மனதை கொள்ளையடிக்கும் சிக்கிம் மாநிலம் ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

மனதை கொள்ளையடிக்கும் சிக்கிம் மாநிலம் !

Subscribe Via Email

லைக் பண்ணுங்க... "
இந்தியாவின் இமயமலைத் தொடரில் அமைந்துள்ள சிக்கிம் மாநிலம் பல்வேறு சிறப்பம் சங்களை தன்னகத்தே கொண்டு சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்கிறது.
இந்தியாவின் இமயமலை


7096 சதுர கிலோமீற்றர் பரப்பளவு மட்டுமே கொண்ட சிறிய மாநிலமான சிக்கிமில் வருடம் முழுவதும் சீரான பனிப்பொ ழிவும், மிதமான வானிலையும் நிலவுகிறது.

ஏறத்தாழ 28 மலைச் சிகரங்களும், 227 அதிக ஆழமான ஏரிகளும், 80 பனி மலைகளும் சிக்கிமில் இருக்கின்றன.

மேலும் தனிச்சிறப்பாக சிக்கிமில் 100 நதிகளும், சில சிறிய நதிகளும், வெந்நீர் ஊற்றுகளும் அமைந் துள்ளன.

பார்க்க வேண்டிய இடங்கள்

தீஸ்தா நதி

ஆசையாக சவாரி செய்வதற்கு ஏற்ற நதி தான் தீஸ்தா நதி. இவை சிக்கிம் மாநிலத்தில் உள்ள நீளமான நதியாகும்.

இந்த நதியை கடந்து செல்லும் போது அழகிய வெப்பமண்டல இலையுதிர் மரங்களையும், அல்ஃபைன் தாவரங் களையும் பார்க்கலாம்.

சீறிப்பாய்ந்து செல்லும் இந்த நதி வங்கதேசத்தில் உள்ள பிரம்மபுத்திரா ஆற்றுடன் கலக்கிறது, இங்கு சுற்றுலா செல்பவர்கள் கண்டிப்பாக குளிர்ச்சி யான தீஸ்தா நதியில் படகு சவாரி செய்யாமல் இருக்க மாட்டார்கள்.

ரும்டெக் மடம்

சிக்கிம்மின் தலைநகரான கேங்டாக் அருகே ரும்டெக் மடம் அமைந் துள்ளது. அதிகளவில் புத்தர்கள் வசிக்கும் இந்த மடம் தர்மசக்ரா மையம் என்றும் அழைக்கப் படுகிறது.

இந்த மடத்தில் புத்தர்களின் மகாகுரு என்றழை க்கப்படும் Padmasambhava என்பவர், போதனைகளை ஆற்றி வருகிறார்.

கடுமை யான தியானத்தை மேற்கொண்டு வரும் இவரது உடல் வஜ்ரமாக மாறியுள்ளது, புத்தரின் ஆயிரம் விளக்குகள் தொடர்பான கோட் பாடுகளை பரப்பி வருகிறார்.

அங்கு வசிக்கும் புத்தர்க ளுக்கு இவரது வாக்கு வேதவாக்காக உள்ளது, சிக்கிம் சுற்றுலா செல்லும் பயணிகள் இந்த மடத்திற்கு சென்றால் இவரது போதனை களை கேட்கலாம்.

வெந்நீர் ஊற்றுக்கள்

சிக்கிம்மில் அமைந்துள்ள வெந்நீர் ஊற்றுகள் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்கின்றன.


அங்குள்ள வெந்நீர் ஊற்றுகளில் Yumthang வெந்நீர் ஊற்று அனைவரும் அறிந்ததே. இங்கு செல்பவர்கள் குளிப்பதற் காக இரண்டு குளங்கள் அமைந் துள்ளன.

இந்த குளங்களில் உள்ள தண்ணீர் குளிப்பதற்கு கொஞ்சம் இதமான சூடாக இருக்கும், மேலும் இவ்வெந்நீர் ஊற்றுகளில் கந்தகத்தின் அளவு அதிகமாக உள்ளது. எனவே இந்த ஊற்றுகள் மருத்துவ குணங்கள் கொண்டவை யாக கருதப்ப டுகின்றன.

மேலும் இவ்வெந்நீர் ஊற்றுக்களின் சராசரி வெப்ப நிலையானது, 50°C வரை இருக்கும்.

மற்றுமொரு Reshi நீருற்று ராங்கித் ஆற்றின் அருகில் அமைந்துள்ளது, இதில் சல்பர் குறைவாக இருப்பதால் தோல் நோய் களுக்கு மருந்தாக அமைகிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வசதியாக குடிசைகள் அமைக்க ப்பட்டுள்ளன.

கஞ்சன்ஜங்கா சிகரம்

இமாலய மலைத் தொடர்களில் அமைந்துள்ள மிகப்பெரிய மலை தான் கஞ்சன் ஜங்கா. திபெத்துக்கு தெற்கு பகுதியிலும், நேபாளத்துக்கு கிழக்கு பகுதியிலும் அமைந்துள்ளது.

கடல் மட்டத்தி லிருந்து 8586 மீற்றர் உயரமுள்ள இந்த சிகரம் தான் 1852-ஆம் ஆண்டு வரை உலகின் மிக உயரமான சிகரமாக கருதப்பட்டு வந்தது. பின்னர் நடந்த கணக்கெடுப் புகளில் எவரெஸ்ட் சிகரமே உயர்ந்தது என்றும் இது மூன்றாவது உயரமானது என்றும் முடிவு செய்யப் பட்டது.

கஞ்சன் ஜங்கா என்றால் பனியின் ஐந்து புதையல்கள் என்று அர்த்தம். அதாவது இதில் பனி படர்ந்த ஐந்து முகடுகள் உள்ளன. இதில் 4 முகடுகள் 8400 மீற்றரு க்கு மேல் உயரமானவை.

இந்த சிகரத்தில் இருந்து பார்த்தால் பனிப டர்ந்துள்ள டார்ஜிலிங்க மலையின் அழகை ரசிக்கலாம்.

பனிசூழ்ந்து காணப்படும் இந்த சிகரம், பார்ப்பதற்கு வானத்தில் ஒரு சுவர் தொங்கி கொண்டி ருப்பது போன்று காட்சியளிக்கும்.

இந்தியாவின் வழியாக இந்த சிகரத்திற்கு செல்வதற்கு அனுமதிகள் அதிகமாக வழங்கப்படு வதில்லை. ஆனால் நேபாள் வழியாக சென்றால் விரைவில் இந்த சிகரத்தை அடைந்து விடலாம்.

உலகத்தின் 3வது உயரமான சிகரமாக இருந்தாலும், மலை ஏறுபவர்கள் மத்தியில் இன்றளவும் பிரபலம் அடைய வில்லை, குறைந்த அளவு நபர்களே இந்த சிகரத்தில் ஏறி சாதனை படைத் துள்ளனர்.
சிக்கிம் மாநிலம்


பல ஆண்டு காலமாக இந்த சிகரத்தில் ஒரு மர்மம் நிலவி வருகிறது, கஞ்சன் துங்கா பகுதியில் ஓரு அரக்கன் இருப்பதாகவும், அது பார்ப்பதற்கு ஒரு விகாரமான பனி அரக்கன் போன்று இருப்பதாக தகவல்கள் தெரிவிக் கின்றன.

1925ம் ஆண்டு ஒரு பிரித்தானியா குழு அங்கு சென்ற போது, வித்தியாச மான இரு கால் தடங்களை பார்த்து ள்ளார்கள்.

இது தொடர்பாக, அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் கஞ்சன் துங்கா அரக்கன் என்று கூறியுள்ளனர், ஆனால் இது உண்மையா? அல்லது மக்களின் கட்டுக் கதையா? என்பது குறித்து இன்று வரை புரியாத புதிராக உள்ளது.

COMMENTS

.ME
Copyright © 2020 www.ethanthi.com. All rights reserved
close