தரக்குறைவாக பேசியது தொடர்பாக கருணாஸ் வேலுார் சிறைக்கு மாற்றம் !

0
தமிழக முதல்வரையும், போலீசாரையும் தரக்குறைவாக பேசியது மற்றும் கலவரத்தை தூண்டும் வகையில் 
பேசியது தொடர்பாக வழக்கு பதிவு செய்திருந்த போலீசார் நடிகர் கருணாசை இன்று (23 ம் தேதி) காலையில் கைது செய்தனர்.

தொடர்ந்து அவர் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப் பட்டார். கருணாசை வரும் அக்.5ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தர விட்டார்.


சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கடந்த 16ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் நடிகரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் பேசுகையில்; 

முதல்வர் பழனிசாமி, தன்னை பார்த்து பயப்படுகிறார். இந்த அரசு அமைய தான் முக்கிய பங்கு வகித்தேன் என கருணாஸ் கூறியிருந்தார்.

அதோடு மட்டு மல்லாது, காவல்துறை அதிகாரியிட மும், யூனிபார்மை கழற்றி விட்டு வந்து மோத தயாரா என்ற சவாலும் விடுத்திருந்தார்.

இது தொடர்பாக, கலவரத்தை தூண்டுதல் மற்றும் கொலை மிரட்டல், கொலை முயற்சி உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

இதனிடையே, சாலி கிராமம் வீட்டில் இருந்த கருணாசை இன்று காலையில் போலீசார் கைது செய்தனர்.

முன்னதாக அவரது வீட்டின் முன்பு நூற்றுக்கணக் கான போலீசார் குவிக்கப் பட்டனர். 

போலீசார் வேனில் ஏற்றும் முன்பு நிருபர்களிடம் பேசிய கருணாஸ் :

என்னை கைது செய்ய சபாநாயகர் அனுமதி பெற்றார்களா என்று எனக்கு தெரியவில்லை. நாங்கள் சிறை செல்லவே பிறந்தவர்கள். 


சீவலப்பேரி பாண்டி வழி வந்தவர்கள். பேச்சுரிமைக்கு பங்கம் ஏற்பட் டுள்ளது. சட்டப்படி சந்திப்பேன் என்றார்.

தொடர்ந்து வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு பிறகு புழல் சிறையில் கருணாஸ் அடைக்கப் பட்டார். 

சில மணி நேரத்திற்கு பிறகு அவரை வேலுார் சிறைக்கு மாற்ற சிறை துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings