சிறுநீர், தாமதமாகவோ, சொட்டு சொட்டாகவோ வெளியேறுகிறதா?

புரோஸ்டேட் சுரப்பி (prostate gland) ஆண்களுக்கு மட்டுமே அமைந்துள்ள அதிசய சுரப்பி. ஆண்மைக்கு அழகு சேர்க்கும் இந்த சுரப்பி.
அடி வயிற்றில், சிறுநீர் பைக்கு கீழே, அதன் கழுத்து பகுதியை ஒட்டி சிறிய அளவில் அமைந்துள்ளது. சிறு வயதில் செயலற்று இருக்கும் இந்த சுரப்பி, பருவம் வந்தவுடன் விழித்துக் கொள்கிறது. 

முறுக்கிய மீசை, முறுக்கேறிய கைகள், திரண்ட தோள்கள், தீர்க்கமான பார்வை என, ஆண்மைக்கு அடையாளம் கொடுப்பது, டெஸ்டோஸ் டீரோன் என்ற ஹார்மோன்.

ஆண் பருவ வயதை அடையும் போது, இந்த ஹார்மோன் சுரக்கத் துவங்கும். இந்த ஹார்மோன் தான், சுருங்கிக் கிடக்கும் புரோஸ்டேட் சுரப்பியை வளர்ச்சி பெற செய்கிறது. 
இவ்வாறு வளர்ச்சி பெறும் புரோஸ்டேட் சுரப்பியில், சுரக்கும் ஒரு வகை திரவம், விந்தணுக்கு ஊட்ட சத்தாக உள்ளது. 

உடலுறவு நேரங்களில், ஆண் உயிரணு க்கள் எளிதாக நீந்திச் செல்ல இந்த திரவம் உதவியாக உள்ளது.

ஆண் உயிரணு வுக்கு ஊட்டச் சத்தை அளிக்கும் புரோஸ்டேட் சுரப்பி, வயதான நிலையில், மக்கர் செய்ய தொடங்குகிறது. 

இந்த சுரப்பி வீக்கம் அடைவதால் சிறுநீர் கழிப்பது தடை படுகிறது. சிலருக்கு இந்த சுரப்பியில் புற்று கட்டி உருவாகி, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத் துகிறது.
சிறுநீர் பையிலி ருந்து சிறுநீரை வெளி யேற்றும் குழாய், புரோஸ்டேட் சுரப்பிக்கு உட்புறமாக வந்து இனப்பெருக்க உறுப்பை அடைகிறது. 

இதனால், புரோஸ்டேட் சுரப்பியில் வீக்கம் அல்லது கட்டி இருந்தால், இச்சுரப்பிக்கு உட்புறமாக செல்லும் சிறுநீர் குழாய், இறுக்க மடைந்து, சிறு நீர் வெளியேறுவது தடைபடும். 

புரோஸ்டேட் சுரப்பியில் ஏற்படும் சாதாரண கட்டி அல்லது வீக்கத்தை எளிதில் குணப்படுத்தி விடலாம். ஆனால் அதுவே புற்றுக் கட்டியாக இரு ந்தால் ஆபத்து.

புரோஸ்டேட் சுரப்பி வீக்க மடைய காரணம் என்ன?

புரோஸ்டேட் சுரப்பி வீக்கமடைய இது தான் காரணம் என குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. 

வயதாகும் போது, ஹார்மோன் சுரப்பியில் ஏற்படும் சமச்சீரற்ற நிலையே புரோஸ்டேட் சுரப்பில் வீக்கம் ஏற்பட காரணம் என கருதப்படுகிறது. 
பொது வாக, 40 வயதுக்கு முன், புரோஸ்டேட் சுரப்பி வீக்கமடைவ தில்லை. 50 வயதுக்கு மேற்பட்டோரில் பாதி பேருக்கு, ஏதாவது ஒரு வகையில் புரோஸ்டேட் சுரப்பியில் பாதிப்பு ஏற்ப டுகிறது.

புரோஸ்டேட் சுரப்பி வீக்கமடைவதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

புரோஸ்டேட் சுரப்பி வீக்கம் அடைவதால், அச்சுரப்பிக்குள் புகுந்து வரும் சிறுநீர் குழாய் இறுக்கப்பட்டு, சிறுநீர் வெளியேறுவது தடைபடுகிறது. 

சிறுநீர் வெளியேறுவது தடைபட்டால், உடலின் இயக்கமும் பாதிக்கப்படும்.

அறிகுறிகள் என்ன?

சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு இருக்கும். ஆனால், சிறுநீர் உடனடியாக வெளியேறாமல் தாமதம் ஏற்படும். 

சிலருக்கு சொட்டு, சொட்டாக சிறுநீர் வெளியேறும். சிறுநீர் கழித்த, பின்பும் சிறுநீர் தானாக வெளியேறும்.

இரவில், அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். இந்த பாதிப்புகள் இருந்தால் புரோஸ்டேட் சுரப்பி வீக்கமாக இருக்கும்.

சாதாரண வீக்கத்துக்கு சிகிச்சை என்ன?

சாதாரண வீக்கம் எனில் மருந்து கொடுத்து வீக்கத்தை குறைக்கலாம். சிலருக்கு சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். சிகிச்சைக்கு பின் மற்றவர்களைப் போல் இயல்பாக வாழலாம்.

புரோஸ்டேட் புற்று யாருக்கு எல்லாம் வர வாய்ப்பு அதிகம்?

மது பழக்கம், கொழுப்பு மிகுந்த மாமிசங்களை சாப்பிடுபவர்கள், பாரம் பரியத்தில் அப்பா, தாத்தாவுக்கு இருந்தால், பூச்சிக் கொல்லி மருந்தை பயன்படுத்தும் விவசாயிகள், 
பெயின்டர்கள், டயர் தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் ஆகியோருக்கு, புரோஸ்டேட் சுரப்பியில் புற்று நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம். 

சைவ உணவு பழக்கம் உள்ளவர்களுக்கு, புரோஸ்டேட் புற்று வர வாய்ப்பு குறைவு. மீன் அதிகமாக சாப்பிடுபவர்களுக்கும், இந்நோய் ஏற்பட வாய்ப்பு குறைவு. 

ஜப்பானியர்கள் அதிகம் மீன் சாப்பிடுவதால், அவர்களுக்கு புரோஸ்டேட் புற்று நோய் வருவது குறைவு.

புரோஸ்டேட் சுரப்பி வீக்கத்தை உறுதி ப்படுத்துவது எப்படி?

முதல் கட்டமாக ஆசன வாய் வழியாக செய்யப்படும் டிஜிட்டல் ரெக்ட ல் பரிசோதனை மிக முக்கியமானது. இந்த சோதனையில் புரோஸ்டேட் சுரப்பியில் வீக்கம் அல்லது கட்டி இருந்தால் தெரிந்து விடும்.

அந்த கட்டி, கல் போன்று கடின மாக இருந்தால் அது புற்றுக்கட்டி என தீர்மானிக்கப்படுகிறது.  

இதைத் தொடர்ந்து நோயாளியின் தேவைக்கு ஏற்ப, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சி.டி., ஸ்கேன், எம். ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனை மூலம் நோய் உறுதி செய்யப்படும். 
மேலும் புற்று கட்டியா என்பதை உறுதி செய்ய திசு பரிசோதனையும் செய்யப்படும். பொதுவாக புற்றுக் கட்டி புரோஸ்டேட் சுரப்பியின் வெளிப்புற பகுதியில் தோன்றும்.

இது தவிர, சிறுநீர் வெளியேறும் வேகம், அடர்த்தியைக் கொண்டும் புரோஸ்டேட் சுரப்பியில் பிரச்னை இருப்பது உறுதி செய்யப்படுகிறது. 

சிறுநீர் கழிக்கும் போது,  சிறுநீர் பையிலிருந்து, சிறுநீர் முழுமை யாக வெளியேறி விட வேண்டும். 

அவ் வாறு வெளி யேறாமல் தேங்கியிருந்தால், பிரச்னை உள்ளது என முடிவு செய்யப்படுகிறது. சிறுநீர் வெளியேறும் தன்மையை அறிய யுரோப்ளோஸ்டடி சோதனை உள்ளது.

சிகிச்சை என்ன?

புரோஸ்டேட் சுரப்பியில் உள்ள கட்டி, புற்று கட்டியாக இருந்தால், அதன் வளர்ச் சியைப் பொறுத்து, சிகிச்சை முடிவு செய்யப் படுகிறது. 

ஆரம்ப நிலையில் இருந்தால், புரோஸ்டேட் சுரப்பி முழுவதுமாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படும். 

இந்த அறுவை சிகிச்சைக்கு முன், நோயாளியின் உடல்நிலை, அறுவை சிகிச்சைக்கு ஏற்றதாக உள்ளதா என பரிசோதிக்கப்படும். தகுதியாக இருந்தால் மட்டுமே, அறுவை சிகிச்சை செய்யப்படும். 

ஆண் ஹார் மோனான, டெஸ்டோஸ் டிரோன், புரோஸ்டேட் புற்றுக்கு ஊக்க மளித்து மேலும் வளர செய்வதால், அதைத் தடுக்க, ஹார்மோன் உற்பத்தியாகும் விதைப் பைகள் அப்புறப்படுத்தப்படும். 
புற்றுநோய் முற்றிய நிலையில், கீமோதெரபி, கதிரிய க்க சிகிச்சை மூலம் நோயை கட்டுப்படுத்தலாம். 

நோய் பாதித்த இடத்தில், துல்லிய மாக கதிரியக்க சிகிச்சை யளிக்கும் வகையில், நவீன பிரேகி தெரபி சிகிச்சை உள்ளது. 
ப்ரோஸ்டேட் பெரிதானால் ஏற்படும் விளைவுகள்
உலகில் மற்ற நாட்டினரை ஒப்பிடும் போது, ஆசிய நாட் டைச் சேர்ந்தவர் களுக்கு புரோஸ்டேட் புற்று வருவது குறைவு. 

பெரும்பாலும், 60 வயதுக்கு மேல் வரும். அப்படியே வயோதிகத்தில் நோய் ஏற்பட்டாலும், மிக மெதுவாகத் தான் பரவும்.
Tags: