வாஷ் பேஷன் தொட்டியில் கூடுதலாக ஒரு துளை இருக்க காரணம் என்ன?

0

கை கழுவுதல் கிருமிகள் மற்றும் நோய்கள் பரவாமல் தடுப்பதற்கான ஒரு அத்தியாவசியமான பழக்கம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இருப்பினும், குழந்தைகளுக்கு, கை கழுவுதல் என்பது நல்ல கழிப்பறை சுகாதாரத்தில் தொடங்குகிறது. 

வாஷ் பேஷன் தொட்டியில் கூடுதலாக ஒரு துளை இருக்க காரணம் என்ன?
கழிப்பறை சுகாதாரத்தின் மற்ற அம்சங்கள் கற்பிக்கப்பட வேண்டும், புறக்கணிக்கப் பட்டால், குழந்தைகளை ஆரோக்கிய மற்றவர்களாக மாற்றுவது மட்டுமல்லாமல், இந்த பழக்கம் பள்ளியிலும் சமூக சூழ்நிலைகளிலும் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.

நம் சமையல் அறையிலும் சரி, கழிவறையிலும் சரி, இரண்டிலும் ஒரே மாதிரியாகத் தான் கை கழுவுவதற்கான தொட்டிகள் அமைக்கப் படுகின்றன. 

மேலும் சமயலறை தொட்டியில் கூடுதலாக பாத்திரங்களையும் நாம் கழுவிக் கொள்கிறோம். பார்ப்பதற்கு ஒன்று போலவே காட்சியளிக்கும் இந்த தொட்டிகளில் சின்னதாக ஒரு வித்தியாசம் இருப்பதை நாம் கவனித்திருக்க வாய்ப்பில்லை.

அதாவது கழிவறையில் நாம் பயன்படுத்தும் தொட்டியின் மேல் பகுதியில் கூடுதலாக ஒரு துளை இருக்கும். அதுவே, சமையல் அறையில் காய்கறி அலசவும், 

பாத்திரங்களை சுத்தம் செய்யவும் நாம் பயன்படுத்துகின்ற தொட்டியில் அடிப்பக்கம் இருக்கின்ற துளைகள் தவிர்த்து மேல்புறமாக எந்தவொரு துளையும் இருக்காது.

ஆக, கழிவறை தொட்டியில் இந்த சிறிய துளை இருப்பது ஏன்? அதன் பயன்பாடு என்ன என்பதைத் தான் நாம் இப்போது பார்க்க இருக்கிறோம். 

நாம் கைகளை கழுவிக் கொண்டிருக்கும் போது அதிகப்படியான தண்ணீர் சேரும் பட்சத்தில், தொட்டி நிரம்பி வழியாமல் தடுக்கவும், கூடுதல் தண்ணீர் வடிந்து செல்லும் வகையிலும் தான் அந்த சின்ன துளை இருக்கிறது.

தண்ணீர் வடிந்து செல்ல அடிப்பகுதியில் அமைக்கப் பட்டிருக்கும் துளைகளில் காற்று அடைத்து நின்றாலும் கூட, மேலே உள்ள துளையின் வழியாக தண்ணீர் வடிந்து விடும். 

அதே போல குளியல் தொட்டியிலும் கூட இது போன்ற கூடுதல் துளை இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். பலர் குளிப்பதற்காக தொட்டியை நிரப்பும் பொருட்டு தண்ணீரை திறந்து வைத்து விட்டு செல்வார்கள்.

ஆனால், ஏதேதோ வேலை பிசியில் குளிப்பதற்கு தாமதமாகும் நிலையில், இங்கே குளியல் தொட்டியில் உள்ள பைப்பை நிறுத்தி வைக்க மறந்து விடுவார்கள். 

அத்தகைய சூழலில் தொட்டி முழுவதும் நிரம்பி விட்டால் அடுத்து தண்ணீர் வழிந்தோடி கழிவறை முழுவதுமாக நிரம்பி விடும். அதை தவிர்ப்பதற்காகத் தான் அந்த சிறிய துளை தொட்டியின் மேல் பகுதியில் இடம் பெறுகிறது.

சமையலறை தொட்டியில் கூடுதல் துளை இல்லாதது ஏன்?

சரி, கழிவறை தொட்டியிலும், குளியல் தொட்டியிலும் கூடுதல் தண்ணீர் வெளியாகும் வகையில் சிறிய துளை இருக்கிறது என்றால், அதே போன்ற துளை ஏன் சமையல் அறை தொட்டியில் இல்லை என்ற சந்தேகம் வருகிறதா? 

ஏனென்றால் நாம் சமையல் அறை தொட்டியில் கைகளை மட்டும் கழுவுவதில்லை. பாத்திரங்கள் கழுவுகிறோம். காய்கறிகள் அலசுகிறோம். 

அது போன்ற சமயங்களில் நம் கைகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் உணவுத் துணுக்குகள், பாத்திரங்களில் இருந்து வெளியேறும் உணவுக் கழிவுகள் போன்றவை அடிப்பகுதியில் உள்ள துளைகள் வழியாகத் தான் வெளியேறியாக வேண்டும்.

வாஷ் பேஷன் தொட்டியில் கூடுதலாக ஒரு துளை இருக்க காரணம் என்ன?

ஒரு வேளை உணவுத் துணுக்குகள் வெளியாகாமல் அடைத்து கொண்டால் தண்ணீர் நிரம்பி நிற்கும். பிறகு நாம் அதை நீக்கி தண்ணீரை வெளியேற்றுவோம். 

அதே சமயம், கீழ்பகுதி துளையில் உணவுத் துணுக்குகள் நிரந்தரமாக அடைத்து நிற்க வாய்ப்பு இல்லை. அதுவே மேல்பகுதி பக்கவாட்டில் கூடுதல் துளை இடம் பெற்றிருக்கும் பட்சத்தில், உணவு துணுக்குகள் அதிலும் கூட அடைபடக் கூடும்.

அவ்வாறான சூழல்களில் அதில் பாக்டீரியாக்கள் வளரக் கூடும். நாம் கழுவிக் கொண்டிருக்கும் பாத்திரங்களின் மீதும் கூட அந்த பாக்டீரியாக்கள் பரவக் கூடும். 

இது தெரியாமல் அதில் உணவு பொருட்களை வைத்து நாம் சாப்பிடும் போது நமக்கு உடல்நலன் பாதிக்க வாய்ப்பு உண்டு.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)