ஓட்டுநர் இல்லாமல் ஓடிய ரயில் இஞ்சின் !

0
கர்நாடகா ரயில் நிலையத்தில் ஓட்டுநர் இல்லாமலேயே ரயில் இஞ்சின் ஒன்று 13 கிமீ வரை ஓடியது, 
ஓட்டுநர் இல்லாமல் ஓடிய ரயில் இஞ்சின் !
சினிமா பாணியில் பைக்கில் துரத்திய பணியாளர், இஞ்சின் மெதுவாக ஓடும் போது அதற்குள் ஏறி அதனை நிறுத்தி யுள்ளார். 

இந்தக் காட்சி சினிமா போல் அரங் கேறியது. புதன்கிழமை மதியம் மும்பை செல்லும் ரயில் கர்நாடகா வின் வாடி சந்திப்பு ரயில் நிலையத் துக்கு வந்தது. 

வாடி முதல் சோலாப்பூர் வரை பாதை மின்மய மாக்கப் படாததால் இங்கு மின் இஞ்சின் கழற்றப் பட்டு டீசல் இஞ்ஜின் சேர்க்கப் படுவது வழக்கம்.

டீசல் இஞ்ஜினை ஓட்டி வந்தவர் கீழே இறங்க அந்த இஞ்ஜின் மட்டும் ஓடத் தொடங்கியது. இதனையடுத்து பைக்கில் பணியாளர் இஞ்ஜினை துரத்தினர். 

இஞ்ஜின் மணிக்கு 30 கிமீ வேகத் தில் சென்று கொண்டி ருந்தது. உடனடி யாக அடுத்தடுத்த ரயில் நிலையங் களுக்கு தகவல் அளிக்கப் பட்டு அதே பாதை யில் வரும் ரயில்கள் நிறுத்தப் பட்டன.
20 நிமிட பைக் விரட்ட லுக்குப் பிறகு இஞ்ஜின் மெதுவாக ஓட ரயில்வே பணி யாளர் இஞ்சினில் ஏறி அதனைக் கட்டுப் படுத்தினார். 

நல்வார் ரயில் நிலையம் அருகே இஞ்சின் ஒரு வழியாக நிறுத்தப் பட்டது.

இஞ்சின் ஏன் தானாகவே ஓடியது என்பது குறித்து விசார ணைக்கு உத்தர விடப்பட் டுள்ளது. இதனால் அதிர்ஷ்ட வசமாக பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)