உதடு வெடிப்புக்கு சிறந்தது எது?

குளிர்காலம் வந்தாலே உங்கள் சருமமும், தலைமுடியும், உதடு களும் வறண்டு காணப்படும். இவற்றை பராமரிக்க நாம் கடைகளில் கிடைக்கும் க்ரீம் களையும், லோஷன் களையும், 
உதடு வெடிப்புக்கு சிறந்தது எது?


ஷாம்புக் களையும், லிப் பாம்களையும் வாங்க வேண்டிய தில்லை. எளிய முறையில் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே நமது சருமத்தை பராமரி க்கலாம்.

நமது சருமம் குளிர் காலத்தை உணரும் திறனை பெற்றுள்ளது. ஆனால், நமது உதடுகளோ இதை காட்டிலும் இரண்டு மடங்கு உணரும் திறனை பெற்றிரு க்கின்றது. 
நமது உதடுகளில் எண்ணெய் சுரக்கும் சுரப்பிகள் இல்லை. அதனால், குளிர் காலங் களில் அவைகளுக்கு போதுமான எண்ணெய் அல்லது ஈரப்பதம் கிடைப்ப தில்லை.

இதனால், நமது உடலில் உள்ள மற்ற சருமத்தைக் காட்டிலும் உதடு களுக்கு அதிக கவனம் தேவைப் படுகின்றது. 

குளிர் காலத்தில் நமது உதடுகள் வறண்டு, வெடிப்பு ஏற்பட்டு அழகற்று காட்சியளி க்கின்றது. 
வறண்ட வெடித்த உதடுகளை குணமாக்க வெண்ணெய், ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், பாலாடை போன்றவற்றை பயன்படுத்தலாம்.

இவற்றுள் தேங்காய் எண்ணெய் உங்கள் வெடித்த உதடுகளை சரிசெய் வதற்கு சிறந்ததாகும். 

இந்த எண்ணெய் உங்கள் உதடுகள் வறண்டு போவதை குறைத்து உதடுகளுக்கு தேவையான ஈரப் பதத்தை அளிக்கும். 

தேங்காய் எண்ணெய் உங்கள் வறண்ட வெடித்த உதடுகளைச் சுற்றி ஒரு படலத்தை ஏற்படுத்தி குளிர் காற்றில் இருந்து பாதுகாக்கும். 

தேங்காய் எண்ணெய் கொண்டு வெடித்த உதடுகளை சிகிச்சை செய்வத ற்கான சில வழிகளை பார்க்கலாம்.
• எப்பொழுதும் உங்கள் கைப்பையில் சிறிய தேங்காய் எண்ணெய் பாட்டில் ஒன்று எடுத்து செல்ல வேண்டும். போதுமான இடைவேளை களில் எண்ணையை தடவிக் கொள்ள வேண்டும். 

உங்கள் விரல் நுனிகளில் சிறிதளவு எடுத்துக் கொண்டு உங்கள் உதடுகளில் தடவிக் கொள்ள வேண்டும். 

தேங்காய் இது எண்ணெயை பயன்படுத்தி வெடித்த உதடுகளைச் சிகிச்சை செய்வ தற்கான சிறந்த வழியாகும். குளிர் காலங்களில் இதனை பயன் படுத்தி சிறந்த பலன்களை பெறுங்கள்.
• தேங்காய் எண்ணெயை இரவு படுப்பதற்கு முன் இதனை உங்கள் உதடுகளில் தடவி விடுங்கள் இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள். 

காலையில் எழுந்தவுடன் தண்ணீர் கொண்டு கழுவி விடுங்கள். பகல் நேரங்களில் மற்ற லிப் பாம்களை உபயோகிக்க மறந்து விடாதீர்கள்.
கார் மோதி தூக்கி வீசப்பட்ட டூவீலர் பைக்
• தேங்காய் எண்ணெயை திண்ம நிலையில் உபயோகி த்தால் உங்கள் உதடுகளுக்கு பயனு ள்ளதாக இருக்கும். 

மேலும் இது ஒரு இயற்கையான லிப் பாம் ஆகும். திண்ம வடிவத்தில் இருக்கும் இது தூய்மையா னதாகும். 
உதடு வெடிப்புக்கு சிறந்தது எது?


இந்த திண்ம வடிவில் உள்ள தேங்காய் எண்ணெ யானது தட்பவெட்ப நிலைகளு க்கு ஏற்றாற்போல் மாறுவதே இதன் ஒரே குறைபாடு ஆகும். இது அதிக தட்பவெட்ப நிலைக ளில் உருகி போய்விடும்.

• தேங்காய் எண்ணெயுடன் ஆலிவ் எண்ணெய் அல்லது பிற எண்ணெய்களின் கலவை உங்கள் உதடுகளுக்கு தேவையான ஈரப்பதத்தை அளிக்கும். இந்த கலவையை இரவு நேரங் களிலும் 
அல்லது பகல் நேரங்களிலும் தொடர்ந்து உபயோகி க்கலாம். இந்த கலவை உங்கள் உதடுகளுக்கு மிகுந்த பலனை அளிக்கும். மேலும் வறண்ட குளிர்ந்த காற்றிலி ருந்து உங்கள் உதடுகளை பாதுகாக்கும்.
Tags:
Privacy and cookie settings