மஹாராஷ்டிர பஸ்சில் 'ஆதார் இல்லேன்னா இறங்கு' - நேர்ந்த பரிதாபம் !

0
மஹாராஷ்டிர மாநில போக்குவரத்துக் கழக பஸ்சில் பயணித்த மூதாட்டி, வயது சான்றுக்கு,
'ஆதார்' அடையாள அட்டையை காட்டாத தால், பஸ்சில் இருந்து இறக்கி விடப்பட்டார்.

மஹாராஷ்டிரா வில், முதல்வர், தேவேந்திர பட்னவிஸ் தலைமை யிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது.

மாநிலத்தில், 65 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு, அரசு போக்குவரத்துக் கழகத்தின், 

சாதாரண மற்றும் விரைவு பஸ்களில், 50 சதவீத கட்டண சலுகை வழங்கப் படுகிறது. 

இதற்காக, பயனாளி களுக்கு அடையாள அட்டையை மாநில அரசு வழங்கி யுள்ளது.

இந்நிலையில், அந்த மாநில போக்குவரத்துக் கழக பஸ்சில், மகன் மற்றும் மருமகளுடன், இரண்டு நாட்களுக்கு முன் பயணம் செய்த, 

கேசர் பென் ஷாம்ஜி தாரோத், 78, என்ற மூதாட்டியிடம், வயது சான்றுக்கான ஆதார் அட்டை இல்லை.

இதனால், அவர்களை நடுவழியில், பஸ்சில் இருந்து கண்டக்டர் இறக்கி விட்டுள்ளார்.

தங்களுக்கு நேர்ந்த பாதிப்பு குறித்து, மூதாட்டியின் மருமகள், ஷில்பா கூறியதாவது:

கடந்த வாரம், அவுரங்காபாதில் இருந்து, கல்யாண் என்ற நகருக்கு செல்லும் அரசு பஸ்சில் பயணித்த போது, 


மாமியாரு க்கு சலுகை கட்டண டிக்கெட் கேட்டோம்.வயது சான்றை காட்டும் படி கண்டக்டர் கூறினார். 

மாநில அரசு வழங்கியுள்ள மூத்த குடிமக்களுக் கான அடையாள அட்டையை காட்டினோம். 

அதை அவர் ஏற்காமல், ஆதார் அல்லது 'பான்' எனப்படும், வருமான வரிக்கான நிரந்தர கணக்கு எண் அட்டையை காட்டும்படி வற்புறுத்தினார்.

எங்களிடம் அந்த அட்டைகள் இல்லாததால், பஸ்சில் இருந்து, வலுக்கட்டாய மாக இறக்கி விட்டார். 

மற்றொரு பஸ்சில், கல்யாண் வந்தடைந்தோம். நடு வழியில் பஸ்சில் இருந்து எங்களை இறக்கி விட்ட கண்டக்டர் மீது, 

நடவடிக்கை எடுக்கக் கோரி, போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)