2000 ஆண்டு பழமையான கல்லறை கிரேக்க ஓவியங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது !

0

கல்லறைகள் என்பது வெறும் மனிதர்கள் இறந்த பின்னர் அவர்களை புதைத்து வைக்கும் இடம் மட்டும் அல்ல. அந்தந்த காலத்தின் அடையாளங்களையும் இந்த கல்லறைகள் தாங்கி நிற்கிறது. 

2000 ஆண்டு பழமையான கல்லறை.. கிரேக்க ஓவியங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது !
இப்போது கூட அதிகமாக மனிதர்களோடு அவர்களது பொருட்களை புதைக்கும் வழக்கம் இல்லை. 

ஆனால் முன்னர் இருந்த காலத்தில் எல்லாம் உலகின் பெரும்பாலான பகுதிகளில் மனிதர்களோடு அவர்களுக்குத் தேவையான, அவர்கள் பயன்படுத்திய அனைத்து பொருட்களையும் புதைக்கும் வழக்கம் இருந்தது.

இது பின்னர் வரும் சந்ததியினருக்கு அவர்களது வாழ்க்கை முறையை வெளிச்சம் போட்டுக் காட்டும். பெரும்பாலான நாகரிகங்கள் எப்படி இருந்தன என்பதையே இந்த கல்லறைகள் தான் வெளிப்படுத்தி வருகின்றன. 

அப்படி இத்தாலியில் ஒரு கல்லறை கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அது 2000 ஆண்டுகளுக்கு முன்னர் அந்த நகரத்தின் வாழ்வியலை வெளிப்படுத்தி யுள்ளது.

ஆங்கிலத்தில் சரளமாக பேசும் பிச்சைக்காரர் - ஒரே இரவில் பேமஸ் !

செர்பரஸின் கல்லறை என்று அழைக்கப்படும் அதில் பண்டைய கிரேக்க புராணங்களின் மூன்று தலை நாயான செர்பரஸ் சுவர் ஓவியம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. 

தரையில் புதைந்துள்ள இந்த அறை நேபிள்ஸின் புறநகர்ப் பகுதியான ஜியுக்லியானோவில் கண்டு பிடிக்கப்பட்டது, தொல்லியல் துறையினர் ஒரு வயலில் ஆய்வு செய்த போது இந்த இடத்தை கண்டுபிடித்தனராம்.

2000 ஆண்டு பழமையான கல்லறை கிரேக்க ஓவியங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது !

டெய்லிமெயில் அறிக்கையின்படி, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே இந்த பகுதியில் ஏராளமான புதைக்கப்பட்ட இடங்களைக் கண்டறிந்துள்ளனர், 

அதில் கிமு 510-31 ஐச் சேர்ந்த ரோமானிய குடியரசு சகாப்தம்  முதல் கிமு 31 - கிபி 476 வரையான ரோமானிய ஏகாதிபத்திய காலம் வரையான இடங்கள்  உள்ளன.

அப்படி தற்போது  கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த கல்லறையின் மேற்கூரை மற்றும் சுவர்களில் பல சுவர் ஓவியங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன, அதில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. 

ஏன் ஒரு பக்கமா தலை வலிக்குது தெரியுமா? இந்த நோயே காரணம் !

பாதாள உலகத்தின் வாயில்களை காத்ததாக கிரேக்க இலக்கியங்கள் குறிப்பிடும்  செர்பரஸ் என்ற மூன்று தலை நாயின் சுவர் ஓவியம், அதனால் தான் இது செர்பரஸின் கல்லறை என்று அழைக்கப் படுகிறது. 

செர்பரஸ் நாயின் சுவர் ஓவியம் தவிர, கிரேக்க இலக்கியத்தில் குறிப்பிடப்படும் ஹெர்குலிஸ் எனும்  இறைவனது உருவமும் காணப்படுகிறது. செர்பரஸின் நாயைப் பிடிக்க மெர்குரியின்  கட்டளையின் பேரில் பாதாள உலகில் இறங்கினார். 

2000 ஆண்டு பழமையான கல்லறை கிரேக்க ஓவியங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது !

மனிதனின் தலை, குதிரையின் முன் கால்கள் மற்றும் மீனின் வால் ஆகியவற்றைக் கொண்ட ஒரு வகை கடல் கடவுள் ஓவியங்கழும் கண்டுபிடுக்கப் பட்டுள்ளன.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஓபஸ் இன்செர்டம் எனப்படும் பண்டைய ரோமானிய கட்டுமான நுட்பத்தைப் பயன்படுத்தி கட்டப்பட்ட சுவரைக் கண்டுபிடித்த போது இந்த புதைகுழியைக் கண்டுபிடித்தனர். 

அரசு முத்திரையை யார்? எந்த வண்ணத்தில் பயன்படுத்தலாம்?

அகழ்வாராய்ச்சியின் போது ​தான் உள்ளே  இந்த கல்லறை, அதில் உள்ள ஓவியங்கள் எல்லாம்  வெளிச்சத்திற்கு வந்தது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings