாது.

மேலும் அதிகரிக் காமல் பார்த்துக் கொள்ளலாம். எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப் பதையோ, நின்று கொண்டு இருப்பதையோ தவிர்க்க வேண்டும்.

எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டே இருப்பது நல்லது. தொடைகளை இறுக்கும் ஆடைகளை அணி யக் கூடாது. தளர்ந்த ஆடைகளையே அணிய வேண்டும்.


எடை அதிகம் உள்ளவர்கள் கட்டாயம் அதனைக் குறைக்க முயற்சிக்க வேண்டும். எடை அதிகம் உள்ள பெண்கள் குதிகால் உயர்ந்த செருப்பு அணிவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

சிகிச்சை வாழ்க்கை முறையை மாற்றச் செய்வதில் இருந்துதான் இந்த நோய்க்கான சிகிச்சையைத் தொடங்க வேண்டும்.

இதன் மூலம் வெரி கோஸ் வெயின் புதிதாக உருவாவதைத் தடுப் பதுடன், ஏற்கனவே இருப்பவற்றால் வரும் வலி மற்றும் வேதனை களைக் குறைக்க முடி யும். 

அறுவை சிகிச்சை களாலோ, மற்ற விதிமுறை கள் மூலம் அகற்றுவதாலோ முழுமையாக பயன் கிடைக்காது. ஏனென்றால், மற்றொரு இரத்த நாளத்தின் மூலமாக இந்நோய் ஏற்பட வாய்ப்புண்டு. 

வெரிகோஸ் வெயின் நோய் வந்தபின்னர் அதனை அகற்றுவது கடினம் என்பதையும், வரும் முன் காப்பதற்கு முயல வேண்டும் என்பதுமே முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள்.
leg_vein_disease.jpg
ஆயுர்வேதத்தில் இந்நோயின் தன்மைக்கு ஏற்ப உள் மருந்துகள் உட்கொள் வதாலும், தைலங்கள் கொண்டு நீவி விடுவதாலும் மற்றும் முறையான பஞ்சகர்மா சிகிச்சையும் மிகுந்த பலனை அளிக்கின்றன.

கால் நரம்பு சுற்றிக் கொள்ளும் பிரச்சினை ஆண்களுக்குத் தான் அதிகம் வரும் என்பார்கள்.


இது பெண்களுக்கும் ஏற்பட வாய்ப்புண்டா? ஆண்களை விட பெண்களுக்குத் தான் அதிகம் வருவதற்கு வாய்ப்புள்ளது. 

பெண் களுக்கு சுரக்கும் ஹோர்மோன்கள் தான் இந்தப் பிரச்சினை ஏற்படுவதற்கு முக்கியக் காரண மாக அமைகிறது.
Tags: