இனிமையான இனிக்கும் இன்றைய தூக்கம் !

தூக்கம் அவ்வளவு ரசனையான அனுபவம். தூங்கச் செல்லும் முன் குளிர்ந்த நீரில் ஒரு குட்டிக் குளியல். காலை முதல் உடலில் தேங்கிய சோம்பல் கரைந்து போகும். நரம்புகளில் உற்சாக மொட்டுகள் விரிந்து மனதெங்கும் மண மணக்கும்.
விழிகளை மூடும் போது


தூங்குவதற் காக விழிகளை மூடும் போது இரண்டு பனித்துளிகள் இமைகளுக்கும் உருளும். பிடித்த விஷயங்களை நினைவுக்கு கொண்டு வந்து

உணர்வுகளில் மகிழ்ச்சி பரவ நமக்கே தெரியாத ஒரு நொடியில் தூங்கிப் போய் விடுவோம். இப்படியான தூக்க பயணத்தில் கனவுக் கப்பலில் ஏறிவிட்டால் சுவாரஸ்யங் களுக்கு பஞ்சம் ஏது!

இப்படியான தூக்கம் எந்நாளும் வாய்க்கிறதா? இது எல்லோருக்கும் சாத்தியமா? இப்படி பல கேள்விகள் தூக்கத்தின் பின்னால் விடை தெரியாமல் விழித்து நிற்கிறது.

தூங்கும் நேரத்தின் அளவு குறைந்து விட்டது. நெட்பூதம், பேஸ் புக் பிசாசு ,வாட்ஸ்அப் பேய் இப்படி பலதும் தூக்கத்தின் குரல்வளையை கடித்து ரத்தம் குடிக்கிறது தினமும்.

வேலை முடிந்து வீடு திரும்பிய பின் நள்ளிரவு வரை, தகவல் தொழில் நுட்ப பிசாசுகளின் சிக்கித் தவிப்பது வழக்கமான விஷயமாகி விட்டது. 

ஒரு நாள் நெட்வொர்க் இல்லா விட்டாலும் அவ்ளோதான். தலை வெடித்து விடும் அளவுக்கு டென்சன் எகிறுது.

இதனால் தினசரி தூங்க வேண்டிய நேரத்தின் அளவு குறைந்துள்ளது. குழந்தைகளும் இரவு 11 மணி வரை விழித்திருப்பது வழக்கமாகி விட்டது.

போதிய தூக்கம் இன்மையால் இவர்கள் வகுப்பறையில் முழுகவனத்துடன் இருக்க முடிவதில்லை. சோர்வின் காரணமாக படிப்பு பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

குறைவான நேரம் தூங்கும் குழந்தைகளுக்கு நிறைய சாப்பிடவேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது என மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. இவர்கள் அதிகமாக சாப்பிடுவதால், சிறுவயதிலேயே உடல் பருமன் பிரச்னைக்கு ஆளாகின்றனர்.

இதுமற்ற எல்லா பிரச்னை களுக்கும் காரணமாகி விடுகிறது. பெரியவர் களுக்கும் குறைந்த பட்சம் 6 மணி நேர தூக்கம் அவசியம். குறைவாக தூங்கும் போது மறுநாள் மூளை செயல்பாடுகள் கடினமாகிறது.
இன்றைய தூக்கம்


தவறான முடிவுகள் எடுக்க நேருகிறது. கவனம் செலுத்துவது மற்றும் கவனித் தவற்றை நினைவுக்கு கொண்டு வருவதும் சிரமம் ஆகும். கண்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும்.

கண்களைச் சுற்றிலும் கருவளையம் ஏற்படும். தோல் சுருக்கம் உண்டாகும். உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி பாதிப்புக்கு உள்ளாகும். உடலில் நோய்த் தொற்றை எதிர்த்து போராடும் தன்மை குறையும்.

அதிகம் சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கும். மறுநாள் சுறுசுறுப்பாக செயல்பட முடியாது. எவ்வளவு வேலை இருந்தாலும் குறிப்பிட்ட நேரம் தூங்குவதற்கு ஒதுக்க வேண்டும்.

தூங்குவதற்கு ஏற்ற மனநிலை மற்றும் சூழலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தகவல் தொழில்நுட்ப சாதனங்களை அளவோடு பயன்படுத்திப் பழகலாம்.

எல்லாம் சரியாக இருந்தும் தூக்கம் சரியாக வராவிட்டால் மனநல மருத்துவரை அணுகி தீர்வு காணலாம். இமைகளுக்குள் பனித்துளி உருள இனி ஒவ்வொரு நாளும் தூக்கம் இனிக்கட்டும்!
Tags:
Privacy and cookie settings