கொசு ஏன் மனிதனை கடிக்கிறது?

வீட்டுல நிம்மதியா படுத்து தூங்க முடியல, கொசுத் தொல்லை தாங்க முடியல" என்கிறோம். 'எப்படித் தான் அடையாளம் கண்டு வருமோ இடம் மாற்றி படுத் தாலும் தேடி வந்து கடிக்கிறது' என்று சிலர் புலம்பு வதுண்டு. 

கொசு ஏன் மனிதனை கடிக்கிறது?
அப்படி என்ன விஷேசம் மனித ரத்தத் துக்கு. நாமே காரணம் சொல்லி விடுவோம். 'உன் ரத்தம் கொசுவு க்கு ரெம்ப பிடிச்சி ருக்கு, ரத்த வாடை கண்டு பிடித்து வந்து கடிக்கிறது என்போம். 

ஆனால் அந்த ரத்தத்தில் கொசுவுக்கு பிடித்தது எது? இந்தக் கேள்விக்கு விடை கண்டு பிடித்து இருக்கி றார்கள் விஞ்ஞானிகள்.
கொசுக்கள் மனித னையும், விலங்கு களையும் கடிக்கும் தன்மை உடையது. குறிப்பாக மனிதர் களையே கொசுக்கள் அதிகம் கடிக்கிறது. 
கியூலெக்ஸ் என்னும் ஒரு வகை கொசுவே பலவித நோய்கள் உருவாவ தற்கும் காரனமாக இருக்கிறது.

கலிபோர்னியா பல்கலைக் கழக பூச்சியியல் பற்றிய ஆய்வுக் குழு இதுகுறித்து ஆய்வில் ஈடுபட்டது. ஆய்வில் மனிதனை கொசு விரும்பி கடிப்பது ஏன் என்று தெரிய வந்துள்ளது. 

நாமறிந்த படியே நமது உடல் வாசனையே கொசுக் களை நம்மை நோக்கி ஈர்த்து வருகிறது. கொசுவின் தலைப் பக்கத்தில் உள்ள ரத்தம் உறிஞ்சும் குழாய் தான் வாசனை அறியும் உறுப்பாக செயல் படுகிறது. 

மற்ற கொசுக்களை விட கியுலெக்ஸ் இன கொசுக் களுக்கு இந்த உறுப்பு சிறப்பான அளவில் வளர்ச்சி அடைந்து இருப்பது குறிப்பிடத் தக்கது.

மேலும் நமது ரத்தத் தில் கலந்துள்ள சில ரசாய னங்களே கொசுவின் விருப்ப உணவு. இந்த குறிப்பிட்ட ரசாயனமே கொசுக் களுக்கு அழைப்பு விடுகிறது. 

கொசு ஏன் மனிதனை கடிக்கிறது?
உங்களை கொசு தேடி வந்து கடித்தால் கொசுவுக்கு பிடித்த மான ரசாயனக் கலவை உங்கள் ரத்தத்தில் அதிகம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள் ளுங்கள்.
"காற்றாடியை வேகமாக வைத்தும் பயனில்லை என்றால் கொசு வலை விரித்து வலைக் குள் நாம் போய்விட வேண்டியது தான். 

வேறென்ன செய்ய?" இரவில் தூங்க செல்லும் முன் குளித்து விட்டு தூங்க சென்றால் கொசு கடியில் இருந்து கொஞ்சம் தப்பிக்கலாம்.
Tags:
Privacy and cookie settings