வருமான வரித்துறை பாஜகவின் கட்சியா? தமிழிசை !

0
இளைஞர் அணி, மகளிர் அணி போல் வருமான வரித்துறையும் பாஜகவின் ஒரு அணி என்று டிடிவி தரப்பு வழக்கறிஞர் குற்றச் சாட்டுக்கு தமிழிசை சவுந்தரராஜன் பதிலளித் துள்ளார்.
வருமான வரித்துறை பாஜகவின் கட்சியா? தமிழிசை !
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை கூறுகையில், வருமான வரித்துறை சோதனையை அரசியல் ஆக்குகிறார்கள். 

கைதேர்ந்த அரசியல் வாதிகளுக்கு, தவறு செய்து முறைகேடாக சொத்து சேர்த்து போலி நிறுவனங்களை நடத்தி சொத்து சேர்ப்ப பவர்கள் மீது வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தால் விமர்சிப்பதா? 

ஓராண்டாகத் தான் இந்த நடவடிக்கை. பணமதிப்பு நீக்க நடவடிக் கைக்குப் பிறகு கறுப்புப் பணத்தை வெளிக் கொண்டு வரும் நடவடிக்கையில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. 

இன்னும் 20 போலி நிறுவனங்களில் சோதனை நடக்க உள்ளது. இந்த ஓராண்டில் அல்ல இது தொடர்ந்து நடக்கும். ஒரு குடும்ப த்தை சோதனை செய்ய 1800 அதிகாரி களா என்று கேட்கி றார்கள். 

நான் திருப்பிக் கேட்கிறேன் 1800 அதிகாரிகள் சோதனை நடத்தும் அளவுக்கு ஒரு குடும்பம் உள்ளதா? வருமான வரித்துறை சோதனை காழ்ப் புணர்ச்சி காரண மாக என்கி றார்கள். இது ஆண்டு முழுவதும் நடக்கும் நடவடிக்கை. 

இதற்கு முன்னர் நடந்தி ருக்கிறது. அதிகாரிகள் தகவல் கிடைத்தால் அதை வைத்து சோதனைக்கு வரும் போது நீங்கள், அய்யா நாங்கள் வருமானத் துக்குட்பட்டு 
உழைத்து முறையாக வருமான வரி கட்டி உழைத்து சம்பாதித்த பணம் என்று காட்டுங்கள் சரியாக இருந்தால் போகப் போகிறார்கள். 

இது மக்களுக்கான நடவடிக்கை கன்னித்தீவு போல் நீண்டு கொண்டே போகிறது என்கிறார் ஸ்டாலின். இது பற்றி கவலைப்பட வேண்டும். வேறு எந்த மாநிலத் திலாவது இப்படி ஊழல் இருக் கிறதா என்று கேட்கிறேன்.

வருமான வரித்துறையை பாஜகவின் வருமானவரி அணி என்கிறார்கள். பாஜகவுக்கு வருமான வரித்துறை அணி என்று வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. 

அரசியல் ரீதியாக எங்களை எதிர் கொள்ள முடியாமல் இப்படி விமர்சிக் கிறார்கள். எங்களுக்கு இணை யாக உங்களை நாங்கள் நினைக்கவே இல்லை. நீங்கள் ஒரு கட்சியே அல்ல அணியாகத் தான் இயங்கி வருகிறீர்கள்''.

இவ்வாறு தமிழிசை கூறினார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings