ராஜஸ்தான் மாநிலத்தில் மருமகளுக்கு சிறுநீரகம் தானம் கொடுத்த மாமியார் !

0
ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சல்மர் நகரை சேர்ந்தவர் சோனிகா (32). திருமணமான இவர் தனது கணவர் மற்றும் மாமியார் கனிதேவி (60) உடன் வசித்து வந்தார். 
இந்நிலையில் சோனிகாவின் இரண்டு சிறு நீரகங்களும் செயலிழந் துள்ளது. 

இதை யடுத்து டயாலிஸிஸ் செய்து வந்த அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உடனடியாக செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறினர்.

சோனிகாவுக்கு அவரின் தாய் பன்வாரி தேவி, தந்தை மற்றும் சகோதரரின் சிறுநீரகம் பொருந்திய நிலையிலும் அவர்கள் யாரும் கொடுக்க முன் வரவில்லை. 

இதை யடுத்து சோனிகாவின் மாமியார் கனிதேவி தனது சிறுநீரகத்தை மருமகளுக்கு கொடுக்க முன் வந்தார்.

இதை யடுத்து சோனிகாவுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. 

என் மாமியாருக்கு நன்றி கடன் பட்டுள்ளேன், அவர் எனக்கு புதிய வாழ்க்கையை கொடுத்துள்ளார் என நெகிழ்ச்சியுடன் கூறி யுள்ளார் சோனிகா.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)