சக்தி வாய்ந்த ஏவுகணையை வெளியிடும் ரஷ்யா !

விமானம் தாங்கி கப்பலை மொத்தமாக அழித்து விடக்கூடிய அளவுக்கு சக்தி வாய்ந்த ஏவுகணையை ரஷ்யா தனது அணிவகுப்பு கண்காட்சியில் முதல் முறையாக வெளியிட வுள்ளது.
சக்தி வாய்ந்த ஏவுகணையை வெளியிடும் ரஷ்யா !
மே 9-ஆம் திகதி மாஸ்கோவில் நடைபெறவுள்ள வெற்றி தின அணி வகுப்பில் குறித்த ஏவுகணை அறிமுகம் செய்யப் படவுள்ளதாக அந்நாட்டு ராணுவ மந்திரி செர்ஜி ஷொய்கூ கூறியுள்ளார்.

Kinzhal என இந்த ஏவுகணைக்கு பெயர் வைக்கப் பட்டுள்ள நிலையில் இது எதிரிகளின் விமானம் தாங்கி கப்பலை அழித்து விடக்கூடிய அளவுக்கு மிகவும் சக்தி வாய்ந்ததாகும்.

தற்போது ரஷ்யாவின் தெற்கு இராணுவ மாவட்டத்தில் சோதனை முறையில் Kinzhal ஏவுகணை செயல் படுத்தப்பட்டு வருகிறது. 

இதோடு M2 ஏவுகணை- துப்பாக்கி அமைப்புகள், டெர்மினேட்டர் சண்டை வாகனங்கள், யுரான் -6 மற்றும் யுரான் -9 போர் ரோபோக்கள் போன்ற ஆயுதங்களும் அணிவகுப்பில் வைக்கப்பட வுள்ளன.
Kinzhal ஏவுகணை குறித்த அறிக்கையை அந்நாட்டு அதிபர் புடின் பாராளு மன்றத்தில் கடந்த மார்ச் மாதம் தனது ஆண்டு உரையின் போது வெளி யிட்டார்.

எல்லா வற்றுக்கும் மேலாக Kinzhal ஏவுகணை ஒலி வேகத்தை விட 10 மடங்கு வேகத்தில் பயணிக்கும் ஆற்றல் கொண்டது என்பது குறிப்பிடத் தக்கது.
Tags:
Privacy and cookie settings