இந்த பழக்கம் உங்களை வெற்றியாளர் ஆக்கும் !

வாழ்க்கை யில் குறை என்பது நாம் பார்க்கும் பார்வையில் தான் உள்ளது. நமக்குப் பிடித்த மான எந்த ஒரு செயலையும் அளவோடு வைத்துக் கொண்டால் 

இந்த பழக்கம் உங்களை வெற்றியாளர் ஆக்கும் !
நாம் போகும் பாதையை அது எப்போதுமே பாதிக்காது. டிவி பார்ப்பதில் ஆரம்பித்து மொபைல் கேம்ஸ், வீக் எண்ட் பார்ட்டி என உங்களின் லைஃப் ஸ்டைலைப் பாதிக்காத எதுவுமே சரி தான். 

ஆனால், அதை நீங்கள் கைக்குள் வைக்காமல் போனால் நிச்சயமாக உங்களின் முன்னேற்ற த்தைப் பாதிக்கும்.
வெற்றி கரமானவர் களிடம் இருக்கும் குணங்கள் குறித்து செய்யப் பட்ட மிகப் பெரிய ஆய்வு ஒன்றில், கீழ்க்காணும் ஐந்து குணங் களைப் பட்டியலிடு கிறார்கள். 

இதன் படி உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் நிச்சயமாக வெற்றி கரமான மனிதராகத் திகழ்வீர்கள்.

அடுத்த நாளுக் கான திட்ட மிடல் - ஒவ்வோர் ஆண்டும் புது வருடம் பிறக்கும் போது நாம் சில உறுதி மொழிகளை எடுப்போம். 

அது அடுத்த நாள் வரை தாங்குகிறதா அல்லது சில வாரங்கள் செல்கிறதா என்பது நமது மனத்திட த்தைப் பொறுத்துத் தான் சொல்ல முடியும். 

ஆயிரத்தில் ஒரு சிலர் தான் இது போன்ற புத்தாண்டு உறுதி மொழியைக் காப்பாற்று கிறார்கள். நாம் அவ்வளவு மெனக்கெட வேண்டாம். 

ஒவ்வொரு நாளும் படுக்கப் போகும் முன்பு, அடுத்த நாள் செய்ய வேண்டிய வேலை களை நினைவில் வைத்துக் கொள்வோம். முன்னேற்ற த்துக்கு மிகப் பெரிய பாலபாடம் இது தான்.

நேர மேலாண்மை - திட்ட மிட்ட வேலையை ஒழுங் காகவும் கவனம் சிதறா மலும் செய்து முடிக்க இது மிகவும் முக்கியம். 

கவனம் சிதறாமல்
உங்கள் வேலை களில் உடனே செய்ய வேண்டியது எது, அதிக நேரம் தேவைப் படும் வேலை எது எனக் கணக்குப் போட்டு அதற்குத் தகுந்தாற் போல் வேலையைத் தொடங்க வேண்டும்.

அளவான செலவுகள் - நடை, உடை போன்ற வற்றில் உங்களுக் கெனத் தனிப்பட்ட ஸ்டைல் வைத்தி ருப்பது போல, செலவழிப்ப திலும் உங்களு க்கெனக் குறிப்பிட்ட ஸ்டைல் இருக்கட்டும். 
வாழ்க்கை யில் தாழ்வுகளும் உயர்வு களும் அனைவரு க்கும் இருப்பது தான். பொருளா தாரச் சூழல் எப்படி இருந்தாலும் அளவான செலவுகள் செய்வதை வழக்க மாக்கிக் கொள்ளுங்கள். 

கையில் பணம் இருக்கிறதென அள்ளி வீசவும் வேண்டாம், இல்லை யென்று சோர்ந்து போகவும் வேண்டாம். 

உடைகளில் ஆரம்பித்து உணவு, கேளிக்கை என அளவான செலவுகள் செய்யும் வாழ்க்கை முறைக்கு மாறினால், நீங்களே எதிர் பாராத வகையில் பணம் சேமிப் பாகும்.

உடல்நலம் - இந்த உலகில் உங்களைத் தவிர வேறு யாராலும் உங்கள் நலத்தைப் பற்றி அக்கறை கொள்ள முடியாது. 
உங்கள் உடல் நலம் என்பது மிகப்பெரிய முதலீடு. உலகையே வெற்றி கொண்டு இந்தியா வரை வந்த மாவீரன் அலெக் ஸாண்டர் 33 வயதிலேயே காய்ச்ச லில் இறந்து போனார். 

அதிகாலை எழுவது, உடற்பயிற்சி, ஓட்டம், சைக்கிளிங் என உற்சாகமாய் ஒவ்வொரு நாளையும் தொடங்குங்கள்.

சரிபார்ப்பு - ஒவ்வொரு நாளின் போதும் அன்றைக்கு உங்களின் எதிர்கால லட்சியத்துக் காக என்ன செய்தீர்கள் என சிந்தித்துப் பாருங்கள். 

ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்கி, அன்றை க்குச் செய்த வேலைகள், அவற்றின் பலன்கள், 

அடுத்து செய்யப் போகும் வேலை எந்த அளவுக்கு உங்களின் வளர்ச்சி க்கு உதவப் போகிறது போன்ற வற்றைக் கணக்கிட்டுப் பாருங்கள். 

அதிகாலை எழுவது
இது ஒரு முக்கிய மான யுக்தி. தவறான வழி முறை களோடு தங்கள் கனவை நோக்கிய பயணத்தி லிருந்த பல வெற்றி யாளர் களைக் காப்பாற்றிய பழக்கம் இது.
மேற் குறிப்பிட்ட ஐந்து குணங்கள் உங்களிடம் இருந்தால், நிச்சய மாக வெற்றி யாளராகும் பயணத்தில் இருப்பீர்கள். 

இல்லை யெனில், இவற்றை இன்றே உங்கள் வாழ்க்கை யில் நடை முறைக்குக் கொண்டு வாருங்கள். வாழ்த்துகள்!
Tags: