முந்திரி பழம் அளிக்கும் மருத்துவ நன்மைகள் !





முந்திரி பழம் அளிக்கும் மருத்துவ நன்மைகள் !

Anonymous
By -
முந்திரிப் பழத்தில் புரோட்டீன், பீட்டா-கரோட்டீன், டானின் என்ற ஆண்டி-ஆக்ஸிடண்ட், நார்ச்சத்துக்கள் போன்றவை வளமாக நிறைந்துள்ளது. ஆரஞ்சு பழத்தை விட 5 மடங்கு அதிகமான சத்துக்கள் ஒரு முந்திரி பழத்தில் உள்ளது. 
முந்திரி பழம் அளிக்கும் மருத்துவ நன்மைகள் !
இதில் நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தத்தினால் கஷ்டப்படுபவர்கள், முந்திரிப் பழத்தை சாப்பிட்டு வந்தால், அதனை குணமாக்கலாம்.

முந்திரி பருப்புகளை விரும்பி சாப்பிடும் அளவுக்கு முந்திரி பழங்களை பயன்படுத்துவது குறைவு. ஏனெனில் பழத்தில் உள்ள டானின் எனும் வேதிப்பொருளே காரணம். 

இதனால் பழம் சாப்பிடும் போது தொண்டையில் கரகரப்பு தன்மை ஏற்படுகிறது. இதனை போக்க பழத்தை நீராவியில் பத்து நிமிடம் வேக வைத்து அல்லது உப்புநீரில் ஊற வைத்து சாப்பிடலாம்.
மா, பலா, ஆரஞ்சு போன்று அதிக சத்துகள் நிறைந்தது முந்திரிபழம். முக்கியமாக வைட்டமின் சி ஆரஞ்சு பழத்தை விட, முந்திரிபழத்தில் ஐந்து மடங்கு அதிகமுள்ளது.
முந்திரி பழம் அளிக்கும் மருத்துவ நன்மைகள் !
வைட்டமின் சி மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றது. ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவு நோயை குணமாக்கு கின்றது. பற்கள், நகங்களை உறுதிப் படுத்துகின்றது.

ஸ்கர்வி என்ற வைட்டமின் சி குறைபாடு நோயை குணமாக்கு கின்றது. மேலும், கிருமி நாசினியாக செயல்பட்டு தொற்று வியாதிகளை குணமாக்க பயன்படுகின்றது. 
இவற்றில் புரதம், பீட்டோ கரோட்டின், நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன.மேலும், பழத்தில் டானின் உள்ளதால் ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆக செயல் படுகின்றது.
Tags: