பல்வேறு நோய்களையும் போக்க வல்ல நன்னாரியின் சிறப்பு !

ஒரு பொருளின் பெயரிலேயே அதன் சிறப்பைப் புதைத்து வைத்திருப்பது சித்த மருத்துவத்தின் மகத்துவங்களில் ஒன்று. 
பல்வேறு நோய்களையும் போக்க வல்ல நன்னாரியின் சிறப்பு !

‘நல்ல + நாரி’ என்று பிரித்தால் பொருள் தரும் நன்னாரி, நம்மை அவதிப்படுத்தி வரும் பல்வேறு நோய்களையும் போக்க வல்லது. 

எல்லா இடங்களிலும் எளிதாகக் கிடைக்கும் நன்னாரி, இந்தியா முழுமையி லும் தானே வளர்கிற கொடி இனத்தைச் சார்ந்த ஒரு தாவரம். ஒரு மரத்தைச் சுற்றியோ, நிலத்தில் படர்ந்தோ வளரும் தன்மை கொண்டது 

நன்னாரி. மழைக் காலங்களில் மிகுதியாகக் காடுகளில் காணப்படும். இதன் இலைகள் மெலிந்தும் நீண்டும் இருக்கும். இலையை ஒடித்துப் பார்த்தால் பால் சுரப்பு இருக்கும்.
ஆடி, ஆவணி மாதங்களில் கொத்துக் கொத்தாக வெண்மை மலர்கள் பூத்திரு க்கும். இந்தக் கொடியின் பச்சை வேர் சற்று இனிப்பும் நறுமணமும் கொண்டது. உலர்ந்த பின்னரும் இதன் நறுமணம் அகலாது.

வெண்மை நன்னாரி, கருமை நன்னாரி என இரு விதமாகக் கிடைத்தாலும், இரண்டுமே ஒரேவிதமான மருத்துவ குணங்களைக் கொண்டவை தான்.

‘நறுநெட்டி’, ‘பாதாளமூலி’, ‘பாற்கொடி’, ‘நீறுண்டி’ என்று பல பெயர்களில் மருத்து வர்களால் அழைக்கப்படும் நன்னாரியில் பல வகைகளும் உள்ளன.

நாட்டு நன்னாரி, சீமை நன்னாரி, பெரு நன்னாரி, சிறு நன்னாரி எனவும் பல வகைகள் உள்ளன! நன்னாரியின் தாவரப்பெயர் ‘Hemidesmus indicus’. 

இந்தியா வைச் சேர்ந்த மூலிகை என்ற அர்த்தத்தால் ‘Indian sarsaparilla’ என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள்.

வடமொழியில் ‘ஸ்வேத ஸாரிவா’, ‘அனந்த மூலா’, ‘கோபி’, ‘கோபா’, ‘கோபகன்யா’, ‘கோபவல்லி’, ‘கோபசுதா’, ‘கிரிஷ்ஷோதர்’, ‘கபூரி’, ‘துக்தகர்ப்பா’ என்று பல பெயர்களால் அழைக்கி றார்கள்.

நன்னாரியில் அதன் காய்ந்த வேர் ஆரோக்கியத்தையும் உடல் பலத்தையும் அதிகரிக்க வல்லது. உடலின் கழிவுகளை வெளியேற்றும் வண்ணம் சிறுநீரை யும் வியர்வையையும் பெருக்க வல்லது.

சித்த, ஆயுர்வேத முறைகளில் நன்னாரியைக் காய்ச்சி, அதோடு பசும்பாலும் பனங்கற் கண்டும் சேர்த்துக் குடிப்பதற் காகப் பயன்படுத்துவர். 

‘தீநீர்’ எனப்படும் இந்த பானம் கல்லடைப்பு, நீர்ச்சுருக்கு, சிறு நீர்த்தாரையில் ஏற்படும் எரிச்சல், புண் ஆகியவற்றை குணப்படுத்தும் திறன் கொண்டது.

கிராமப்புற மருத்துவர்கள் செரிமானக் கோளாறு, பசியின்மை, அல்சர் எனும் வயிற்றுப்புண், காய்ச்சல், தோல் நோய்கள், புண்கள், வாயுவின் காரணத்தால் ஏற்பட்ட தசைப்பிடிப்பு,
பெண்களுக்குக் காணும் வெள்ளைப் போக்கு ஆகிய நோய்களைக் குணப்ப டுத்த நன்னாரியைப் பயன்படுத்துவர். நன்னாரியைத் தீநீராக்கிக் குடிப்பதால் ரத்தம் சுத்தமாவதோடு பித்தமும் தணிகிறது.

பித்தத்தால் உண்டான வாய்க்கசப்பைப் போக்குவ தற்கு நன்னாரித் தீநீருடன் சீரகத்தையும் சேர்த்து குடிக்கப் பயன்படுத்துவதும் வழக்கம். 

குழந்தை களுக்கு ஏற்படும் இருமல், அஜீரணம், வயிற்றுப் போக்கு ஆகிய வற்றை விரைவில் குணமாக்க நன்னாரிவேர் தீநீர் தயாரித்து அதனோடு போதிய பாலும் வெல்ல மும் சேர்த்து கொடுக்கலாம். இது பாதுகாப்பானது.

பக்க விளைவுகள் ஏதும் இல்லாதது, செலவிலும் குறைவானது. சுவையாக இருக்கும் என்பதால் பிள்ளைகளும் மறுக்காமல் பருகி விடுவார்கள். 

நன்னாரி என்றவுடன் நமக்கு நினைவுக்கு வரும் நன்னாரி சர்பத்தும் பல்வேறு நன்மைக ளைத் தரக்கூடியதே.
நன்னாரியில் எண்ணற்ற மருத்துவப் பலன்கள் கிடைக்கிறது. ரத்தத்தைத் தூய் மைப் படுத்தவும், ஆண், பெண் என இரு பாலருக்கும் உண்டாகும் வெள்ளை ஒழுக்கு போன்ற பால்வினை நோய்களையும் குணப்படுத் தவல்லது.
 பல்வேறு நோய்களையும் போக்க வல்ல நன்னாரியின் சிறப்பு !

பாலூட்டும் தாய்மார்களுக்குப் பால் போதாத நிலையில் நன்னாரி தீநீர் கொடுத் தால் தாய்ப்பால் பெருகும். வயிற்றுப்போக்கு, சீதபேதி, காலரா, மூட்டுவலிகள், காய்ச்சல் என பல நோய்களை தணிக்கக் கூடியது.

நீண்ட நாளாக உடல் நலமின்றி வாடியவர் களுக்கு சிறந்த உடல் தேற்றியா கவும் நன்னாரியைப் பயன்படுத்தலாம். 

தோலின் மேற்புறத்தில் ஏற்படும் நிறமிக்குறைபாடான வெண்புள்ளிகள் ஏற்படுவதைத் தடுப்பதற்கும், குணப்படுத் துவதற்கும் நன்னாரி பயன்படுகிறது.
ரத்தத்தைக் கட்டுப் படுத்தவும், புண்களை ஆற்றவும் நன்னாரிக்கு சக்தி இருப்ப தால் ஆசன வாயினி லிருந்து ரத்தம் வெளியாகச் செய்கிற ரத்த மூலநோய் குணமாவதற்கும் நன்னாரி தீநீர் பயன்படும். 

ரத்தம், சீதம் ஆகியவை கலந்து வயிற்றைக் கடுமையாக வலிக்கச் செய்து வெளியாகிற சீதபேதியும் நன்னாரி யைப் பயன் படுத்துவதால் குணமாகும்.

நன்னாரி வேரினின்று எடுக்கப்படும் வேதிப்பொருட்கள் நோய்களை உண்டாக் கும் பாக்டீரியாக் களை அழிக்க வல்லது.

குறிப்பாக தொழுநோயைத் தணிக்கக் கூடிய மருத்துவ குணம் நன்னாரியில் உள்ளது. வெயில் காலத்தில் நம்மை வதைக்கும் பல்வேறு நோய்களுக்கு எளிதான மருந்தாக நன்னாரி விளங்குகிறது.

நம் முன்னோர் சொன்னபடி இப்போதும் கூட நன்னாரியை நீரில் இட்டுக் காய்ச்சி, அதனுடன் வெல்லம், எலுமிச்சைச் சாறு கலந்து கோடைக் காலங் களில் சர்பத்தாக பயன்படுத்தினர்.

இது தான் ‘நன்னாரி சர்பத்’ என்ற பெயரில் கடைகளில் விற்கப்படுகிறது. கோடைக்கால வெயிலையும் அதன் தாக்கத்தை யும் நாம் எதிர் கொள்ளும் வித த்தில் நாட்டு மருந்துக் கடைகளில் விற்கக்கூடிய

நன்னாரி வேர்க் கட்டைக ளை வாங்கி வந்து வைத்துக் கொண்டு ஒரு பானையில் நீர் ஊற்றிச் சில நன் னாரித் துண்டுகளை போட்டு வைத்தால் நல்லதோர் குடிநீராக நமக்குக் கிடைக்கும்.
 பல்வேறு நோய்களையும் போக்க வல்ல நன்னாரியின் சிறப்பு !

இது உடல் வெப்பத்தைக் குறைப்பதோடு சிறுநீரகம் சம்பந்தப்பட்ட துன்பங்க ளையும் போக்குவதாக அமையும்.

நன்னாரியை நீரில் இழைத்து மேல் பூச்சாகப் பயன் படுத்துவதால் உடல்வலி போகும். உடலைக் குளிர்ச்சிப் படுத்தவும் உதவும். நன்னாரி வேர் மலச்சிக் கலை போக்கக்கூடிய மருத்துவ குணங்களும் பொருந்தியது.
மேலும், இரைப்பையைச் சேதப் படுத்தும் அமிலத் தன்மையையும் குறைப்ப தோடு ரத்தத்தைச் சுத்தப் படுத்தவும் நன்னாரி உதவுகிறது. இதனுடன் ஈரல், மண்ணீரல் ஆகியவற்றின் வீக்கத்தைக் குணப்படுத்தக் கூடியது.

ஆஸ்துமா, ரத்தசோகை, மூட்டுவலி, சரும நோய்களைப் போக்கவல்லது. தினமும் நன்னாரி சர்பத் சாப்பிடுவதால் தாம்பத்தி யத்தில் ஆண்களுக்கு ஏற்படும் தாம்பத்தியக் குறைபாடு, உயிரணுக் குறைபாடு விலகும்.

இப்படி பல்வேறு மருத்துவ குணங்கள் பொதிந்த நன்னாரியை நோயாளிகள் மட்டுமின்றி நோய்த் தடுப்புக்காக மற்றவர்களும் பயன்படுத்துவது சிறந்தது. 

வெயில் காலத்தில் நம்மை வதைக்கும் பல்வேறு நோய்களுக்கு எளிதான மருந்தாக நன்னாரி விளங்குகிறது. பாலூட்டும் தாய் மார்களுக்குப் பால் போதாத நிலையில் நன்னாரி தீநீர் கொடுத்தால் தாய்ப்பால் பெருகும். 

இரவில் எவ்வளவு சீக்கிரம் தூங்கினாலும் காலையில் எழுந்து கொள்ள மிகவும் சிரமமாக இருக்கிறது. சில நேரங்களில் உடல் வலியும் இருக்கிறது.

இதற்கு என்னதான் தீர்வு? தூக்கப் பிரச்னைகளுக்கான சிறப்பு மருத்துவர் என்.ராமகிருஷ்ணன்... 

இரவில் 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் தூங்கி னாலும் காலையில் எழுந்திருக்க கஷ்டமாக இருக்கிறது என்றால் உங்களு க்கு புத்துணர்வான தூக்கம் இல்லை என்று அர்த்தம்.
இதை `நான் ரிஃப்ரெஷ்ஷிங் ஸ்லீப்’ (Non refreshing sleep) என்று சொல்வோம். தூக்கத்தில் மொத்தம் 4 நிலைகள் உள்ளன. இதில் எந்த நிலை பாதிக்கப் பட்டாலும் புத்துணர்வான தூக்கம் இருக்காது.

அதன் விளைவாகத் தான் காலையில் எழும் போது சோர்வாக உணர்கிறீர்கள். உடல் வலியும் கூட வருகிறது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுவார்கள்.

இதனால் அவர்களுக்கு தூக்கமானது பாதிக்கப்படும். மது, சிகரெட் போன்ற கெட்ட பழக்கங்கள் இருப்பவர்களும் ஆழ்ந்த தூக்கம் இல்லாமல் காலையில் எழுந்திருக்க மிகவும் கஷ்டப் படுவார்கள்.

குறட்டை விடும் பழக்கம் உள்ளவர் களுக்கும் தூக்கம் பாதிக்கப்படும். இவர்களுக்கு மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜன் அளவு குறைவதால் ஆழ்நிலை தூக்கம் பாதிக்கப்படும்.

சிலருக்கு கால்களில் வலி அல்லது வீக்கம் ஏற்பட்டு கூட சரியாக தூக்கம் வராமல் தவிப்பார்கள்.

இரவில் அதிகமாக காபி, டீ போன்ற பானங்களை குடிப்பவர் களுக்கும் நிம்மதியான நித்திரை இருக்காது. 

உங்களுக்கு எக்காரணத்தால் தூக்கம் பாதிக்கப் படுகிறது என கண்டறிந்து அதற்குரிய சிகிச்சையை அளித்து சரியாக்கி விடலாம்...’’
Tags: