நம்மை மிகவும் சோம்பேறியாக மாற்றும் உணவுகள் !

உங்களுக்கு பகலில் மிகவும் சோம்பேறித் தனமாக உள்ளதா? அலுவலகத்தில் வேலையே செய்ய முடிய வில்லையா? ஓரே தூக்கம் தூக்கமாக வருகிறதா? 
நம்மை மிகவும் சோம்பேறியாக மாற்றும் உணவுகள் !
அப்படியெனில் அதற்கான காரணம் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். பொதுவாக சோம்பேறித் தனமானது பல்வேறு காரணங்களால் ஏற்படும். 

அதில் ஒரு குறிப்பிட்ட உணவுகள், பழக்க வழக்கங்கள் மற்றும் குறிப்பிட்ட மருந்துகள் குறிப்பிடத் தக்கவை. 
மேலும் சோம்பேறித்தனம் அதிகம் இருந்தால், நம் மீது நமக்கே ஒருவித வெறுப்பு ஏற்படும். எனவே இவைகளில் சரியாக கவனம் செலுத்தினால், வேலை நேரத்தில் சோம்பேறித் தனமாக இருப்பதைத் தவிர்க்கலாம்.  

சரி, இப்போது நமக்கு சோம்பேறித்தனத்தை ஏற்படுத்தும் உணவுகள் என்ன வென்று பார்த்து, அவற்றை பகலில் அதிகம் உட்கொள் வதைத் தவிர்க் கலாம்.

எடையைக் குறைக்கிறேன் என்ற பெயரில் சிலர் சாலட்டை உணவாக எடுத்து வருவார்கள். சாலட் சாப்பிடுவது உடலுக்கு நல்லது தான்.

ஆனால் சாலட்டை சாப்பிடுவதால், ஒரு நாளுக்கு உடலுக்கு வேண்டிய ஆற்றல் போது மானதாக இல்லாமல் இருப்பதோடு, ஆற்றலி ன்மையால் சோம்பேறித் தனமாக இருக்கும்.

பால் பொருட்களை அதிகம் எடுத்து வந்தாலும், சோம்பேறித் தனமாக இருக்கும். இதற்கு காரணம் பால் பொருட்களில் உள்ள புரோட்டீன் செரிமான மாவதற்கு தாமதமாவது தான்.
வாழைப் பழத்தில் உள்ள மக்னீசியம், தசைகளை தளர்வடையச் செய்யும். அதனால் தான் இரவில் படுக்கும் முன் ஒரு வழைப்பழத்தை சாப்பிட சொல் கிறார்கள். 

மேலும் வாழைப்பழம் சாப்பிடுவதால் தான், தசைகள் தளர்ந்து, இரவில் நல்ல தூக்கத்தைப் பெற முடிகிறது. வெள்ளை பிட்டில் கார்போ ஹைட்ரேட் மற்றும் கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகமாக உள்ளது. 

வடுமாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி?

இந்த உணவுகளை உண்பதால் நீண்ட நேரம் வயிறு நிறைந் திருப்பதோடு, சிறிது நேரம் கழித்து சோம்பேறித் தனமாகவும் இருக்கும்.

இறைச்சியில் உள்ள அதிகப்படியான கொழுப்பு கரைவதற்கு அதிக ஆற்றல் தேவைப்படுவதால் தான், அசைவ உணவை நன்கு சாப்பிட்ட பின்னர் சோம்பேறி யாகிவிடு வதோடு, நல்ல தூக்கமும் வருகிறது.

செர்ரிப் பழங்களில் உள்ள மெலடோனின், தூக்கத்தை தூண்டுபவை. இப்பழத்தில் இரவில் சாப்பிட்டால், நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம். அதுவே பகலில் என்றால் சோம்பேறியாக இருக்க க்கூடும்.
சில இனிப்பான உணவுப் பொருட்களை உட்கொள்ளும் போது நன்றாக இருக்கும். ஆனால் அதை சாப்பிட்ட ஒரு மணிநேரத் திற்குப் பின் நன்கு தூக்கம் வருவதை உணரக் கூடும்.

சில்லுன்னு ப்ரைட் ஐஸ்கிரீம் செய்வது எப்படி?

அமில உணவுகளை அதிக அளவில் முந்தைய நாள் இரவில் உட்கொண்டால், மறுநாள் முழுவதும் சோம்பேறித்த னமாகவும், மந்தமாகவும் இருக்கக் கூடும்.
Tags: