வாயுவை அடக்குதல் நல்லதா, கெட்டதா? | Gas containment Good or Bad? - EThanthi

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

வாயுவை அடக்குதல் நல்லதா, கெட்டதா? | Gas containment Good or Bad?

Subscribe Via Email

உடலில் வாயு வெளியேறுவது மிகவும் சாதாரணமான செயல். ஆனால், நால்வர் மத்தியிலோ, பொது இடத்திலேயே இந்த சம்பவம் நடந்து விட்டால் ஒரு சில நிமிடங்கள் சிரிப்பு சரவெடியாய் வெடிக்கும், வாயு வெளியேற்றிய நபர், அந்த இடத்தை விட்டே வெளியேறி விடுவார்.
உடலில் செரிமானம் என்ற ஒன்று சரியாக நடந்தால் வாயு வெளியேற தான் செய்யும். நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவில் சிறு பங்காவது வாயு உருவாக காரணியாக இருக்கும். வாயு வரா விட்டால் தான் ஆரோக்கியத்தில் ஏதோ கோளாறு என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஒரு ஆரோகியமான நபருக்கு நாளுக்கு 14 முறை வரை வாயு வெளியேறும். வாயுவிலேயே இரண்டு வகை இருக்கிறது, நசுக்கி விடுவது, டர்ர்ர் என வெடிப்பது.

சத்தமாக வந்தால் நாற்றம் அடிக்காது, நசுக்கி விட்டால் தான் நாற்றம் அடிக்கும் என கூறுவோரும் இருக்கின்றனர். இதில், வாயு வெளியேறும் போது அதிகமாக நாற்றமடிப்பது உடல் நலனுக்கு நல்லதா? கெட்டதா?

நார்ச்சத்து!

உங்களிடம் இருந்து வெளியேறும் வாயு மிகவும் நாற்றம் அடித்தால், நீங்கள் அதிகமாக நார்ச்சத்து உணவுகள் எடுத்துக் கொண்டு வருகிறீர்கள் என்று அர்த்தம். 
மேலும், உங்கள் குடலில் நல்ல பாக்டீரியாக்கள் அதிகமாக இருக்கிறது என்பதை இது வெளிக் காட்டுகிறது.

ஹைட்ரஜன் சல்ஃபைடு!

வாயு வெளியேற்றத்தில் அதிக நாற்றம் அடிப்பதற்கு காரணம் ஹைட்ரஜன் சல்ஃபைடு தான். நாம் உட்கொள்ளும் பலவகையான உணவுகள் செரிமானம் ஆகும் போது ஹைட்ரஜன் சல்ஃபைடு உருவாகிறது. இது வாயுவை நாற்றம் அடைய செய்கிறது.

வயிறு ஆரோக்கியம்!

வெளியேறும் வாயு நாற்றம் அடித்தால், உங்கள் வயிறில் வேலைகள் சரியாக நடந்துக் கொண்டிருக்கிறது. உங்கள் வயிறு ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை இது வெளிக் காட்டுகிறது.
மீத்தேன் வாசனை!

வெளியேறும் வாயுவில் மீத்தேன் வாசனை வெளிப்பட்டால், உங்களுக்கு நோய்கள் உண்டாகும் வாய்ப்புகள் குறைவு, மற்றும் உங்கள் வாழ் நாள் சிறப்பாக அமையும்.

நோய்கள் காரணமல்ல!

சிலர் வெளியேறும் வாயு மிகவும் துர்நாற்றம் அடித்தால், சரியாக செரிமானம் ஆக வில்லையோ, உடல்நலத்தில் ஏதேனும் கோளாறோ என எண்ணு கின்றனர். 

இது முற்றிலும் தவறு. அதிகமாக துர்நாற்றம் அடித்தால், நீங்கள் ஹைட்ரஜன் சல்ஃபைடு உற்பத்தி செய்யும் உணவுகளை அதிகமாக உண்ணு கின்றனர் என்று தான் அர்த்தம்.

கவலை வேண்டாம்!

எனவே, இனிமேல், வெளிப்படும் வாயுவில் நாற்றம் அடித்தால், கவலை பட வேண்டாம். நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று எண்ணி சந்தோசப் படுங்கள். 
வாயு வெளியேறா விட்டால் தான் கவலை கொள்ள வேண்டும். உடலில் நார்ச்சத்து குறைவாக இருந்தால் தான் வாயு வெளியேறாது.

அடக்க வேண்டாம்!

முக்கியமாக, வாயுவை அடக்க வேண்டாம். இது முற்றிலும் தவறு. இதனால் தான் உடல் நலனுக்கு கேடு விளையும்.

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.ethanthi.com. All rights reserved
close