வில்லங்கம் இருப்பது தெரியும்? நடிகர் சங்கம் !

'நடிகர் சங்கம் கட்ட தற்காலிகத் தடை', 'விஷாலுக்கு எதிராக திரையரங்க உரிமையாளர்கள் போர்க் கொடி' என அடுத்தடுத்து இரண்டு வேகத் தடைகள் விஷாலின் வெற்றி வேகத்தை குறைத்தி ருக்கிறது.
வில்லங்கம் இருப்பது தெரியும்? நடிகர் சங்கம் !
நடிகர் சங்கத்தின் தலைவர், செயலாளர் பொறுப்பு களில் இருந்த சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் நடிகர் சங்க இடத்தை தனியாருக்கு தாரை வார்த்து விட்டதாகக் கூறி பொங்கி எழுந்தனர் நடிகர் விஷால் தரப்பினர். 

தொடர்ச்சி யாக இதுகுறித்து நீதிமன்ற த்தில் வழக்கு நடத்தியும், சக நடிகர்க ளிடையே விழிப்பு உணர்வு பிரச்சாரமும் செய்து வந்தனர். 

இந்த நிலையில், நடிகர் சங்க தேர்தலில், சரத்குமார் அணியை எதிர்த்து விஷால் தரப்பில், நடிகர் நாசர், பொன் வண்ணன், கருணாஸ், கார்த்தி உள்ளி ட்டோர் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்று பொறுப்பு க்கும் வந்தனர். 

பணிகள் ஆரம்பம்
இதை யடுத்து, நடிகர் சங்க கட்டடம் கட்டுவது தொடர்பாக தனியார் நிறுவன த்துடன் சரத்குமார் தரப்பு செய்திருந்த ஒப்பந்தம் ரத்து செய்யப் பட்டது. 

கடந்த மார்ச் 31-ந்தேதி புதிதாக நடிகர் சங்க கட்டடப் பணிகளை ஆரம்பிப் பதற்காக பூஜையும் செய்யப் பட்டது. 

ரஜினி காந்த், கமல் ஹாசன் என தமிழ்த் திரையு லகின் உச்ச நடிகர்கள் இருவரும் செங்கல் களை எடுத்துக் கொடுத்து பணிகளை ஆரம்பித்து வைத்தனர். 

இந்த நிலையில், 'நடிகர் சங்க கட்டடப் பணிகளை உடனடி யாக நிறுத்த வேண்டும்' என்று அதிரடி உத்தரவைப் பிறப்பித்து ஒட்டு மொத்த கோடம் பாக்கத்து க்கும் அதிர்ச்சி அளித்திரு க்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.

பொது சாலை ஆக்கிரமிப்பு
பொது சாலையை ஆக்கிரமிப்பு செய்து நடிகர் சங்க கட்டட வேலைகள் நடை பெறுவதாக தொடரப் பட்ட வழக்கில் தான் இப்படி யொரு அதிரடி தீர்ப்பை நீதி மன்றம் உத்தர விட்டிருக் கிறது. 

இந்த வழக்கை தொடுத் துள்ள வித்யோதயா காலனி குடியிருப்பு வாசிகளிடம் பேசிய போது, 'எங்கள் காலனி யில் இருந்து மெயின் ரோட்டுக்கு சென்று வர வசதியாக இருந்த (அப்துல் முத்தலிப் ) 

சாலையை நடிகர் சங்கத்தினர் கேட் போட்டு மறித்து அவர்க ளுக்கு சொந்த மாக்கிக் கொண்டனர். இதை எதிர்த்து 2013-ம் ஆண்டே நாங்கள் வழக்கு தொடர்ந்து விட்டோம். 

சரத்குமார் அணி, விஷால் அணி
ஏற்கெனவே, நடிகர் சங்க இடத்தை தனியாருக்கு ஒப்பந்தம் செய்து கொடுத்து விட்டதாக சரத்குமார் அணிக்கும் விஷால் அணிக்கும் பிரச்னை எழுந்த போதே, 

இந்த இடத்திலும் வில்லங்கம் இருக்கிறது என்பது இரு தரப்புக்கும் தெரியும்.  

ஆனாலும், வெற்றி பெற்று பொறுப்புக்கு வந்து விட்ட பிறகு விஷால் அணியினர் தெரிந்தே நடிகர் சங்க கட்டட அடிக்கல் நாட்டு விழாவை நடத்தினர். 

ஆனாலும் நியாயம் எங்கள் பக்கம் இருக்கிறது என்பது இப்போது நீதிமன்றத் தீர்ப்பின் மூலமாக வெளிப் பட்டிருக்கிறது. இதுகுறித்து அட்வகேட் கமிஷ்னர் தலைமை யில் விசாரணை செய்ய விருக்கி றார்கள். 

