EThanthi - தேன் சாப்பிடுவது எப்படி ? | How to eat honey?

Recent Posts

ஜெயலலிதா வினோதம் தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் About

Flash News

தேன் சாப்பிடுவது எப்படி ? | How to eat honey?

பேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...
எடை குறைப் பதற்காக, எடை கூட்டு வதற்காக, இருமல் நிற்பதற்காக. என அன்றாடம் தேனைப் பயன்படுத்து வோரின் எண்ணிக்கை அதிகம். இந்நிலை யில், நாம் கடைகளில் வாங்கிப் பயன்படுத்தும் தேன் சுத்தமானது தானா என்பதற்கு எந்த உத்தரவாத மும் இருப்ப தில்லை. 
 
எனவே, நல்ல தேனை எப்படிக் கண்டு பிடிப்பது... எப்படிச் சாப்பிடுவது? என்பது குறித்து சில தகவல் களை இங்கே பகிர்கிறார், சித்த மருத்துவர் அர்ஜுனன்.


“தேன், பல மருத்துவ குணங்க ளைக் கொண்டது. தேன் இல்லாமல் நமது ஆயுர்வேத மருத்துவம் இல்லை என்பது அனைவரு க்கும் தெரிந்த விஷயம் தான்.
ஆனால், பல கடைகளில் தேன் என்று சொல்லி சர்க்கரைத் தண்ணீ ரைத் தான் விற்பனை செய்கிறார்கள்

தேன் சாப்பிடுவது நல்லது. அதை சரியான முறையில் சாப்பிட் டால் மிகவும் நல்லது. அதனால், தேனைப் பற்றிய சில அடிப்படை விஷயங் களைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

சுத்தமான தேனை பேப்பரில் ஊற்றினால், ஊறாது. தண்ணீரில் இட்டால் கரையாமல் கம்பி போல அடியில் போய் விடும். இதை நாய் முகராது. அதே போல சுத்தமான தேனின் அருகில் எறும்பு வராது.

காய்ச்சிய தேன், காய்ச்சாத தேன் என்று இரண்டு வகைகள் உண்டு. தேனில் உள்ள பூவின்  மணம் போவதற் காக இரும்பைக் காய வைத்து அதை தேனில் வைப்பார்கள். இது காய்ச்சிய தேன். இது கொஞ்சம் நீர்த்தி ருக்கும்.
இதை இரண்டு ஆண்டுகளு க்குள் பயன் படுத்த வேண்டும். காய்ச்சாத தேன், மஞ்சளாக கெட்டியாக இருக்கும். ஆண்டுக் கணக்காக வைத்தி ருந்தாலும் கெடாது.

‘ஓடைத்தேன்’ என்பது தான் இருப்ப திலேயே மிகவும் கெட்டியாக இருக்கும் தேன். மிகவும் இடுக்கான பகுதிகளில் இருக்கும் தேன் கூடுகளில் இருந்து இது எடுக்கப் படுகிறது.

இதில் ஏதேனும் பழத்தைப் போட்டு வைத்தால், 200 ஆண்டுகளு க்குக் கூட கெடாது.  மலைவாழ் மக்கள் நிறைய பொருட்களைப் பதப்படுத்து வதற்கு இந்தத் தேனைத் தான் பயன் படுத்துவர்.  மரங்களில் இருக்கும் தேன்கூடுகள் மூலம் கிடைப்பது கொம்புத்தேன்.

பெரும்பாலும் கடைகளி ல் நமக்குக் கிடைப்பது இந்தத் தேன் தான். ஆனால், இதில் பொருட்க ளை அதிக நாட்கள் பதப்படுத்த முடியாது. ஆனால், இந்தத் தேன் நிறைய நாட்கள் கெடாமல் இருக்கும்.

தாம்பத் திய உறவில் சிறந்து விளங்க மலைவாழ் மக்கள் இரவு நேரத்தில் தேன் அருந்துவர். அவர்களு க்கு சளி, காய்ச்சல் இருந்தால், ஒரு ஸ்பூன் தேனைச் சாப்பிட்டு விட்டு வெயிலில் கட்டிலைப் போட்டு போர்த்திக் கொண்டு படுக்கும் பழக்கத்தை யும் கடை பிடிக்கிறார்கள்.

முகத்தில் வறட்சி, அதிகக் கொழுப்பு, குடல் சம்பந்த பட்ட  பிரச்னை எதுவாக இருந்தா லும், தேன் சாப்பிட்டால் சரியாகி விடும். காலையில் வெறும் வயிற்றில் தேனைச் சாப்பி ட்டால், தேவையி ல்லாத கொழுப்பு கரைந்து விடும். பலாப் பழமும் தேனும் கலந்து சாப்பிட  முகம் பொலிவாகும்.

உடலில் நீர் அதிகமாக இருப்பவர் களுக்கு தேன் ஒரு அருமருந்து.

சுடுதண் ணீரில் தேனைக் கலந்து பயன்ப டுத்தினால் தேனில் உள்ள மருத்துவ குணங்கள் நமக்குக் கிடைக் காது.

வயதானவர் களுக்கு தேனை தாராள மாகக் கொடுக்க லாம். சுத்தமான தேனை சர்க்கரை நோயாளிகள் சாப்பி ட்டால், சர்க்கரை அளவு ஏறாது;">
வெறும் தேன் குழந்தைக ளுக்கு உகந்த உணவு அல்ல. அதனால், பத்து வயதுக்குப் பிறகு குழந்தை களுக்குக் கொடுக்கத் தொடங் கலாம்.

ஆனால், நாட்டு மருந்து கொடுக்கும் போது... ஒரு வயது முதலே குழந்தைக ளுக்கு மருந்தோடு தேனைச் சேர்த்துக் கொடுக்க லாம்” என்ற அர்ஜுனன் நிறைவாக, “எந்த வயதினராக இருந் தாலும், ஒரு நாளைக்கு ஒரு டேபிள்ஸ் பூனுக்கு மேல் தேனைச் சாப்பிடக் கூடாது.


அதேபோல, தேனை நக்கித் தான் சாப்பிட வேண்டும். கண்டிப்பாக குடிக்கவோ விழுங் கவோ கூடாது. விழுங்கும் போது புரையேறி னால் உயிருக்கே ஆபத்தாகி விடும். நெய்யையும் தேனையும் சம அளவு சேர்த்தால், அது விஷமாக ஆகி விடும். 
 
மருந்து சாப்பிடும் போது சில சமயம் இவ்விரண் டையும் சேர்த்து சாப்பிட நேரிடும். அப்படி சாப்பிடும் போது ஒரு பங்கு தேனுக்கு கால் பங்கு நெய்க்கு மேல் கலக்கக் கூடாது” என்று எச்சரிக்கை செய்தார்... இ.ராஜவிபீஷிகா
Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close
Play Pause