ஜெயாவிற்கு சசி என்ன மாத்திரை கொடுத்தார்... கார் சாரதி திவாகர் !

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து, கொடநாட்டில் அவரிடம் பல வருடங்கள் பணிபுரிந்த கார் சாரதி திவாகர் சந்தேகம் எழுப்பி யுள்ளார்.
ஜெயாவிற்கு சசி என்ன  மாத்திரை கொடுத்தார்
ஜெயலலிதா வின் மர்ம மரணம் குறித்து மக்களிடையே பல்வேறு சந்தேகங் களும், கேள்விகளும் எழுந்து கொண்டிருக்கிறது. ஓ.பி. எஸ் அணி உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் இதுபற்றி கேள்வி எழுப்பி வருகின்றனர். 

இந்நிலையில், ஜெயலலிதா அடிக்கடி சென்று தங்கும் கொடநாட்டில் அவருக்கு கார் டிரைவராக பணியாற்றிய திவாகர் (42) என்பவர், என்பது ஜெயலலிதா வின் மர்ம மரணம் குறித்து சில பகீர் தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

2005ம் ஆண்டிலிருந்து 2009ம் ஆண்டு வரை ஜெயலலிதா கொட நாட்டிற்கு வரும் போது, அவருடைய வாகனத்திற்கு முன் வரும் பாதுகாப்பு வாகனத்தை நான் ஓட்டுவேன்.

அப்போது, ஜெயலலிதாவும், சசிகலாவும் பேசும் பல விஷயங் களை நான் அருகிலிருந்து கேட்டுள்ளேன். ஆனால் அதுபற்றி நான் வெளியே கூறியது கிடையாது. 

ஆனால், தற்போது நடந்துள்ள சம்பவங்களை பார்த்தால், ஜெயலலிதாவை கொல்வதற்கு அன்றைக்கே திட்டம் தீட்டியிருக்கலாம் என எனக்கு சந்தேகம் வருகிறது.
கொடநாட்டிற்கு ஜெயலலிதா வரும் போது, எஸ்டேட்டை சுற்றி பார்த்து விட்டு, அங்குள்ள ஏரியில் படகு சவாரி செய்வார். 

ஒரு நாள் படகு சவாரி செய்து விட்டு அவர் காரில் ஏறும் போது, தனக்கு உடல் வலி அதிகமாக இருப்பதாக அவர் சசிகலா விடம் கூறினார். 

அப்போது, சசிகலா விடம், வேலைக்கார பெண் சித்ரா ஒரு மாத்திரையை கொடுத்தார். அதை அவர் ஜெயலலிதா விடம் கொடுத்து சாப்பிட சொன்னார்.

அதை விழுங்கிய சில நொடிகளில், இப்போது எனக்கு வலி குறைந் துள்ளது என ஜெயலலிதா சொல்வார். அந்த மாத்திரையை அவருக்கு அடிக்கடி சசிகலா கொடுப்பதை நான் பார்த்திருக்கிறேன். 

சாப்பிட்ட உடனேயே உடல் வலி குறைகிறது எனில், அது மெல்லக் கொல்லும் ஆற்றல் உடைய வலி நிவாரணியாகத் தான் அந்த மாத்திரை இருக்க வேண்டும் என எனக்கு இப்போது சந்தேகம் வருகிறது.
அவரது மரணத்தில் குற்ற வாளிகள் தண்டிக்கப் பட வேண்டும் என அவர் பகீர் தகவலைக் கூறி யுள்ளார். 

கார் சாரதி தகவல் கொடநாட்டில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விடம் கார் சாரதியாக பணி புரிந்த திவாகர் என்பவர் சசிகலா குறித்து பல்வேறு தகவல்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளார்.
Tags:
Privacy and cookie settings