அப்போது எங்கள் தரப்பில் உள்ள ஆதாரங்கள் அனைத் தையும் நாங்கள் கொடுத்து எங்கள் சாலையை மீட்டெ டுப்போம்'' என்கிறார்கள் உறுதி யாக.

நடிகர் சங்க மூத்த நிர்வாகிகள் சிலர் இந்த வில்லங்கம் குறித்துப் பேசும் போது, ''எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்திலேயே வாங்கப் பட்ட நிலம் இது. 
அப்போது மாலை நேரங்களில் ஓய்வாக காரில் அமர்ந்து பேசிக் கொள்ள வசதியாக பெரிய நடிகர்கள் எல்லோருமே வந்து போவார்கள். 

அப்போது அவர்களது பாதுகாப்புக் காக போலீசாரும் இந்த சாலை யின் இரு பக்கமும் தடுப்பு களை வைத்திருப் பார்கள். 

நாளடைவில் இந்த தடுப்புகள் நிரந்த ரமாக்கப் பட்டு, நடிகர் சங்கம் சார்பில் 'கேட்' போட்டு அடைத்தே விட்டார்கள். 

18 கிரவுண் ட்

ஆனாலும் பொது மக்கள் இது குறித்துப் பெரிதாக எந்த எதிர்ப்பும் காட்டாத தால், சங்க இடம் 14 கிரவுண் ட்டோடு சாலையின் மொத்தப் பரப்பான 4 கிரவுண்ட்டும் சேர்ந்து போனது. 

இப்போதும் நிலத்தின் பட்டாவில் மொத்தம் 18 கிரவுண் ட்டாகத் தான் காட்டப் பட்டிருக் கிறது. 

இந்தப் பட்டா இருக்கும் தைரியத்தில் தான் விஷால் தரப்பினரும் துணிச்ச லாக கட்டடம் கட்டும் பணிகளை ஆரம்பித்து விட்டனர். 

எதிர்த் தரப்புக்கு ஆதாரம்
ஆனாலும், பிரிட்டிஷ் காலத்தில் போடப் பட்ட லேஅவுட்டில், பிரச்னைக் குரிய இந்த சாலையைப் பற்றிய தெளிவான வரைபடம் இப்போதும் எதிர்த் தரப்புக்கு ஆதாரமாக இருக்கிறது. 

இந்த விஷயங் களைத் தெரிந்து கொண்டு தான் மூத்த நிர்வாகி களான நாங்களும், 

சங்க இடத்தில் உள்ள வில்லங் கத்தை முதலில் சரி செய்து விட்டு கட்டடப் பணிகளை ஆரம்பிக் கலாம் என்று விஷால் அணி யினரிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம். 

ஆனாலும், விடாப் பிடியாக 'எல்லா பிரச்னை களையும் சரிக் கட்டியாகி விட்டது. இனி எந்தப் பிரச்னையும் வராது' என்று சொல்லி மளமள வென்று கட்டடப் பணி களில் இறங்கி விட் டார்கள். 

துணிச்சலோடு 
'சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டும்; அதற் கிடையில் என்ன எதிர்ப்பு வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம்' என்ற அசட்டுத் துணிச்ச லோடே விஷால் தரப்பினர் செயல்படு கின்றனர். 

இதோ இப்போது நீதிமன்றத் தடை வந்து எல்லாப் பணிகளும் அப்படியே நின்று விட்டன... இனி என்ன செய்யப் போகிறார்கள்?'' என்று ஆதங்கப் படுகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் சங்க இடம் குறித்த வில்லங்கம் பற்றி முன்கூட்டியே தெரியுமா? என்ற கேள்வியுடன் விஷால் தரப்பினரிடம் பேசினோம்... 

சட்டப்படி
'வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் எல்லா விளக்கத்தையும் புள்ளி விவரமாக தெரிவிக்க முடியாது. 

ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் செய்து வரும் ஒவ்வொரு முயற் சிக்குமே எதிர்ப்புகள் வந்து கொண்டே தான் இருக்கின்றன. எல்லாவ ற்றையும் பொறுமை யாக சட்டப்படி சந்தித்தே வருகிறோம். 

இப்போது எழுந்துள்ள இந்தப் பிரச்னையிலும் எங்கள் தரப்பில், நியாயத்தை நிலை நாட்டுவதற் கான ஆவணங்கள் எங்கள் கைவசம் உள்ளன. 

முறைப்படி நீதிமன்றம் மூலமாகவே பிரச்னைகளை சரி செய்து சொன்னபடி நடிகர் சங்க கட்டடப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்கும் நாள் வெகு தொலை வில் இல்லை' என்று நம்பிக்கை தெரிவிக் கிறார்கள்.
எது எப்படியோ, திரைப் படங்களில் இல்லாத திருப்பங் களும்-மர்மங் களும் நடிகர் சங்க விவகார த்தில் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன!
Tags:
Privacy and cookie settings