நம்முடைய உணவே மருந்து தெரியுமா?

உணவே மருந்து என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் மருந்தையே உணவாகக் கொள்ளும்  பொழுது அது நம் உடலுக்கு எத்தனை நன்மையை கொடுக்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு தகவலாகும்.
நம்முடைய உணவே மருந்து தெரியுமா?
கொட்டும் மழையில் அம்மாவின் கையால் சுடச்சுட நல்லெண்ணையும்,  நெய்யும் கலந்து ஊற்றி பிசைந்து கொடுக்கப்பட்ட முத்து வற்றல் குழம்பு  சாதமும், சுட்ட அப்பளமும் சாப்பிட்டவர் களுக்கு  தெரியும் மருந்து எப்படி உணவாகும் என்று.

மருந்தாக விளங்கும் கீரைகளை, காய்கறிகளை என்று சொல்லப்படும் சிறு தானியங் களை நாம் சாப்பிட வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் எல்லோரிடமும் இருக்கிறது. 
நிலக்கடலை இத்தனை நோய்களிலிருந்து பாதுகாக்கிறதா?
ஆனால் அவற்றை எப்படிச்  சாப்பிட வேண்டும், எந்த முறையில் சாப்பிடவேண்டும், எப்படி சமைத்து சாப்பிட வேண்டும் என்பதற்கெல்லாம் ஒரு வரை முறை இருக்கிறது. 

உணவாகச்  சாப்பிடும் பொழுது 4 இட்லிக்கு பதில் நன்றாக இருந்தால் 5 அல்லது ஆறு இட்லி கூட  சாப்பிடலாம். ஆனால் மருந்தே உணவாகும் பொழுது அங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது சமைக்கும் முறையும்  சாப்பிடும் அளவும்தான். 

அந்த வகையில் நம் வாசகர்களுக்காக பல செய்முறைகளை இந்த தொடரின் மூலம் சொல்ல இருக்கிறோம். அவற்றை செய்து சாப்பிட்டு உடல், மனநல வளமோடு வாழ வாழ்த்துகிறோம். 

சித்த மருத்துவத்தில் இல்லாத சிகிச்சை முறைகள் என்று எதுவும் இல்லை, ராமாயண, மகாபாரத காலம் தொட்டு முகலாயர்கள் படையெடுத்து வந்த காலம் வரை, ஆங்கிலேயரின் அடக்கு முறை என்றெல்லாம் பார்த்தால் கூட போர்க்கால ரணங்களும், அம்புகளும்,

தைத்து உடல் புண்ணாக வில்லையா என்ன? போரில் பெற்ற விழுப்புண்களை ஆற்றியது. துப்பாக்கியின் குண்டடி பட்ட வீரர்களை காப்பாற்றியதும் இந்த சித்த, ஆயுர்வேத மருந்துகள் தானே.

என்ன ஒரு வித்தியாசம் என்றால் ஆங்கில மருத்துவம் மறைத்து வைக்கப்படவில்லை. 
இதுதான் நோய் அதை இப்படித் தான் குணப்படுத்த வேண்டும் என்ற சிகிச்சை முறை எழுத்து வடிவத்தில் கொண்டு வரப்பட்டது. அதை ஒரு பாடமாகவே பயிற்றுவிக்கக் கல்லூரிகள் பல அமைக்கப்பட்டன.
விரும்புகிற வகையில் எலும்பு, நரம்பு, தசை, கண், காது, மூக்கு தொண்டை என்று பகுதிவாரியாக பிரிக்கப்பட்டு அவற்றில் வரும் நோய்களும் அதற்கான சிகிச்சை முறைகளும் சிறப்பான முறையில் சொல்லிக் கொடுக்கப்பட்டது.

ஆனால் பெருமளவில் ஆங்கில மருந்துகளின் தயாரிப்பில் நம் நாட்டு மூலிகைகள், பச்சிலைகள், வேர்கள் என்றுதான் உபயோகப்படுத்தப் படுகின்றன  என்பது நமக்கு தெரிந்தது தான்.  

ஆங்கில மருத்துவம் மறைத்து வைக்காமல் அனைவருக்கும் கற்றுக் கொடுக்கப் பட்டதாலும் எழுத்து வடிவத்தில் ஆவணப் படுத்தப் பட்டதாலும் நன்கு வளர்ந்தது, செழித்தது.

ஒருவருக்கும் சொல்லிக் கொடுக்கப்படாமல் குடும்ப ரகசியமாகப் பொத்தி வைக்கப் பட்டதால், சித்த ஆயுர் வேத முறைகள் காலப்போக்கில் அழியத் தொடங்கிது. ஆனால் தரமான எதுவும் மறையலாமே தவிர அழியாது. 

எனவே மீண்டும் சித்த ஆயுர்வேத முறைகள் துளிர்க்கத் தொடங்கின.  துளிர் விட்ட நம் இயற்கை வைத்தியமுறையை நாம்  வளர்க்க வேண்டிய கடமை, உரிமை என்ற இரண்டையும் புரிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் செயல்பட வேண்டும்.

இயற்கையோடு இணைந்த ஆரோக்கிய  வாழ்வு வாழ அனைவரையும் அழைக்கின்றோம்.

1. முதலில் மணித்தக்காளி கீரையைப் பற்றி பார்ப்போம்:

மணிதக்காளி என்பது மணத்தக்காளி என்றும் சொல்லப்படுகிறது. இதன் இலை, காய் இரண்டுமே மருந்தாகப் பயன் படுகிறது.

சாப்பிடும் முறை

நம்முடைய உணவே மருந்து தெரியுமா?
மேற்கூறிய பக்குவங்களில் ஏதாவது ஒன்றினை வாரம் ஒருமுறை சாப்பிடலாம்.
பலன்:  

மணத்தக்காளி இயற்கை நமக்குக் கொடுத்த வரம், இதை சாப்பிடுவதால் வயிற்றுப் புண் வாயில் ஏற்படும் குழிப்புண் ஆகியவை வருவது தடுக்கப்படும்.

புண் வந்த பிறகு எனில்,  மணத்தக்காளி இலை 10 பறித்து நன்கு கழுவி விட்டு வெறும் வயிற்றில், வாயில் போட்டு மென்று சாறை மட்டும் முழுங்கி இலைச் சக்கையை துப்பி விட வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து மூன்று நாள் செய்ய வாய்ப்புண் குணமாகும்.
Tags: